தீஷு பிறந்தவுடன் எடுத்த லீவை கிட்டத்தட்ட 2.5 வருடங்கள் நீடித்துவிட்டேன். அதன் பின் வேலைக்குப் போக மாட்டேன் என்று கடந்த டிசெம்பரில் ரிஸேன் செய்து விட்டேன். தீஷு பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் மீண்டும் வேலையில் சேரும் ஆர்வம் ஏற்பட்டது.
திருமணத்திற்கு முன்பு பெங்களூரில் செய்த வேலையை, என் கணவர் யூஸ்ஸில் இருந்ததால் திருமணத்திற்கு பிறகு அங்கு தொடர்ந்தேன். திருமணத்திற்கு முன் ஹாஸ்டல் திரும்ப இரவு 8 மணி ஆகி விடும். அப்பொழுது குழந்தை கவனிப்பு, சமைத்தல் போன்ற வேலைகள் இல்லாததால் பெரிய சுமையாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது சீக்கிரம் வீடு வர வேண்டும் என்பது என் எண்ணம். தீஷுவோடு மாலை இல்லையென்றாலும் இரவாவது நேரம் செலவிட வேண்டும்.
முதலில் வீட்டிலிருந்து வேலை செய்ய எண்ணினேன். ஆனால் அது இந்த ரிஸஸனில் சாத்தியமில்லை என்று தெரிந்தது. யூஸ் பிராஜெக்ட் என்றால் திரும்ப நேரமாவதால் யூகே பிராஜெக்ட் கேட்டேன். என் பழைய கம்பெனியும் யூகே பிராஜெட்டில் அலகேட் செய்து ஆஃபரும் கொடுத்து விட்டனர். ஆஃபரைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியை விட பயம் தான் வந்தது. தீஷு எப்படி எதிர்கொள்வாள்?
தீஷுவை மதியம் 1:30 முதல் மாலை நான் திரும்பும் வரை பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும். கடந்த வாரம் இருவரைப் பார்த்து, ஒருவரைத் தேர்வும் செய்துவிட்டேன். நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அடிக்கடி லீவு போடுவார் என்று தெரிந்தவுடன், என்ன செய்வது என்று தெரியவில்லை. என் அத்தை சிறிது நாட்கள் வந்து தங்குவார்கள். அதுவரை பிரச்சினை இல்லை. அதன் பின் ஊரிலிருந்து யாராவது வேலைக்கு வர சம்மதித்தால் அழைத்து வரும் எண்ணமும் உள்ளது. அது வரை இந்த ஏற்பாடு.
தீஷுவைப் பார்த்தால் ஒரு மாதிரியாக (பயமா, பாவமா என்று தெரியவில்லை) இருக்கிறது. அவள் பள்ளி செல்லும் முன் எப்படி போவாளோ என்று பயந்தது உண்டு. ஆனால் அவள் பழகிக் கொண்டாள். நான் விட்டு செல்வதை எப்படி எடுத்துக் கொள்வளோ என்று பயமாக இருக்கிறது. அவளிடம் நான் ஆபிஸ் போனவுடன் ஒரு ஆன்ட்டி பார்த்துக் கொள்வார் என்று சொன்னேன். அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் புரியும் பொழுது என்ன செய்யப் போகிறாள் என்று தெரியவில்லை.
தீஷுவிற்கு ஐந்து வயதானப்பின் சேரலாம் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய பிரேக் மிகுதி ஆகிவிடும் என்பதால் சேர முடிவு செய்துவிட்டேன். முடிவு சரியானதா என்று எனக்கு இன்னும் புரியவில்லை. சரியானது இல்லை என்று தெரிந்தவுடன் வேலையை மீண்டும் விடும் எண்ணம் உள்ளது. வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கயிருக்கும் எங்களுடைய இந்தப் புது பயணம் நல்ல படியாக செல்ல வேண்டுமே என்று பயமாக இருக்கிறது. எவ்வாறு செல்கிறது என்பதனைத் தெரிவிக்கிறேன்.
Games to play with 3 year old without anything
2 years ago
Congrats!!. Inital days will be tough. Then it will alright. Kids are good with changes than adults.
ReplyDeleteGood luck!!
..Ag
all the best on new assignment.!
ReplyDeletetough time to manage time! Hope kutty will adjust fast..
VS Balajee
F/o Nisha and Ananya
(had read most of your blogs and enjoyed.. Keep writing more...)
All the very best! :)))
ReplyDeleteநன்றி அகிலா..
ReplyDeleteநன்றி பாலாஜி
வாழ்த்துக்கள்..!!!!!!!
ReplyDeleteungal pudhu payanathirkku enathu manamaarndha vaalthukkal. mudhalil kadinamaaha theriyum konjam samaalithuvittaal alagaaha manage seyyalam.
ReplyDeleteநன்றி ஆகாய நதி
ReplyDeleteநன்றி செந்தழல் ரவி
நன்றி அமுதா..
வாழ்த்துகள்..உங்கள் பயணத்திற்கு!
ReplyDeleteதீஷூ கண்டிப்பாக புரிந்துக் கொள்ளுவார்! :-) நமக்கே ஆச்சரியமாக இருக்கும் அவர்கள் அட்ஜஸ்ட் ஆகிக் கொள்வது!!
பள்ளி யில் இருந்து வரும் பெண்ணை வரவேற்க நீங்கள் இருக்க வேண்டாமா ? பள்ளியில் சரியாக சாப்பிட்டதா ? இல்லையா ? என்ற கவலை உங்களுக்கும், உங்கள் வேலையை பாதிக்கும். 5 வயதுக்கு பின்பே , நீங்கள் வேலைக்கு சென்று இருக்கலாம்.
ReplyDelete//
ReplyDeleteதீஷூ கண்டிப்பாக புரிந்துக் கொள்ளுவார்! :-) நமக்கே ஆச்சரியமாக இருக்கும் அவர்கள் அட்ஜஸ்ட் ஆகிக் கொள்வது!!//
இந்த வயதிலேயே வாழ்கையில் adjust செய்துதான் தீர வேண்டுமா ?
நன்றி முல்லை. தீஷு புரிந்து கொள்வாள் என்று நானும் நம்புகிறேன்.
ReplyDeleteநன்றி சுந்தர் உங்கள் கருத்துக்கு. இந்த வயதில் அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை தான். ஆனால் முயற்சியே செய்யாமல் ஏன் அவள் கஷ்டப்படுவாள் என்று எண்ண வேண்டும் என்பது என் எண்ணம். தீஷு கஷ்டப்பட்டால் எப்பொழுதும் விட்டுவிடும் எண்ணம் உள்ளது.
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
//
ReplyDeleteபள்ளி யில் இருந்து வரும் பெண்ணை வரவேற்க நீங்கள் இருக்க வேண்டாமா ? பள்ளியில் சரியாக சாப்பிட்டதா ? இல்லையா ? என்ற கவலை உங்களுக்கும், உங்கள் வேலையை பாதிக்கும். 5 வயதுக்கு பின்பே , நீங்கள் வேலைக்கு சென்று இருக்கலாம்.
//
இது எனக்கும் நல்ல முடிவாகத் தோன்றுகிறது...
//
ReplyDeleteபள்ளி யில் இருந்து வரும் பெண்ணை வரவேற்க நீங்கள் இருக்க வேண்டாமா ? பள்ளியில் சரியாக சாப்பிட்டதா ? இல்லையா ? என்ற கவலை உங்களுக்கும், உங்கள் வேலையை பாதிக்கும். 5 வயதுக்கு பின்பே , நீங்கள் வேலைக்கு சென்று இருக்கலாம்.
//
இது எனக்கும் நல்ல முடிவாகத் தோன்றுகிறது...
வாழ்த்துகள் புதிய பயணத்திற்கு.
ReplyDeleteஎன்னை அமித்து எதிர்கொண்டு வா என்று சொல்வதைப்போல, தீஷு உங்களை வரவேற்பாள், கவலைப்படாமல் உங்கள் பயணத்தை துவங்குங்கள்.
All the best, Deekshu Amma. UK project-na, kandippa unglal manage panna mudiyum.
ReplyDelete