Friday, June 7, 2013

பல்பு வாங்கிய (கவர்ந்த) தருணங்கள்

முன்பு கவர்ந்த தருணங்கள் என்று தலைப்பிட்டு தீஷு என்னைக் கவர்ந்த தருணங்களைப் பதிவு செய்தேன். இப்பொழுதும் அவள் அடிக்கடி என்னைக் கவரத் தவறுவதில்லை. ஆனால் ஏனோ இப்பொழுது பதிவு செய்வதில்லை. நேற்று இரவு அரை மணி நேரத்தில் இரண்டு நிகழ்வுகளில் அவளிடம் பேச்சற்று போனேன். (வெட்கமின்றி) பதிகிறேன்.

1. தீஷு தூங்குவதற்கு ரெடியாகிக் கொண்டிருந்தாள். நாங்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தோம். நான் என் கணவரிடம், சமிக்குட்டியை 24 hours வும் தூக்கிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கு என்றேன்.

தீஷுவிடமிருந்து, "ஏன், பொய் சொல்லுறீங்க?" என்ற கேள்வி.

என்ன தப்பா சொன்னோம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, "நைட் அவ தூங்கறப்ப எங்க தூக்குறீங்க"? ஸோ, 12 hours தூக்குறீங்க" என்றாள்.

"அவ முழிச்சியிருக்கிறப்ப எல்லாம் தூக்கிட்டு இருக்கனும்" என்றேன்.

"அப்படி சொல்லுங்கள், ஏன் 24 hours னு பொய் சொல்லுறீங்க!! என்றாள்.

இப்பவும் அப்படி என்ன தப்பா சொன்னோமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..




2. தீஷுவிற்கு கதை சொல்லி படுக்க வைத்தாகி விட்டது. தன் தங்கையிடம் முத்தம் வேண்டும் என்றாள். அவளும் ஒரு கன்னத்தில்  நக்கி விட்டாள் (முத்தமிட்டாள்) . தீஷு மறு கன்னத்தைக் காட்டினாள். தங்கை, நக்கியும் அன்பு மிகுந்து கடித்தும் விட்டாள்.

"I do not know how she is going to kiss in her marriage"  என்றாள்.

புரிவதற்கு ஒரு விநாடி எடுத்தது. மூளைக்கு அதிகமாக இரத்ததை ஏற்றி யோசிக்கச் செய்தேன்.

அவளேத் தொடர்ந்தாள்,"I believe she gets better then" என்றாள்.

பேச்சை நிறுத்து, தொடர வேண்டாம் என்று என் மூளை கட்டளையிட, "அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு, அப்ப பாப்போம்" என்றேன்.

சொன்னது சரியா அல்லது தப்பா என்று இப்பொழுதும் தெரியவில்லை.
 
 

21 comments:

  1. பல்புகள் சிரிக்கமட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கின்றன.. தாய் எட்டடி பாய்ந்தாள் குழந்தை 16 அடிபாய்கிறதே....
    ஸ்மார்ட்டான குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் அவர்களை வளர்க்கும் அம்மாவிற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத்தமிழன்.இக்கால குழந்தைகள் அனைவரும் பதினாறு அடி பாய்கிறார்கள்..

      Delete
  2. தீக்ஷு எப்பொழுதுமே கவருவாள் என்பது எனக்குத் தெரியும்..ஆனாலும் இரண்டாவதைப் படித்து என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை :)
    நீ சொன்ன பதிலும் சரிதான் தோழி!
    என் மகன் கேட்டது நினைவு வருகிறது.."I லவ் யு" என்று சொன்னேன், அவனுக்கு 5 வயது இருக்கும்பொழுது. "அப்ப wait பண்ணியிருக்கலாம்ல, எதுக்கு அப்பாவ கல்யாணம் பண்ண?" ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. கிரேஸ், என்னோட பல்புவோட உன்னோடது பிரகாசமா இருக்கே..குட்டியின் பதிலை மிகவும் ரசித்தேன்.. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்..

      Delete
  3. எதற்கும் நாம் தான் சிறிது கவனமாக இருக்க வேண்டும் போல...!@!

    தீஷு அவர்கள் எங்களையும் எப்போதே கவர்ந்து விட்டார்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்.. உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகுந்த நன்றிகள்!!

      Delete
  4. சூப்பர். அதும் ரெண்டாவது பல்பு செம :)

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி லக்ஷ்மி..

      Delete
  5. பிள்ளைங்க இப்போல்லாம் பிரில்லியண்ட் ஆகிட்டு இருக்காங்க இல்லையா...!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மனோ..சமாளிப்பது ரொம்ப கஷ்டம்

      Delete
  6. நீங்கள் சொன்னது சரியே:)! கிரேஸ் மகனும் கலக்குகிறார்:).

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.. கிரேஸ் பல்பு மிகவும் பிரகாசம்.. :‍))

      Delete
  7. பிரகாசமான பல்பு! :-))
    யாருக்கிட்டே?ம்ம்ம்..இனிமேலாஜிக் இல்லாம பேசுவீங்களா? :;-)
    ரெண்டாவதுக்கும் நானும் ஜெர்க்காகிட்டேன்....அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  8. இனிமே லாஜிக் இல்லாம பேச மாட்டேன்.. பேச மாட்டேன்..ஆனா இதுக்கே அசந்தா எப்படி? இன்னும் நம்ம பாக்க வேண்டியது நிறைய இருக்கு முல்லை..:-))

    ReplyDelete
  9. குழந்தையின் கேள்விகள்..... பதில் சொல்ல முடியாது திணற வைக்கும்.... எனக்கும் இது போன்று பல்பு வாங்கிய தருணங்கள் உண்டு! :)))

    இரண்டாவது - நல்ல பல்பு! :))))

    ReplyDelete
    Replies
    1. ஓ, நீங்களும் அப்ப சங்கத்துல இணைந்துவிடுங்கள் :-)).. நன்றி வெங்கட்..

      Delete
  10. இக்கால பிள்ளைகளின் அறிவும் திறனும் அபரிவிதமானவை, சமயத்தில் நம்மையே முட்டாள்களாக்கியும் விடுகின்றன. குழந்தைகள் என்றுமே க்யுட்டானவர் தான்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி நிரஞ்சன் தம்பி!!

      Delete
  11. இரண்டாவது பல்பு ரொம்பவே பிரகாசமாக ஒளிர்கிறது..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost