Wednesday, June 26, 2013

டிக்,டிக்,டிக்,டாக்...

பேஸ்புக்கில் வந்த ஒரு கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது. கணிதம் தொடர்பான அந்தக் கட்டுரையில் ஒரு கணித மேதைகள் கூட்டத்தில் டிக் டாக் டோ (Tic Tac Toe) விளையாண்டனர் என்று இருந்தது. ஆனால் சற்று வித்தியாசமாக 3*3 கட்டத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு 3*3 டிக் டாக் டோ இருக்கும். ஒரு பெரிய டிக் டாக் டோவில் ஒன்பது சிறு டிக் டாக் டோ இருப்பது போல். நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை, ஆனால் படத்தைப் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன். விளையாட்டில் வெற்று பெற, ஒரு row,  column அல்லது diagonal - லிலுள்ள மூன்று டிக் டாக் - டோ‍வையும் நாம் வென்று இருக்க வேண்டும். நாங்கள் விளையாடும் பொழுது, டை என்றால் இருவரும் வென்றதாக எடுத்துக் கொண்டோம்.




வேறு சில விதிமுறைகளும் இருந்தன. ஆனால் தீஷுவிற்கு அதிகம் என்று நாங்கள் பின்பற்றவில்லை. ஒரு கட்டத்தில் மட்டுமல்லாது, அனைத்து கட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்குப் பிடித்திருந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

6 comments:

  1. நல்ல விளையாட்டு..... பகிர்வுக்கு நன்றி தியானா.

    ReplyDelete
  2. வீட்டில் விளையாடுவது உண்டு... எனது தந்தை வெற்றி பெறுவதில் முதலிடம்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்..தந்தையின் அறிவை மிஞ்ச முடியுமா?

      Delete
  3. நல்ல விளையாட்டு .. தீக்ஷுவிற்கு வாழ்த்துகள் :)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost