Thursday, June 13, 2013

அமெரிக்கப் பள்ளியில் எனக்குப் பிடித்த விஷயங்கள்

இன்றிலிருந்து   தீஷுவிற்கு கோடை விடுமுறை ஆரம்பமாகப் போகிறது. அவள் பள்ளியில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள் பற்றி எழுதி இருந்தேன். பள்ளி விடுமுறை விடும் நாளில் அவள் பள்ளியில் எனக்குப் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1. D.E.A.R டைம் (Drop Everything And Read Time) : கேட்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது.தினமும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாலும் நிறுத்தி விட்டு, புத்தகம் வாசிக்கும் நேரம். டியர் டைம் என்று மனதிற்கு நெருக்கத்தை உண்டு செய்யும் இந்த அருமையான பெயர் வைத்தவர் கண்டிப்பாக ரசனை மிகுந்தவராக இருக்க வேண்டும். இந்தச் சொல் வழக்கம் நிறைய பள்ளியில் கேள்விப்பட்டிருக்கிறேன்.


2. Show and Share time : நேரம் கிடைக்கும் பொழுது, தான் செய்த ஒரு பொருளையோ, வரைந்த படத்தையோ, படித்த புத்தகத்தையோ, சென்ற இடத்தையோ என குழந்தைகள் எதைப் பகிர நினைக்கிறார்களோ, அதை மற்ற குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளும் நேரம். தினமும் செய்வதில்லை ஆனால் ஆசிரியையிடம் சொல்லி வைத்தால், நேரம் இருக்கும் பொழுது செய்யவிடுகிறார்கள். வகுப்பிறையில் அனைத்து மாணவர்கள் முன் நின்று பகிர்ந்து கொள்ளுவதில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை கிடைக்கிறது

3. Star student of the week : வகுப்புத் தலைவன் போல் ஒரு பதவி. வாரம் ஒரு முறை ஆசிரியையால் தேர்ந்தெடுக்கும் மாணவர் அந்த ஒரு வாரமும் அவருக்கு உதவ வேண்டும். ஒரு வாரத்திற்கு முன் வீட்டிற்கு குழந்தைக்குப் பிடித்தமான விஷயங்கள் பற்றிய கேள்விகள் அனுப்பி இருந்தனர். அந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒரு சார்ட் பேப்பரில் ஒட்டி அனுப்ப வேண்டும். ஸ்டார் ஸ்டுடெண்டாக இருக்கும் அந்த ஒரு வாரமும் அந்த மாணவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக வகுப்பறையில் அந்தப் பேப்பரை ஓட்டி வைத்திருப்பர். மேலும் அக்குழந்தையைப் பற்றி மற்ற குழந்தைகள் என்ன நினைக்கிறார்க‌ள் என்பதை ஒரு பேப்பரில் எழுதச் செய்து, தொகுத்து வீட்டிற்கு அனுப்புகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் எண்ணங்களும், கையெழுத்தும், படங்களும் என‌ அந்தத் தொகுப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தீஷு மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தாள்.

4. Parent Volunteer : வகுப்பறையில் அல்லது பள்ளியில் பெற்றோர்கள் Volunteer வேலை செய்யலாம். நமக்கும் திருப்தி மற்றும் குழந்தைக்கும் பெற்றோர் உதவுவதைப் பார்த்து ஒரு பெருமிதம்.

5.புத்தகச் சுமை : அனைத்து புத்தகங்களும் பள்ளியிலேயே வைத்து விடுவதால் புத்தகங்கள் சுமந்து கொண்டு குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை.

6. Walk to School day or Week : பள்ளிக்கு நடந்து வர வலியுறுத்துதல். இதுவும் அனைத்துப் பள்ளிகளிலும் உண்டும். சற்று தூரத்தில் இருப்பவர்கள், காரில் வந்து, காரை பள்ளியிலிருந்து தொலைவிலேயே நிறுத்தி, நடந்து வருவார்கள். எந்த வகுப்பில் நிறைய மாணவர்கள் நடந்து வந்தார்களோ, அவர்களுக்குப் பரிசு உண்டு. அது அனைத்து குழந்தைகளுக்கும் தூண்டுகோலாக இருக்கிறது.

இது என் அனுபவம் மட்டுமே. வேறு ஏதாவது பிடித்த விஷயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்!!

10 comments:

  1. பள்ளியில் இருக்கும் எல்லா விசயங்களும் அருமை... முக்கியமாக (2) Show and Share time & (6) Walk to School day or Week

    தொகுப்பை வாசித்து மகிழ்ந்த தீஷு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்..

      Delete
  2. இதில் மூன்றாவது என் பையன் வகுப்பில் இருந்ததில்லை..வகுப்பு ஆசிரியரின் விருப்பம் அது..மீதி அனைத்தும் எனக்கும் பிடிக்கும். தினம் படிக்கும் புத்தகங்களை எழுதியவர் பெயர், தலைப்பு, எத்தனைப் பக்கங்கள் என்று பதிவு செய்து கொண்டே வரவேண்டும்..மாத இறுதியில் அதிகம் படித்த குழந்தை treasure box - ல்
    இருந்து ஏதாவது பரிசு எடுத்துக்கொள்ளலாம். சில சமயம் என் பெரியவன் தம்பிக்கு என்று பரிசு தேர்வு செய்து எடுத்து வருவான்..மனதை நெகிழ வைக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கிரேஸ்.. சில நேரங்களில் நம்மை நெகிழ வைத்து விடுகின்றார்கள்.. நன்றி

      Delete
  3. My kid will be in KG this year. Yesterday I called school and got principal number. Left a voice message to him. Today he returned the call and explained how the system works and clarified my doubts. This is amazing. I never think of this happen in India.

    Another aspect, when we filled the application, We noted our native language as Tamil. Today I got two letters. One in English and another in Tamil. Exactly translated. They sent out the same format for other languages as well. Even in our home country, we won't get anything in Tamil. I called the principal and gave my positive feedback and explained how I got excited to see the letter in Tamil.

    Lot of good things to learn from their system.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ராமுடு, வகுப்பில் குழந்தை ஆசிரியர் விகிதம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.. நன்றி

      Delete
  4. அருமையான விஷயம்
    பகிர்ந்த விதமும் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான கட்டுரை. முடிந்தவரை இவ்விஷயங்களை இந்தியாவிலும் குறிப்பாக தனியார் பள்ளிகளில் நிச்சயம் பின்பற்றமுடியும். நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளலாமே! ஆனால் அங்கு மாணவர் தொகை அதிகம், ஆசிரியர் எண்ணிக்கை குறைவு என்பது ஓர் இடர்ப்பாடு.
    அதே நேரத்தில், மாணவர் மீதான ஆசிரியர்களின் கட்டுப்பாடு குறைவாக இருப்பதால், அமெரிக்காவில், பள்ளியில் சேரும் குழந்தைகளில் பாதிப்பேர் பள்ளி இறுதி வகுப்பு வரை செல்வதில்லை. (முக்கியமாக உள்ளூர் வெள்ளை நிறத்தினர் உள்பட). இந்தியர், சீனர், கொரியர்கள் போன்ற குடியேறிகள் தான் படிப்பை முக்கியமாகக் கருதி முன்னேறுகிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் இல்லாது போனாலும் படித்து முன்னேறியிருப்பார்கள். காரணம், பள்ளிப் படிப்பின் மீது இவர்களின் பெற்றொர்கள் செலுத்தும் அக்கறை. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
  6. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் எல்லாமே எங்களுக்கும் பிடித்திருந்தது. பள்ளி செல்வது என்பதை இனிமையான அனுபவமாக ஒவ்வொரு குழந்தையும் எண்ண வேண்டும்.

    'இரு, இரு உன்ன ஸ்கூலுக்கு அனுப்பறேன். அப்பத்தான் நீ சரிப்படுவே' என்று சில பெற்றோர்கள் பள்ளி என்பது தண்டனை கொடுக்கும் இடம் என்பது போல குழந்தைகள் மனதில் ஒரு உருவகம் செய்துவிடுகிறார்கள்.

    தும்கூரில் நான் வேலை செய்த ஒரு பள்ளியில் எனது அனுபவத்தை எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள். அந்தப் பள்ளியிலும் இந்த show and share உண்டு. பிரார்த்தனை நேரத்தில் குழந்தைகள் இதைச் செய்வார்கள்.

    பூக்களைப் ……..பறிக்காதீர்…….! http://wp.me/p244Wx-aV

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost