இங்கு காபி பில்டர் (coffee filter) என்று காபி மேக்கரில் காபியை வடிக் கட்ட பயன்படும் பேப்பரில் ஒரு நாள் வாட்டர் கலர் கொண்டு கலர் செய்தோம். டிஷ்யூ பேப்பரிலும் செய்யலாம். டிராப்பர் (dropper) எனப்படும் மருந்து கொடுக்கப் பயன்படுவதை வைத்து செய்தோம். வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும் கலர் நன்றாகத் தெரியவில்லை. எங்கள் கண்ணாடி கதவில் பூ மாதிரி செய்து ஒட்டி வைத்திருந்தோம். ஏதோ குறைந்தது போல் இருந்தது.
இரு மாதங்களான நிலையில் ஏன் வேறு ஒரு முறையில் முயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது. தூணிகளுக்கு டிசைன் செய்ய பயன்படும் முறையான Tie dye முறையில் முயற்சிக்கலாம் என்று முயற்சித்தோம். காபி பில்டரை வெவ்வேறு முறையில் மடித்துக் கொண்டோம். உதாரணத்திற்கு
1. வட்டமாக இருக்கும் பிலடரை, அரை வட்டமாக மடித்து, மீண்டும் கால் வட்டமாக வடித்தால், முக்கோண வடிவம் வரும். மீண்டும் முக்கோண வடிவத்தை அரையாக மடித்தல்
2. நீள வாக்கில் முன்னால் ஒரு மடிப்பு, பின்னால் ஒரு மடிப்பு என்று மடித்து ஒரு செவ்வகமாக மாற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் மடித்து சிறு செவ்வகமாக மாற்றுதல்.
இவ்வாறு வெவ்வேறு முறைகளில் மடிக்கும் பொழுது ஒவ்வொரு முறையிலும் வெவ்வேறு டிசைன் வரும். மடித்தப்பின் பேப்பரை வாட்டர் கலரில் முக்கி எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஓரங்களிலும் ஒவ்வொரு கலர் அல்லது வெறும் இரண்டு கலர்கள் என்று கொண்டு செய்தோம்.
இந்த முறையில் கலர் செய்த பொழுது சென்ற முறையை விட கலர் நன்றாக தெரிந்தது. டிஷ்யூ பேப்பர் மற்றும் கிச்சன் டவல் கூட பயன்படுத்திப் பார்த்தோம். அனைத்திலும் நன்றாக வந்தது. காய்ந்த பின் பேப்பரை பிரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் எங்களுக்கு டிசைன் பார்ப்பதில் அவசரம். காயும் முன்னே பிரித்து விட்டோம்.
அழகாக இருக்கின்றன. இந்த பேப்பர்களை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறோம்.
wow..great job...u have done with lots of interest...looking nice... :)
ReplyDeletei'll surely try this