1. ஃபனல் மூலம் பாட்டிலில் தண்ணீர் ஊற்றுதல் (Funnelling)
2. ஸ்பான்ச்சை பாட்டிலுல் பிழிந்து நிரப்புதல் (Transferring water using sponge)
3. டம்பளரால் தண்ணீர் ஊற்றுதல் (Wet pouring)
4. பாட்டிலில் ஓட்டை வழியாக தண்ணீர் வருவதைப் பார்த்தல் என கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் விளையாண்டு கொண்டிருந்தாள்
அனைத்து விசயங்களையும் இவ்வாறு செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால், குழந்தையின் கற்பனைத் திறன் வளராது என்பது என் எண்ணம். பொருட்களைக் கொடுத்து விட்டு நாம் நகர்ந்து விட்டால், அதை வைத்து அவர்களே கற்று கொள்கிறார்கள். அதனால் இது போன்ற ஒப்பன் எண்டட் ஆக்டிவிட்டீஸ் எனது விருப்பமும் கூட.
முடித்தவுடன் தீஷு சொன்னது, "Best activity. I liked it very much".
பாட்டிலில் தண்ணீர் இல்லாவிட்டால் மிதந்து நகர்கிறது அதனால் நிறுத்துவதற்கு தண்ணீர் உற்ற வேண்டும், ஃபனலில் ஒரு ஓட்டை மட்டும் இருப்பதால் ஓட்டையை மூடினால் தண்ணீர் போவதை தடுத்து விடலாம் ஆனால் பாட்டிலில் அது முடியாது என்று முடித்தவுடன், நான் கேட்காமலே ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
தண்ணீரால் நம்மை உற்சாகப்படுத்த முடியும். அந்த உற்சாகம் போனஸ்!!
Very impressed!!! Way to go!!!
ReplyDeleteதண்ணீரில் விளையாடுவது எல்லாக் குழந்தைகளுக்குமே மிகப் பிடித்தமான ஒன்று. இப்படி நாமே சாமான்களைத் தந்து அமர்த்தி விட்டால் சமர்த்தாக விளையாடுவதுடன் கற்றுக் கொள்ளவும் இயலுகிறது. நல்ல பகிர்வு:)!
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி Chitra
ReplyDeleteகருத்துக்கு நன்றி ராமலஷ்மி மேடம்