ஜாக்ஸன் பாலக் (Jackson Pollock) பற்றி இந்த முறை படித்தோம். அமெரிக்காவில் 1912 யில் பிறந்த இவர், உருவமில்லாமல் படம் வரைவதில் வல்லவர். இவர் பெயிண்ட்டில் பிரஸ்ஸை நனைத்து, கான்வாஸ்ஸில் தெளித்தோ, வடித்தோ படங்கள் உருவாக்கினார். சில படங்களை பெயிண்ட் டப்பாவிலிருந்து நேரடியாக கொட்டியும் உருவாக்கியுள்ளார். இவரின் லாவெண்டர் மிஸ்ட்(Lavendar Mist) என்ற புகைப்படத்தை எடுத்துப் படித்தோம்.
ஓவியத்தை உருவாக்குவதற்கு
1. முதலில் பெயிண்ட்டில் தண்ணீர் கலந்து, பிரஸ்ஸினால் தெளித்துப் பார்த்தோம். ஆனால் தீஷுவிற்கு அதில் விருப்பமிருக்கவில்லை. படத்தில் கலர் அடர்த்தியாக இல்லை என்றாள்.
2. ஆகையால் கான் மாவையும்(Corn Flour) தண்ணீரையும் சரி அளவில் கலந்து கொண்டோம்.
3. அதில் பெயிண்ட் சேர்த்துக் கொண்டோம்.
4. தெளித்த பொழுது கலர் நன்றாக தெரியாவிட்டாலும் எளிதாக தெளிக்க முடிந்தது.
5. தீஷு தெளித்தது மட்டும் போதாது. வீடும் வரைய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். எங்கள் ஓவியம்.
No comments:
Post a Comment