நமக்கு எளிதாகவும் சாதாரணமாகவும் தெரியும் விஷயங்கள் குழந்தைக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தருவதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருப்போம். இந்த வாரத்தில் எங்கள் வீட்டில் செய்த மிகவும் எளிமையான ஆனால் பெரிதும் விரும்பப்பட்ட ஆக்டிவிட்டீஸ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. இது குழந்தையாக இருந்த பொழுது செய்து விளையாண்டது. அறிவியல் புத்தகத்தில் கூட செய்முறை இருக்கும். வீட்டுத் தொலைபேசி. இரு பேப்பர் டம்ளர்களை ஒரு நூலினால் இணைக்க வேண்டும். ஒருவர் ஒரு டம்ளரில் பேசும் பொழுது மற்றவர் மற்ற டம்ளர் வழியாக கேட்க வேண்டும். ஒருவர் ஒரு டம்ளரில் பேசும் ஒலி மற்றவருக்கு மறு டம்ளருக்கு நூலில் வழி செல்லுகிறது என்பதே ஒரு ஆச்சரியமாக இருந்தது. மிக நீளமான நூலாக இருந்ததால் பக்கத்து பக்கத்து அறைகளில் அமர்ந்து மெல்லிதாக பேசினாலும் மற்றவர்களுக்கு கேட்டது. ஒருவர் டம்ளரில் பேசும் பொழுது மற்றவர் காதில் வைக்க வேண்டும். அதற்காக பேசி முடித்தவுடன் "ஓவர்" என்று சொல்ல வேண்டும் என்றது தான் இதில் விருப்பமான விஷயமானது.
சில சமயம் Over என்பதற்கு பதிலாக End என்று சொல்வது, இருவருமே ஒரே சமயத்தில் பேசுவது, இருவரும் காதில் வைத்துக்கொண்டு முழிப்பது போன்றவைகளும் நடக்கலாம்!!
ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரத்திற்கு மேல் இப்படியாக பேசும் படி ஆனது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2. ஒரு ஜிப் லாக் பாகில் (Ziplock) எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொண்டோம். அதில் இரண்டு கலர் பெயிண்ட் சேர்த்துக் கொண்டோம். எண்ணெய் இருப்பதால் இரு கலரும் சேராது என்று நினைத்திருந்தேன். ஆனால் சிகப்பும், வெள்ளையும் சேர்ந்து வெளீர் பிங்க் ஆனது. அதை நன்றாக மூடி, டேப்பை வைத்து மேலும் வாயை நன்றாக மூடி வைத்து விட்டோம். அதில் விரல்கள் கொண்டு உருவங்கள்/எழுத்துக்கள்/ஓவியங்கள் உருவாக்கினோம். விரல்களால் பெயிண்ட்டைப் பிரித்தாலும் மீண்டும் சேர்வது பார்ப்பதற்கு ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3. ஐஸ் பெயிண்ட்டிங்: தண்ணீரில் கலர் கலந்து, ஐஸ் உருவாக்கினோம். பிடித்து வரைவதற்கு ஏதுவாக நடுவில் குச்சி வைத்துவிட்டோம். ஐஸ் உருகும் நிலை பொருத்து வெவ்வேறு வகையான ஓவியங்கள் தோன்றின். முதலில் ஐஸ் உருகாமல் இருந்த பொழுது சற்று அழுத்தி வரைய வேண்டி இருந்தது. ஆனால் உருகத் தொடங்கியவுடன் எளிதாக இருந்தது. சற்று தண்ணீர் ஆனவுடன் காகிதத்தை ஈரமாக்கிவிட்டது.
அற்புதம்! என்னுடைய குழந்தைக்கு இன்று ஒரு விளையாட்டு தயாராகிவிட்டது. நன்றி! தொடருட்டும் உங்கள் பணி!
ReplyDelete