காற்று எங்கும் இருக்கிறது - ஒரு காலி டம்பளரில் கூட என்று உணர்த்துவதற்கு ஒரு அறிவியல் சோதனை செய்து பார்த்தோம்.
ஒரு கண்ணாடி டம்பளர் உள்ளே அடிப்பகுதியில் பேப்பர் வைக்க வேண்டும். கவிழ்த்தாலும் பேப்பர் விழுந்து விடாதவாறு வைக்க வேண்டும். நேராக கவிழ்த்திய நிலையில் டம்பளரை ஒரு தண்ணீர் பாத்திரத்தில் மூழ்க வைக்க வேண்டும். டம்பளரை தண்ணீரிலிருந்து எடுத்து பேப்பரை தொட்டுப் பார்த்தால் ஈரமாக இருக்காது. தண்ணீருக்குள் சென்று வந்த பேப்பரில் ஈரம் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுது டம்பளரை மீண்டும் நேராக கவிழ்த்திய நிலையில் தண்ணீரில் வைத்து சற்று சாய்த்தால், டம்பளிரிலிருந்து காற்று வெளியேறி, டம்பளருக்குள் தண்ணீர் நுழையும். டம்பளரை வெளியில் எடுத்து பேப்பரை தொட்டுப் பார்த்தால் ஈரமாக இருக்கும்.
முதல் முறை டம்பளரிலிருந்த காற்று தண்ணீரை டம்பளரிலுள் அனுமதிக்காததால், பேப்பர் ஈரமாகவில்லை. இரண்டாம் முரை காற்று டம்பளரை சாய்த்ததால் காற்று வெளியேறிய அளவு தண்ணீர் நுழைந்து ஈரப்படுத்தி விட்டது.
அந்த சோதனை Air Is All Around You புத்தகத்திலிருந்து எடுத்தது.
Games to play with 3 year old without anything
2 years ago
அன்பு வணக்கங்கள்,
ReplyDeleteவலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை
அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத
வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை.
இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு,
குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும்
என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து
எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின்
கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.
நன்றி !
nallathu ... thodarungkal... paaraattukkal
ReplyDeleteஅன்பின் தியானா - அறிவியலும் தீஷு அறியக் கற்ருக் கொடுத்தமை நன்று - நல்ச்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete