குழந்தைகளுக்கு ஸ்டிக்கர் மிகவும் பிடிக்கும். அதன் பல வர்ண அழகிய படங்கள் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் அதன் ஒட்டும் தன்மை. தீஷுவிற்கு ஸெல்லொ டேப் (cellotape) என்றால் மிகவும் இஷ்டம். ஆனால் அவளால் அதனை ஒரு கையில் வைத்துக் கொண்டு இன்னொரு கையால் வெட்ட முடியாது. வீட்டில் ஒரு மாஸ்கிங் டேப் இருந்தது. அவளால் கையில் கிழிக்க முடிந்தது. ஒரு நாள் நான் வேலையாக இருந்த பொழுது, அவளிடம் கொடுத்து கண்ணாடி கதவில் ஒட்டச் சொன்னேன். அரை மணி நேரத்திற்கு மேல் செய்து கொண்டிருந்தாள். நல்லதொரு பொழுது போக்கு. ஆனால் நான் நினைத்த அளவு எடுப்பது எளிதாக இல்லை. கரை கண்ணாடியில் ஒட்டி இருக்கிறது. சுத்தம் செய்ய வேண்டும் :-((
Sticky back contact paper பற்றி ஒரு ஆர்ட் புத்தகத்தில் படித்தேன். தீஷுவிற்கு பிடிக்கும் என்று தோன்றியது. தேடிப்பார்த்ததில் கடைகளில் shelf lining section லில் கிடைத்தது. வாக்கிங் போகும் பொழுது உதிர்ந்த பூக்கள் மட்டும் இலைகள் எடுத்து வந்தோம். காய வைக்க தீஷு அவகாசம் கொடுக்கவில்லை. அன்றே செய்து விட வேண்டும் என்றாள். கான்டாக்ட் பேப்பரை சதுரமாக கிழித்து ஒட்டும் பகுதி மேலே வைத்து அதன் மேல் எடுத்து வந்த பூக்கள் மற்றும் இலைகளை ஒட்டினோம். ஒட்டி முடித்தவுடன், அதன் மேல் மற்றொரு சதுர பேப்பர் வைத்து ஒட்டி, பூக்களை நடுவில் நிறுத்திவிட்டோம். கண்ணாடி கதவில் ஒட்டி விட்டோம். அழகான collage. கதவில் தெரியும் கரைகள் தான் முந்திய பத்தியில் நான் சொன்னது.
அதன் பின் ஒரு நாள் contact paper யில் கலர் பேப்பர் ஒட்டி collage செய்தோம். Contact paper யின் வழுவழுப்பு தீஷுவிற்கு பிடித்திருக்கிறது.
No comments:
Post a Comment