"It took me four years to paint like Raphael, but a lifetime to paint like a child " - Picasso.
குழந்தைகள் ஓவியம் வரைவது அவசியம் என்பது என் கருத்து. அவர்களால் தான் எப்படி ஓவியம் வர போகிறதோ என்ற பயம் இல்லாமல் செய்ய முடியும். மேலும் தங்களுடைய உழைப்பின் பலனை உடனே பார்ப்பதால், மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் அடைவர். அவை இரண்டும் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.
வெகு நாட்களாக நானும் தீஷுவும் ஓவியம் வரைந்தாலும், அவை அனைத்தும் இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் இல்லாதவை. இப்பொழுது தீஷுவிற்கு ஐந்து வயதான நிலையில், சில வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால் ஒரு ஓவியர் எவ்வாறு வரைந்திருக்கிறார் என்று படிப்பதன் மூலம் ஓவியத்தைப் பற்றியும், ஓவியர் பற்றியும் ஒரு சேர கற்றுக் கொள்ளலாம் என்று தோன்றியது. லைப்ரேரியில் தேடிய பொழுது
1. Discovering Great Artists: Hands-On Art for Children in the Styles of the Great Masters by MaryAnn F.Kohl
2. The Usborne Art Treasury by Rosie Dickins
புத்தகங்கள் கிடைத்தன. என்ன எதிர்பார்த்தேனோ எவை அனைத்தும் இரண்டு புத்தகங்களிலும் இருக்கின்றன. ஓவியர் பற்றி ஒரு சிறு குறிப்பு மற்றும் அவரின் ஒரு ஓவியத்தை எவ்வாறு குழந்தைகள் வரையலாம் என்ற வழிமுறை. நாங்கள் முதலில் படித்தது Paul Klee, ஆனால் அது தந்தையர் தினத்திற்கான பரிசு. அடுத்த வாரம் அதைப்பற்றி எழுதுகிறேன்.
இப்பொழுது பதிவது ரஷ்சிய ஓவியர் கான்டின்ஸ்கி (Wassily Kandinsky). முழு விவரம்.முதலில் ஓவியரைப் பற்றி படித்துவிட்டு, அவரது ஓவியம் வரைந்தோம்.
ஓவியம வரைவதற்கான வழிமுறை:
1. பக்கத்தை 12 பாகமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
2. ஒவ்வொரு பாகத்திலும் இடைவேளி விட்டு வெவ்வேறு கலர்களில் வட்டங்கள் ஆயில் பாஸ்டலால் (oil pastel) வரைந்து கொள்ள வேண்டும்
3. அதன் மேல் ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு கலர்களில் வாட்டர் கலரை தீட்ட வேண்டும்.
கான்டின்ஸ்கியின் ஓவியம்
தீஷுவின் ஓவியம்
Courtesy : google images
Games to play with 3 year old without anything
2 years ago
Good way to teach kids about different artists..
ReplyDelete