"It took me four years to paint like Raphael, but a lifetime to paint like a child " - Picasso.
சென்ற தந்தையர் தினப்பரிசுக்கு தீஷுவிற்கு என் உதவி மிகவும் தேவைப்பட்டது. ஆகையால் இந்த முறை தீஷுவே செய்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எங்கள் ஓவியர் & ஓவியம் வாசிப்பில் ஓவியம் வரைந்ததைக் கொடுத்தோம். முழுவதும் அவளே செய்தது.
பால் கிலே(Paul Klee) பற்றிப் படித்தோம். ஸுவிஸ்சர்லான்டில்(Switzerland) பிறந்து, ஜெர்மனியில் வாழ்ந்தவர். முழு விவரம். அவரின் கோல்டன் பிஷ் ஓவியத்தை வரைந்தோம்.
பால் கிலேயின் ஓவியம்
நாங்கள் செய்தது
1. முதலில் ஒரு பெரிய மீனும் பல சிறிய கடல் வாழ் உயிர்யினங்களும் பென்சிலால் வரைந்து கொள்ள வேண்டும்.
2. ஆயில் பாஸ்டல் (oil pastel) கொண்டு வண்ணம் தீட்ட வேண்டும். பெரிய மீனுக்கு கவர்ச்சிகரமான ஒரு வண்ணம்.
3. ஊதா நிற வாட்டர் கலரால் காகிதம் முழுவதும் தீட்ட வேண்டும்.
தீஷுவிற்கு ஒரு பெரிய மீன் என்று வரைய பிடிக்கவில்லை. அனைத்து மீன்களும் ஒரே அளவில் இருந்தன. வண்ணமும் அவ்வாறே. அவள் இஷ்டம் என்று விட்டு விட்டேன்.
தீஷுவின் ஓவியம்.
கார்டு மாதிரி செய்ய வேண்டும் என்று காகிதத்தை மடித்துக் கொடுத்திருந்தேன். ஆனால் அவள், தன் அப்பா ஆபிஸில் மாட்ட வேண்டும் என்று விரும்பியதால், காகிதத்தின் பின் பகுதியில் எழுத வேண்டியதை, முன் பகுதியில் எழுதும் படி ஆகிற்று. To my Best DAD என்று எழுத வைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் I Love you என்று எழுத வேண்டும் என்று விரும்பினாள். அதுவும் அவள் விருப்பத்திற்கே.
Games to play with 3 year old without anything
2 years ago
nalla visayam thaan... vaalththukkal
ReplyDeleteso nice Dheekshu! Am trying, but not getting nice pics as yours...Good :-)
ReplyDeleteSo both Wassily and Paul Klee do the same method? Am getting interested, should read more