குழந்தைகளின் கேட்கும் திறன் அவர்களின் வாசிக்கும் திறனைக் காட்டிலும் அதிகம். நான்கு வயது குழந்தைக்கு, இரண்டாவது வகுப்பு படிக்கும் குழந்தை வாசிக்கும் புத்தகத்தை, நாம் வாசித்துக் காட்டினால் கேட்டு புரிந்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு : http://www.daddyread.com/readingChapter.html. இப்பொழுது தீஷுவிற்கு சாப்டர் புத்தகங்கள் மேல் ஆர்வம் வந்திருக்கிறது. சாப்டர் புக்ஸ் என்பது ஒரு பெரிய கதை, பல பகுதிகளாக (chapters) பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுயிருக்கும்.
daddyread.com லில் நல்ல சாப்டர் புக்ஸ் லிஸ்ட் உள்ளது. எனக்கும் தீஷுவிற்கும் விருப்பமான மூன்று சாப்டர் புக்ஸ் பற்றி இங்கு குறிப்பிட்டு உள்ளேன்.
Frog and Toad (Series):
நான் முதல் Frog and Toad புத்தகம், Blossom புக் ஸ்டோரில் வாங்கினேன். அப்பொழுது தீஷுவிற்கு விருப்பமிருக்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியாவிலிருந்து கிளம்பும் பொழுது, அங்கிருந்து வெகு சில புத்தகங்களே எடுத்து வந்தோம். மிகுந்த யோசனைக்குப் பிறகு நான் அதை எடுத்து வந்தேன். முதலில் ஹோட்டலில் சில நாட்கள் தங்கி இருந்தோம். அப்பொழுது ஏதாவது புத்தகம் வாசித்துக் காட்டு என்று அவள் கேட்டவுடன், என் கைக்கு அகப்பட்டது இந்த புத்தகம். தீஷுவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. திரும்ப திரும்ப வாசிக்கச்சொல்லி கேட்டுக் கொண்டியிருந்தாள். சில கதைகள் வரிக்கு வரி மனப்பாடம் ஆகிவிட்டன. ஒவ்வொரு சாப்டரும் ஒரு கதை. எங்களுக்கு மிகவும் பிடித்து விட்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் லைப்ரேரியிலிருந்து வெவ்வேறு புத்தகங்கள் எடுத்து வந்து வாசிக்கிறோம். சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக வாசித்துக் காட்டுங்கள்.
Three Stories you can read to your cat/dog/ Bear (Series):
கதை நாய்க்கு சொல்லுவது போல் அமைந்து உள்ளது. அதைப் போல் பூனை மற்றும் கரடிக்கு என தனித்தனி புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் 3 கதைகள். Three more stories you can read என்றும் புத்தகங்கள் உள்ளன. மிகவும் ரசிக்கத்தக்க கதைகள். எங்கள் இருவருக்கும் மிகவும் விருப்பம்.
Magic Tree House :
ஒரு மாஜிக் மர வீடு ஜாக்கையும், ஆனியையும் அவர்கள் விரும்பும் காலத்திற்கு கூட்டு செல்கிறது. அவர்களுக்கு அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பது த்ரிலர், சில உண்மைகள் என செல்கிறது கதை. ஒரு புத்தகம் ஒரு கதை. ஒவ்வொரு புத்தகமும் 40 பக்கங்கள் முதல் 90 பக்கங்கள் வரை உள்ளன. நான் கிட்டத்தட்ட 45 புத்தகங்கள் வரை பார்த்தேன். அதற்கு மேலும் இருக்கலாம். குழந்தைகள் விரும்பி இக்கதைகள் கேட்க கூடும். எங்களுக்குப் பிடித்துயிருக்கிறது. நாங்கள் இரண்டு புத்தகங்கள் படித்து இருக்கிறோம்.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment