Monday, May 16, 2011

Carryover Addition

இது என் முந்நூறாவது பதிவு. என் முதல் நன்றி தீஷுவிற்கு. நான் விட்டாலும் விடாமல் ஆக்டிவிட்டி என்று என்னை துளைத்து எடுப்பதற்கும், என் மாடலாக செயல்படுவதற்கும். என் அடுத்த நன்றி என் கணவருக்கு. வீட்டில் அவர் பொருட்களுக்காக ஒரு ஒரே அலமாரி. மற்ற அனைத்து இடத்தையும் நாங்கள் செய்த பொருட்கள், செய்வதற்காக வாங்கி வைத்திருக்கிற பொருட்கள் என்று அடைத்து வைத்திருந்தாலும் எங்களை உற்சாகப்படுத்துவதற்கு. மூன்றாவது நன்றி உங்களுக்கு. வெரைட்டியாக இல்லாமல் ஒரே மாதிரி இடுகைகளாக இருக்கும் ஒரு ப்ளாகை படிப்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் சிலர் தொடர்ந்து படிப்பது உற்சாகம் ஊட்டுகிறது. நன்றி அனைவருக்கும்.

தீஷு இரண்டு இலக்க எண்கள் கூட்டும் பொழுது, முதலில் ஒன்ஸ் கூட்டு, அடுத்து டென்ஸ் கூட்டு என்றால், மாற்றி கூட்டினாலும் அதே விடை தானே வருகிறது என்று கேட்பாள். நீ Carry over addition செய்யும் பொழுது விடை வேறு மாதிரி வரும் என்றவுடன், எனக்கு சொல்லிக் கொடு என்றாள். சரி என்று ஆரம்பித்தோம். முதலில் 2+2+1, 1+2+2+3 என்று இரண்டு எண்களுக்கு மேல் கூட்டுவதற்கு சொல்லிக் கொடுத்தேன்.

எனக்கு நினைவு தெரிந்த வரை, ஒன்ஸில் இடம் இல்லை என்பதால் டென்ஸுற்கு எடுத்துக் கொண்டு போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளும் ஏன், எப்படி அடுத்த இலக்கத்திற்கு போகிறது என்று யோசித்தது இல்லை. இத்தனைக்கும் நான் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன். அதனால் தீஷு சரியாக செய்தால் மட்டும் போதாது, புரிந்து செய்ய வேண்டும் என்று கவனமாக இருந்தேன்.




இந்த விளையாட்டு தீஷுவிற்கு நன்றாக நினைவிலிருந்தது எங்களுக்கு வசதியாக போய்விட்டது. மேலும் வெவ்வேறு விளையாட்டுகள் மூலம் ஒன்ஸ் டென்ஸ் கண்டுபிடிக்க வைத்து அவளுக்கு தெளிவாக புரிய வைத்தேன்.

அனைத்து விளையாட்டுகளும் பாசி வைத்து சொல்லிக் கொடுத்தால், இப்பொழுதும் பாசி வைத்தே சொல்லிக் கொடுத்தேன். ஒரு தாளை மூன்றாக பிரித்துக் கொண்டேன். ஒன்ஸ், டென்ஸ், ஹன்ரெட்ஸ் என்று எழுதிக்கொண்டேன். ஒன்ஸில் 10 கட்டங்கள். டென்ஸில் 10 கோடுகள், ஹன்ரெட் ஒரு சதுரம். முதல் எண்னை பாசியில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது எண்ணை பாசி மதிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு எண்களையும் கூட்டுவதற்கு, முதலில் தனித்தனியாக இருக்கும் பாசிகளை ஒன்ஸ் கட்டத்தில் வைத்துக் கொண்டு வர வேண்டும். பத்து பாசி வைத்து முடித்தப்பின் டென்ஸுக்கு மாற்றி, ஒன்ஸை காலியாகிவிட வேண்டும். எதற்காக அடுத்த இலக்கத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று புரிந்து கொள்ள இது உதவியது. சரியாக செய்கிறாள். புரிந்து கொண்டு செய்கிறாளா என்று தெரியவில்லை.

1 comment:

  1. Congrats to my dear friend Dhiyana!!! You are rocking as you used to do in studies. Proud and happy to be your friend. Wish you and Dheekshu reach even greater heights!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost