Monday, August 16, 2010

நான்கு கோடு காகித‌ம்

தீஷுவிற்கு உடம்பில் சில கொப்பளங்கள் தோன்றின. டாக்டர் அலர்ஜி என்றார். முதலில் உணவையே யோசித்துக்கொண்டிருந்தோம். அப்பா தான் முதலில் கூறினார். அலர்ஜிக்குக் காரணம் மண் தட்டு. முதலில் நான் நம்பவில்லை. பின்பு ஒரு வாரம் மண் தட்டை உபயோகப்படுத்தமால் வைத்திருந்தோம். பின்பு தொட்டவுடன் அன்று இரவே உடம்பில் பல இடங்கள் கொப்பளங்கள். அதிலிருந்து மண்ணை உபயோகப்படுத்துவதில்லை. மண்ணில் எழுதிப் பழகுவதன் மூலம் பேப்பர் உபயோகத்தை சற்றே குறைக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்.

ஆக்டிவிட்டி ஸீட்ஸ் (activity sheets) திரும்ப திரும்ப பயன்படுத்த, அவற்றைத் தெளிவான காகிதத்தில் உள் வைத்து, white board marker கொண்டு எழுதி அழித்து இன்னும் அந்த maze புத்தகத்தைப் பயன்படுத்துகிறோம். இது போல் நான்கு கோடு நோட்டின் ஒரு பக்கத்தை ஒரு தெளிவான காகிதத்தினுள் வைத்து மார்க்கர் கொண்டு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் மார்க்கரின் நுனி சற்று தடிமனாக இருப்பதால் கோடுகளின் இடைவெளி அதிகமாக இருந்தால் தான் எழுத்துத் தெளிவாக வரும் என்பதால் நான்கு கோடு நோட்டு போல் கோடுக‌ள் ஒரு காகித‌த்தில் வ‌ரைந்து கொண்டேன். அதே காகிதத்தின் பின் பக்கத்தில் கட்டம் போட்ட காகிதம் போல் வரைந்திருக்கிறேன். வரைந்த பக்கத்தை ஒரு file லில் வைத்து விட்டு மார்க்கர் கொண்டு எழுதுகிறோம்.



தீஷு எழுதி பழக இது வசதியாக இருக்கிறது.

1 comment:

  1. தீஷூ அழகா எழுதியிருக்காங்க...வாழ்த்துகள்! நல்ல ஐடியா தியானா!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost