ஆக்டிவிட்டி ஸீட்ஸ் (activity sheets) திரும்ப திரும்ப பயன்படுத்த, அவற்றைத் தெளிவான காகிதத்தில் உள் வைத்து, white board marker கொண்டு எழுதி அழித்து இன்னும் அந்த maze புத்தகத்தைப் பயன்படுத்துகிறோம். இது போல் நான்கு கோடு நோட்டின் ஒரு பக்கத்தை ஒரு தெளிவான காகிதத்தினுள் வைத்து மார்க்கர் கொண்டு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் மார்க்கரின் நுனி சற்று தடிமனாக இருப்பதால் கோடுகளின் இடைவெளி அதிகமாக இருந்தால் தான் எழுத்துத் தெளிவாக வரும் என்பதால் நான்கு கோடு நோட்டு போல் கோடுகள் ஒரு காகிதத்தில் வரைந்து கொண்டேன். அதே காகிதத்தின் பின் பக்கத்தில் கட்டம் போட்ட காகிதம் போல் வரைந்திருக்கிறேன். வரைந்த பக்கத்தை ஒரு file லில் வைத்து விட்டு மார்க்கர் கொண்டு எழுதுகிறோம்.
தீஷு எழுதி பழக இது வசதியாக இருக்கிறது.
தீஷூ அழகா எழுதியிருக்காங்க...வாழ்த்துகள்! நல்ல ஐடியா தியானா!
ReplyDelete