தீஷு கதை சொல்லுவதற்காக அவளின் புகைப்படங்கள் அடிக்கடி எடுக்கிறோம்.
அப்பொழுது தீஷு உருவாக்கிய சில விளையாட்டுக்கள்.
1. புகைப்படத்திலிருந்த அவளின் அவள் வயதிற்கு ஏற்ப அடுக்கினாள். ஸ்மால் (small), லிட்டில் பிக் (little big), பிக் (big) என்று சொல்லச் சொன்னேன்.
2. புகைப்படங்களில் சில மாட் (matte finish) & சில கிலாசி (glossy finish) இருந்தன. அவற்றை rough and smooth என்று சொல்லிக் கொண்டு பிரித்தாள் (sorting). அவளே ஆசிரியையாகி எனக்கு எப்படி பிரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள்.
3. மாட் அதிகமாக இருக்கிறதா அல்லது கிலாசி அதிகமாக இருக்கிறதா என்று எண்ணி கண்டுபிடித்தாள்.
4. இரண்டையும் ஒன்று மாற்றி ஒன்று வைத்து பாட்டன் உருவாக்கினாள்.
மொத்தத்தில் கதை சொல்ல எடுத்த படங்கள், கதைக்கு உதவாமல் கணிதத்திற்கு உதவின. அவளே இந்த விளையாட்டுக்களை உருவாக்கியது தான் எனக்குப் பிடித்திருந்தது.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment