Thursday, August 12, 2010

படக் குறுக்கெழுத்து

சில விளையாட்டுகளை தீஷுவின் வயதிற்கு ஏற்ப அறிமுகப்படுத்த ஆரம்பித்து இருக்கிறேன். சொட்டான் கல் என்று சிறு வயதில் எனக்கு என் அம்மா வழி பாட்டு கல்லைத் தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவதற்கு சொல்லிக் கொடுத்தார்கள். பல்லாங்குழி விளையாட பழகிய அளவிற்கு என்னால் அதைப் பழக முடியவில்லை. கை கண் ஒருங்கிணைப்புக்கு மிகவும் ஏற்றது. தீஷுவிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பழகுவதற்கே எனக்குக் கஷ்டம்.. எங்க சொல்லிக் கொடுக்க ?அப்பா சொல்லிக் கொடுத்தார். முதலில் அம்மாவிற்கு பின்பு தீஷுவிற்கு. அம்மாவிற்கு இப்பவும் கஷ்டம்.. தீஷுவிற்கு கல்லைத் தூக்கிப்போடக்கூட முடியவில்லை. சில நாட்கள் கழித்து முயற்சிக்க வேண்டும்.



அடுத்து முயற்சித்தது குறுக்கெழுத்து. தீஷுவிற்கு க்ளூஸ் வாசிக்க கஷ்டம் என்பதால் படங்கள் ஒட்டிவிட்டேன். அதே போல் இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் போன்றவைக்கு அம்பு குறிகள். வெறும் நான்கு படங்கள். என்ன எழுத வேண்டும் என்று புரிந்தவுடன் ஏற்கெனவே எந்த எழுத்து இருக்கிறதோ அதை எழுத வேண்டாம் என்று புரிந்து இருக்கிறது. இந்த விளையாட்டு குறுக்கெழுத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தும் என்று நினைக்கிறேன்.

3 comments:

  1. அன்பின் தீஷு

    அம்மாவின் பாச மிக்க செயல்கள் - உனக்குப் பிடித்தமான முறையில் செய்யும் செயல்கள் - மேன் மேலும் வளர நல்வாழ்த்துகள் தீஷு
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ந‌ன்றி அய்யா த‌ங்க‌ள் வாழ்த்துக‌ளுக்கு!!!!

    ReplyDelete
  3. வணக்கம். Montessori-yin அடித்தள நடவடிக்கையிலிருந்து எப்படி தொடர்வீர்கள் என நினைத்திருந்தேன். தீஷு உடனான சமீபத்திய முயற்சிகள் புதிய பரிணாமம் கொடுக்கிறது, குழந்தையின் வளர்ச்சிக்கேற்ற முறையில், எந்த கணத்திலும் அயர்ச்சி வந்துவிடாமல், அதே ஆர்வத்துடன் தொடர நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost