Wednesday, August 25, 2010

வார்த்தை விளையாட்டு

தீஷுவை ஏதாவது ஒரு வழியில் வாசிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். புத்தக்த்திலிருந்து மட்டுமே வாசிக்கச் சொன்னால் அவளுக்குச் சி(ப) ல நேரங்களில் விருப்பம் இருப்பதில்லை.

அவளே வாசிக்க வைக்க அந்த நேரத்தில் கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விளையாட்டு போல் செய்தால் அவளுக்கு ஆர்வம் இருக்கிறது.

1. வார்த்தை பிங்கோ (Word Bingo) :

தீஷு டிக் டாக் டோ விளையாட‌ ப‌ழ‌கிய‌ப்பின் இதை ஆர‌ம்பித்தேன். 3*3 க‌ட்ட‌த்தில் ஒன்ப‌து வார்த்தைக‌ள் எழுதிக் கொண்டேன். நான் கூறும் வார்த்தை எழுதியிருந்த‌ ஒன்ப‌து வார்த்தைக‌ளில் இருந்தால், அந்த‌ வார்த்தை மேல் க‌ல்லை வைக்க‌ வேண்டும். எப்பொழுது ஒரு வ‌ரிசையாக‌ நிர‌ம்புகிற‌தோ அப்பொழுது நிறு‌த்த‌ வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் வார்தையைக் கண்டுபிடிக்க அவள் திரும்ப திரும்ப அந்த 9 வார்த்தைகளையும் வாசித்துக் கொண்டே இருக்கிறாள் :-))

2. கீழுள்ள வாக்கியங்கள் எடுத்துக் கொண்டேன்.

net is wet
see the sun
this is pig
dog sat on the log



ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒவ்வொரு கலர் பேப்பரில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கலர் பேப்பர் கிடைக்க வில்லை. அதனால் வெள்ளை காகிதத்தில் வெவ்வேறு கலரில் எழுதினேன். ஒவ்வொரு வார்த்தையாக கிழித்துக் கொண்டேன். ஒரு கண்ணாடி கிண்ணத்தில் வைத்து விட்டேன். முதலில் தீஷு ஒவ்வொரு வார்த்தையாக எடுத்து கலர் அடிப்படையில் பிரிக்க வேண்டும். பின்பு ஒரு பிரிவில் இருக்கும் வார்த்தைகளை வாசித்து அவற்றை வரிசையாக அடுக்க வேண்டும். இதனால் வாசித்த மாதிரியும் ஆகி விட்டது. வார்த்தை உருவாக்க பழகிய மாதிரியும் ஆகிவிட்டது.

3. ஒரு கருப்பொருள் எடுத்துக்கொண்டோம். உதாரணத்திற்கு vegetable. அதன் கீழ் வரும் பொருட்கள் மட்டும் எழுத வேண்டும் - tomato, onion etc.. வார்த்தைகள் பெரிதாக இருந்தாலும் அவளுக்கு இரண்டு மூன்று எழுத்துகள் வாசித்ததும் கருப்பொருள் கொண்டு யூகிக்க முடிகிறது.

உங்கள் குழந்தைக்கு வாசிக்க எப்படி பழக்குனீர்கள்?

2 comments:

  1. ஆங்கிலத்திற்க்கு tinkle புத்தகத்தில் capital letter பயன் படுத்துவதால், எம்பொண்ணுக்கு அடையாளம் காண எளிதாக இருக்கு. அவளுக்கு தெரிந்த வார்த்தைகளைத் தேடச் சொல்லுவேன். கண்டு பிடிக்கும் போது இதென்ன அது என்ன என்று அவளே கேட்டு தெரிந்துகொள்வாள்.

    ஹிந்தி மற்றும் தமிழுக்கு rhymesகளை print எடுத்து படிக்கச் சொல்கிறேன். ஹிந்தி மற்றும் தமிழில் இப்போது எழுத்துக்களை மட்டும் அடையாளம் காண்கிறாள்.

    ReplyDelete
  2. என் மகளுக்கு இன்னும் வார்த்தைக‌ள் வாசிக்க பழகவில்லை. இது எனக்கு உதவியாக இருக்கும். பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost