Sunday, January 24, 2010

பொரிகடலை சாதம்


புளி குழம்புக்கு, புளியை தண்ணில போட்டு, அடுப்புல வைச்சு, உப்பும் சுகரும் போடனும்..


தேங்காயை பருப்போட(பொரிகடலை) போட்டு, மிஃக்சியில அரைச்சா சட்னி வரும்.


இதுவெல்லாம் தீஷு சொன்ன ரெசிபிஸ். தீஷுவிற்கு சமைக்க வேண்டும் என்ற ஆசையைப் புரிந்து கொண்டு, குழந்தைகள் சமையல் ஏதாவது செய்ய ஐடியா தேட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இரண்டு மூன்று மாதங்களை ஓட்டி விட்டேன்.

நேற்று சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவளை திசை திருப்ப, பொடி செய்ய பயன்படும் உரலைக் கொடுத்தேன். அவளாகவே பொரிகடலையை எடுத்து பொடி செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவள் சிறிது பொடி செய்தப்பின் அவளுக்கு சிறிது சர்க்கரை கொடுத்தேன். அதையும் பொடி செய்து ஒரு கிண்ணத்தில் கொட்டி சமைத்து முடித்து விட்டாள். சமைத்ததை எடுத்து அப்பா வந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று சிறிது சிறிதாக சாப்பிட்டு முடித்து விட்டாள். அப்பாவிற்காவது எடுத்து வைக்க வேண்டும் என்று தோன்றியது. அம்மாவுக்கு.. அம்மாவின் ஞாபகமே இல்லை. ஏன் எனக்குக் கொடுக்கவில்லை என்றதற்கு நீ சாப்பிட்டா ஃபுல்லா சாப்பிட்டு விடுவ என்று பதில் வேறு. என்னத்தச் சொல்ல?

மறுநாளும் இதே மாதிரி செய்து அப்பாவிற்கு, அம்மாவிற்கு (ஏதோ போகிறது என்று) கொடுத்தாள். இப்பொழுது எப்பவும் உரலும் கையுமாக இருக்கிறாள். நேற்று என்னை அழைத்து சொன்னாள், "வா உனக்குச் சமைக்கச் சொல்லித்தருகிறேன்"


?????

4 comments:

  1. :) சூப்பர். சின்ன சப்பாத்தி கல் குழவி கொடுங்க. இதுவும் கண்ணுக்கும், கைக்கும் பயிற்சிதானே கலக்கட்டும் தீஷூ.

    ReplyDelete
  2. :-)))மிகவும் ரசித்தேன்1

    ReplyDelete
  3. :))))))

    hai

    ஒரே நாள்ல உங்களுக்கு சமையல் ட்ரெய்னிங்க் கொடுக்குற அளவுக்கு வந்தாச்சா.

    ம் சூப்பர் தீஷூ.

    ReplyDelete
  4. good to hear.. will try with my kids!!

    VS Balajee

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost