Wednesday, February 11, 2009

மறுபடியும்

தீஷுவிற்கு இரண்டு வயது முதல் அவளோடு ஆக்டிவிட்டீஸ் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பிற்கும் பொழுது, ஸ்பூன் மூலம் பொருட்களை மாற்றுதல், கலர் பிரித்தல் (Sorting), ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்குக் கொட்டுதல் (Pouring) போன்றவைகள் செய்தோம். அப்பொழுது அவளுக்கு அந்த வயதிற்கு ஏற்றவாறு கவனச் சிதறல் அதிகம். ஸ்பூன் மூலம் மாற்ற சொன்னால் கையால் மாற்றுவாள், தரையில் கொட்டுவாள். பொதுவாக நான் இப்படி செய், அப்படி செய் என்று சொல்ல மாட்டேன். ஒரு முறை செய்து காட்டுவேன். அவள் செய்வதற்கு தயாராகயிருந்தால், செய்ய விட்டு விடுவேன். விளையாண்டால் விளையாட விட்டு விடுவேன். எங்களுக்கான விளையாட்டு நேரம். அவளை டென்ஷன் ஆக்குவதற்கு விரும்பம் இருந்ததில்லை. தம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை அவளுக்கு ஏற்படுத்தவே விரும்பினேன். ஆனால் இப்பொழுது அதே ஆக்டிவிட்டீஸை எப்படி செய்கிறாள் என்று பார்க்க விரும்பினேன். எத்தனை மாற்றங்கள். கிட்டத்தட்ட 60 கற்களை மாற்ற சொன்னேன். ஒவ்வொன்றாக மாற்றினாள். ஒன்று கூட கீழே விழவில்லை. முடித்தவுடன் உன் turn என்றாள். நான் செய்ய ஆரம்பிக்கும் முன் செய்து காட்டி இப்படி செய்ய வேண்டும் என்றாள். நான் மாற்ற ஆரம்பித்த சிறிது நேரத்திற்கு பிறகு அந்த இடத்தை விட்டு, சற்று தள்ளி அமர்ந்து விட்டாள் (நான் அப்படி தான் செய்வேன்). நான் மாற்றி முடித்தவுடன் "Good Job" என்றாள். கல்லையும் கிண்ணத்தையும் எடுத்து வைத்து விட்டாள். Thanks to Montessori..

வெவ்வேறு வரிசையில் alphabets டைப் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். Flash கார்டில் வெவ்வேறு வரிசையில் alphabets வரும்படி, Flash கார்டு அட்டைகளை கலைத்துக் கொடுத்தேன். பிரிண்ட் அவுட்டில், அட்டையில் வரும் எழுத்தை வட்டம் போட வேண்டும். தீஷு நன்றாக செய்தாள். ஆனால் வட்டத்திற்கு பதில் அந்த எழுத்தை, பிரிண்ட் அவுட்டில் அந்த எழுத்திற்கு கீழே எழுதினாள். அது போல Captial lettersசும் செய்தோம். இது படிக்கும் முறையான இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்திற்கு கண்களை நகர்த்த பயிற்சியும், எழுத்துக்களை ஞாபகப்படுத்தவும் உதவும்.

4 comments:

  1. /*அவளை டென்ஷன் ஆக்குவதற்கு விரும்பம் இருந்ததில்லை. தம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை அவளுக்கு ஏற்படுத்தவே விரும்பினேன்*/
    நல்ல எண்ணம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாவ்!இது எக்ஸ்ட்ரா அக்டிவிடியாக இருக்கிறதே!!
    GOOD JOB!!!

    ReplyDelete
  3. //எத்தனை மாற்றங்கள். கிட்டத்தட்ட 60 கற்களை மாற்ற சொன்னேன். ஒவ்வொன்றாக மாற்றினாள்//

    அசத்தறாங்க தீஷூ!

    //இது படிக்கும் முறையான இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்திற்கு கண்களை நகர்த்த பயிற்சியும், எழுத்துக்களை ஞாபகப்படுத்தவும் உதவும்.
    //

    சுவாரசியம்!

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost