Thursday, January 29, 2009

பயமாயிருக்கு

சிறிது உடல் நல குறைவினால், போன ஒரு வாரமாக ஒய்வு எடுத்தேன். மற்ற நாளிலும் ஒண்ணும் பெருசா வேலை செய்வது கிடையாது. இது official rest. மற்ற நாட்களில் Unofficial rest.

நேற்று சாப்பிட்டு முடித்தவுடன், கையில் ப்ளேட்டை வைத்துக் கொண்டே, ஏதையோ யோசித்துக் கொண்டுயிருந்தேன். தீஷு என்னைப் பார்த்து, "சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு இருக்காத. கை வலிக்குது, கால் வலிக்குது, மூக்கு(?) வலிக்குதுனு. எந்திரிச்சிப் போய் ப்ளேட்டை வை" என்றாள். அதிர்ந்து விட்டேன். என் அம்மா,மாமியாரிலிருந்து, என் கணவர் வரை யாருமே என்னை அப்படி சொன்னதில்லை. இரண்டேமுக்கால் வயதில் இப்படி என்றால், இருபது வயதில்? பயமாயிருக்கு.

7 comments:

  1. இப்பல்லாம்....
    அம்மா,மாமியார் மற்றும் உறவினர் அருகில்லாத குறையை நம் குழந்தைகளே தீர்த்துவைப்பது ஒவ்வோர் வீட்டிலும் நிகழ்கிறது போல:)

    ReplyDelete
  2. :-))
    ம்... இப்படி தாங்க... வீட்டில பெரியவங்க இல்லாத குறையை தீர்த்து வைக்கிறாங்க.. அட்லீஸ்ட் இந்த மாதிரி அதட்டறதில...

    ReplyDelete
  3. :)-

    என்னாதிது, உங்க மாமியாரே பொண்ணா வந்துட்டாங்களோ

    ReplyDelete
  4. ponnunga ellarumay ippadidhaan irukaanga(maamiyaar maathiri).

    ReplyDelete
  5. //கை வலிக்குது, கால் வலிக்குது, மூக்கு(?) வலிக்குதுனு. //

    ஹஹ்ஹா!! :-))) ரசித்தேன்!

    //இரண்டேமுக்கால் வயதில் இப்படி என்றால், இருபது வயதில்? பயமாயிருக்கு.//

    :-)

    அப்புறம் இப்போ நல்லாயிருக்கீங்களா?

    ReplyDelete
  6. ஆமாம் அன்பு. என்ன சொல்ல?

    உண்மை அமுதா.

    எங்க மாமியார் ரொம்ப soft. தீஷு சில நேரங்களில் என்னை மாதிரி.. அது தான் பயமாயிருக்கு.

    ReplyDelete
  7. உண்மை சசிரேகா.

    நல்லா இருக்கேன் முல்லை. நன்றி.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost