Tuesday, October 7, 2008

வெட்டுதல் + கூட்டுதல்



கத்திரிக்கோலை கை கண் ஒருங்கிணைப்பை (Eye hand Co-ordination) அதிகரிக்கப் பயன்படுத்தலாம். தீஷு அவ்வப்பொழுது பயன்படுத்துவாள். ஆனால் நேராக வெட்டத் தெரியாது. கொஞ்சம் வித்தியாசப்படுத்தவும், நேராக பேப்பரை வெட்டப் பழக்கவும், நான் பேப்பரை Strip Stripபாக வெட்டிக் கொடுத்தேன். தீஷு வெட்டின பேப்பரை வெட்ட கஷ்டப்பட்டாள். ஆகையால் மீண்டும் முழு பேப்பரையே கொடுத்து வெட்ட சொன்னேன். 30 நிமிடங்கள் வரை வெட்டிக் கொண்டு இருந்தாள்.





அடுத்ததாக அவளை வெட்டினப் பேப்பரை கூட்டி சுத்தம் செய்ய பழக்கினேன். எழுதும் குச்சியினால் ஒரு வட்டம் போட்டு அதில் பேப்பர் குப்பையை வைக்க சொன்னேன். சுலபமாக செய்து முடித்து விட்டாள். பின் முறத்தில் அள்ள சிறிது கஷ்டப்பட்டாள். சில நேரங்களில் கையை பயன்படுத்தி பேப்பரை எடுத்து முறத்தில் போட்டாள். முறத்தில் உள்ளதை குப்பைத் தொட்டியிலும் போட்டு விட்டாள்.


முடித்தவுடன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம், பெருமிதம்.

7 comments:

  1. வெட்டுவதென்றால் குழந்தைகளுக்கு கொள்ளைப் பிரியம். ஒரு கட்டத்தில் இது அதிகமாகி, புதிய செய்தித்தாள்களைக் வெட்டுமளவிற்கு வந்துவிட்டது!! :-))). அதனால் இப்போது பொம்மை கத்தரிக்கோல்தான். வெட்டும், ஆனா வெட்டாது!! தீஷூவோட புன்னகை க்யூட்!!

    ReplyDelete
  2. ஆமாம் சந்தனமுல்லை. ஏதாவது ஒன்றை பழக்கிவிட்டால், அதை நன்றாக பழகும் வரை, செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. முல்லை.. வெட்டும் ஆனா வெட்டாது சூப்பரு..
    அது தான் எங்க வீட்டுலயும் இத்தன நாள் ஓடிச்சு..இப்ப அய்யா வளர்ந்துட்டார் அக்கா வெட்டற மாதிரி வரலை நிஜக்கத்திரிக்கோல் வேணும்ன்னு அதை எடுத்து வெட்டித்தள்ளரார்.

    இதுல என்ன பயம்ன்னா பொம்மை கத்திரிக்கோல் வச்சு அப்பப்ப ஹேர் கட் செய்வதா விளையாண்டிருக்கோம்.. இப்ப நிஜம் வச்சு அய்யா ஒரு நாள் ட்ரை செய்ய போயிட்டார். :(

    ReplyDelete
  4. வெட்டும், ஆனா வெட்டாது!!
    NICE

    தீஷு GOOD,
    தீஷுவோட அம்மா VERY VERY GOOD

    ReplyDelete
  5. //இதுல என்ன பயம்ன்னா பொம்மை கத்திரிக்கோல் வச்சு அப்பப்ப ஹேர் கட் செய்வதா விளையாண்டிருக்கோம்.. இப்ப நிஜம் வச்சு அய்யா ஒரு நாள் ட்ரை செய்ய போயிட்டார். :(//

    ஹஹ்ஹா...:-). பொம்மைக்கு மட்டும்தான் ஹேர்கட்டா? :-))

    ReplyDelete
  6. வெட்டும் வெட்டாது சங்கதி எல்லாம் ரொம்ப நாளைக்கு தாங்காது முத்துலெட்சுமி. சீக்கிரமா கண்டுப்பிடிச்சிருவாங்க.
    பாத்துங்க.. வேற யார் முடியையாவது வெட்டி விட்டுட போறான்.

    ReplyDelete
  7. நன்றி அமிர்தவர்ஷினிஅம்மா.

    பொம்மைக்கு Haircut இல்லை சந்தனமுல்லை. அவனுக்கு.
    என் friendடோட தம்பி கோபத்தில அவளுடைய நீள முடியை ஒரு பக்கம் மட்டும் வெட்டி விட்டுடான்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost