அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
டிசெம்பர் 31 இரவில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் எனக்குப் பிடித்த உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அந்த ஆண்டு நல்லதொரு ஆண்டாக அமையும் என்று எனக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு. என் தோழிகளிடம் சொன்னவுடன் அனைவரும் வருவதாகச் சொன்னார்கள். வீடு பத்தாது என்பதால் பார்ட்டி ஹாலில் செய்யலாம் என்று தோன்றியது. விழாவிற்கு நான் பொறுப்பேற்றேன். ஹால் புக் செய்ததிலிருந்து வேலை ஆரம்பித்தது.
முதலில் அனைவரும் ஒரு உணவு சமைத்து எடுத்து வருவது என்று ஆரம்பித்து, அன்னைக்கும் சமைக்க வேண்டுமா என்று பிட்ஸா ஆர்டர் செய்து விட்டோம். யாரை எல்லாம் கூப்பிடுவது, எவ்வளவு பணம் வசூல் செய்வது, எதில் செலவு செய்வது என்று நான் எக்ஸல்லில் பிஸியாகி விட்டேன். குழந்தைகள் கலை நிகழ்ச்சி செய்யலாம் என்று ஒரு தோழி சில குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார்.
ஏழரை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி பன்னிரெண்டு மணிக்கு கேக் வெட்டியதும் நிறைவுற்றது. முதலில் சாப்பாட்டு கடை. முடித்தவுடன் குழந்தைகள் நிகிழ்ச்சி. ஒரு மூன்று வயது சிறுவன் கிட்டாருடன் பாடியது அருமையாக இருந்தது. அடுத்து சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுகள். முடித்தவுடன் ஒரு மணி நேரத்திற்கு நடனம். சரியாக பன்னிரெண்டு மணிக்கு கேக் வெட்டினோம். மிகவும் நன்றாக நடந்தது பார்ட்டி.
என் இல்ல நிகழ்ச்சி இல்லாத ஒன்றுக்கு நான் பொறுப்பேற்பது இது தான் முதல் முறை. நல்லதொரு அனுபவமாக இருந்தது. நம் இல்ல நிகழ்ச்சிக்கு நாம் என்ன நினைக்கிறோமோ இதைச் செய்ய முடியும். பிறரிடம் பணம் வசூல் செய்து செய்யும் பொழுது அவர்களின் ஆலோசனையும் முக்கியம் என்பதால் பல ஐடியாக்கள் கேட்டு மண்டை குழம்பி போனது. இறுதி மூன்று நாட்களில் நான் போனில் பேசியது மட்டும் பல மணி நேரங்கள். இந்தக் கடை பிட்ஸா வேண்டாம், அந்தக் கடை பிட்ஸா வேண்டாம் என்று ஆரம்பித்த மோதல் எப்பொழுது நடனம் ஆரம்பிப்பது என்பது வரை தொடர்ந்தது. ஆனால் இறுதியில் அனைவருக்கும் பிடித்திருந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
அந்த விழா முடிந்தவுடன் நான் சம்முவின் பிறந்தநாள் விழாவில் பிஸியாகி விட்டேன். வரும் 12ம் தேதி சம்முவிற்கு இரண்டவது பிறந்த நாள். உங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் வேண்டுகிறோம்.!!