Friday, January 10, 2014

புத்தாண்டு மற்றும் பிறந்தநாள்!!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! 

டிசெம்பர் 31 இரவில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் எனக்குப் பிடித்த உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அந்த ஆண்டு நல்லதொரு ஆண்டாக அமையும் என்று எனக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு. என் தோழிகளிடம் சொன்னவுடன் அனைவரும் வருவதாகச் சொன்னார்கள். வீடு பத்தாது என்பதால்  பார்ட்டி ஹாலில் செய்ய‌லாம் என்று தோன்றியது. விழாவிற்கு நான் பொறுப்பேற்றேன். ஹால் புக் செய்ததிலிருந்து வேலை ஆரம்பித்தது.

முதலில் அனைவரும் ஒரு உணவு சமைத்து எடுத்து வருவது என்று ஆரம்பித்து, அன்னைக்கும் சமைக்க வேண்டுமா என்று பிட்ஸா ஆர்டர் செய்து விட்டோம். யாரை எல்லாம் கூப்பிடுவது, எவ்வளவு பணம் வசூல் செய்வது, எதில் செலவு செய்வது என்று நான் எக்ஸல்லில் பிஸியாகி விட்டேன். குழந்தைகள் கலை நிகழ்ச்சி செய்யலாம் என்று ஒரு தோழி சில குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார். 

ஏழரை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி பன்னிரெண்டு மணிக்கு கேக் வெட்டியதும் நிறைவுற்றது. முதலில் சாப்பாட்டு கடை. முடித்தவுடன் குழந்தைகள் நிகிழ்ச்சி. ஒரு மூன்று வயது சிறுவன் கிட்டாருடன் பாடியது அருமையாக இருந்தது. அடுத்து சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுகள். முடித்தவுடன் ஒரு மணி நேரத்திற்கு நடனம். சரியாக பன்னிரெண்டு மணிக்கு கேக் வெட்டினோம். மிகவும் நன்றாக நடந்தது பார்ட்டி.

என் இல்ல நிகழ்ச்சி இல்லாத ஒன்றுக்கு நான் பொறுப்பேற்பது இது தான் முதல் முறை. நல்லதொரு அனுபவமாக இருந்தது. நம் இல்ல நிகழ்ச்சிக்கு நாம் என்ன நினைக்கிறோமோ இதைச் செய்ய முடியும். பிறரிடம் பணம் வசூல் செய்து செய்யும் பொழுது அவர்களின் ஆலோசனையும் முக்கியம் என்பதால் பல ஐடியாக்கள் கேட்டு மண்டை குழம்பி போனது. இறுதி மூன்று நாட்களில் நான் போனில் பேசியது மட்டும் பல மணி நேரங்கள். இந்தக் கடை பிட்ஸா வேண்டாம், அந்தக் கடை பிட்ஸா வேண்டாம் என்று ஆரம்பித்த மோதல் எப்பொழுது நடனம் ஆரம்பிப்பது என்பது வரை தொடர்ந்தது. ஆனால் இறுதியில் அனைவருக்கும் பிடித்திருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 

அந்த விழா முடிந்தவுடன் நான் சம்முவின் பிறந்தநாள் விழாவில் பிஸியாகி விட்டேன். வரும் 12ம் தேதி சம்முவிற்கு இரண்டவது பிறந்த நாள். உங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் வேண்டுகிறோம்.!!

18 comments:

  1. சம்முவிற்கு எனது இதயங்கனிந்த இரண்டாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத்தமிழன்!

      Delete
  2. வணக்கம்

    குட்டிப் பாப்பா சம்முவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

    http://2008rupan.wordpress.com(புதிய பதிவாக... என்னுடைய வலைப்பக்கம் கட்டுரைப்போட்டிக்கான காலம் நீடிப்பு)
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  4. சம்மு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... இந்த வருடம் அனைத்தும் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. 12ம் தேதி சம்முவிற்கு இரண்டவது பிறந்த நாள். உங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வதத்தையும் வேண்டுகிறோம்.!!//

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    குழந்தை சம்மு எல்லா வளமும், நலமும் பெற்று வாழ் வாழ்த்துகிறேன்.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அம்மா!

      Delete
  6. வணக்கம்...

    உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

    ReplyDelete
    Replies
    1. சென்று பார்க்கிறேன் தனபாலன்!

      Delete
  7. தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    தங்கள் வலைபூவைத் தொடர்கின்றோம்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன், கீதா!

      Delete
  8. உங்களது திறமை எல்லாவிடங்களிலும் பரிமளிப்பது சந்தோஷமான விஷயம், தியானா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    சம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி அம்மா!

      Delete
  9. Happy Newyear and Happy b'day Sammu!

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துகள்....

    குட்டிம்மாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost