Thursday, August 1, 2013

சன்டயல் ‍(சுண்டல் அல்ல)

பழங்காலத்தில் சூரியனின் நிலையைப் பொருத்து நேரத்தைக் கணக்கிடம் முறை இருந்தது. சன்டயல் எனும் கருவியால் சூரியனின் நிலையைக் கொண்டு நேரத்தைக் கிட்டத்தட்ட துல்லியமாகக் கணக்கிட முடியும். அதில் பல வடிவங்களும் சிக்கலான பல கணித முறைகளும் உள்ளன. நாங்கள் எளிய முறையில் முயற்சித்தோம்.

ஒரு பேப்பர் தட்டின் நடுவில் சிறு துளையிட்டு பென்சிலை துளையில் நுழைத்து விட்டோம். வெயில் படும் இடத்தில் பேப்பர் தட்டை வைத்து அதைச் சுற்றி சாக்பீஸால் வரைந்து கொண்டோம்.  தட்டு காற்றில் நகராமல் இருக்க ஒரு கல்லைத் தட்டின் மேல் வைத்திருந்தாலும், ஒரு வேளை காற்றில் நகர்ந்து விட்டால் மீண்டும் சரியான இடத்தில் வைப்பதற்காக தான் வரைந்து வைத்தோம். நாங்கள் சரியாக பனிரெண்டு மணிக்கு ஆரம்பித்தோம். 



பென்சிலின் நிழல் தட்டில் படும் இடத்தை குறித்துக் கொண்டு, நேரத்தை எழுதிக் கொண்டோம். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் நிழல் படும் இடத்தைக் குறித்துக் கொண்டோம். இவ்வாறு தொடர்ந்து 5 மணி நேரம் செய்தோம். ஒவ்வொரு மணி நேரத்திலும் நிழல் நகரும் என்று தீஷுவிற்கு தெரிந்திருந்தாலும், நிழலின் நீளமும் மாறியது ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் நிழல் அதே நேரத்தில் அதே இடத்தில் வரும் என்று கணித்தது நடந்ததில் அவளுக்கு மகிழ்ச்சி. வெவ்வேறு பருவத்தில் மாற்றம் இருக்கும் என்று சொன்னதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெயில் காலம் முடிந்தவுடன் மீண்டும் அதே தட்டைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.

முன்பு ஒரு முறை எங்கள் நிழல் வைத்துச் செய்திருக்கிறோம். ஒரே இடத்தில் நின்று ஒவ்வொறு மணிநேரம் எங்களின் நிழலை வரைந்து இருக்கிறோம். அதில் நேரத்தைக் கணக்கிட முடியவில்லை என்றாலும் நம் நிழலைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு எளிய முறை.

10 comments:

  1. என்னவெல்லாம் செய்து பார்க்கிறீர்கள்...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மறுநாள் நிழல் அதே நேரத்தில் அதே இடத்தில் வரும் என்று கணித்தது நடந்ததில் அவளுக்கு மகிழ்ச்சி.

    மகிழ்ச்சியான கற்றல் அனுபவம் ..!

    ReplyDelete
  3. தும்கூரில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தபோது இந்த சன்டயல் செய்த அனுபவம் நினைவுக்கு வந்தது.
    உங்களது கற்பனைத் திறன் அசத்தலாக இருக்கிறது.

    கீழே இருக்கும் இணைப்பை பாருங்கள்: குழந்தைகளுக்கான கதைகள் எழுதுபவர் இவர். சமீபத்தில் குழந்தைகள் இலக்கியப் பரிசு பெற்றிருக்கிறார்.
    http://vizhiyan.wordpress.com/2013/07/05/dinosaurus-meets-niji-juju-kids-stroy/

    வாழ்த்துக்கள், உங்களுக்கும், தீஷுவுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா உங்கள் கருத்துரைக்கும் தகவலுக்கும். நேரம் கிடைக்கும் பொழுது அவரின் கதைகளைப் படித்துப் பார்க்கிறேன்..

      Delete
  4. எத்தனை எத்தனை முயற்சிகள்....

    தொடரட்டும் உங்கள் முயற்சிகளும், வெற்றிகளும்.

    ReplyDelete
  5. பிரமாதம் தியானா..அருமையோ அருமை..வாழ்த்துகள்!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost