Saturday, July 27, 2013

எரிமலையும் செய்யலாம், பலூனும் ஊதலாம்..

வினிகரில் பேக்கிங் சோடா கலந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். அதை வைத்து செய்தவை.

எரிமலை செய்த விதம்

போட்டோவில் கிளிக்கவும்



பலூன் ஊதிய விதம்

பாட்டிலில் வினிகர் எடுத்துக் கொண்டோம். ஊதாத பலூனில் பேக்கிங் சோடா போட வைத்துக் கொண்டோம். பலூனின் வாய் பகுதியை இழுத்து, பாட்டின் வாயில் மாட்டி விட்டோம். பலூனிலிருந்து பேக்கிங் சோடா, பாட்டிலினுள்ள வினிகரில் பட்டதும், கார்பன் டை ஆக்சைடு வெளிப்பட்டு, பலூனை ஊதச் செய்யும்.




இந்த முறை செய்தது

ஜிப் லாக் பாகில் காற்று உருவாவதைப் பார்த்தோம்.

தேவையானப் பொருட்கள்

1 ஜிப் லாக் பேக்

2. வினிகர்

3. பேக்கிங் சோடா

4. டிஸ்யூ பேப்பர்

செய்முறை :

1. ஜிப் லாக் பேக்கில் வினிகரை ஊற்றிக் கொள்ளவும்.

2. டிஸ்யூ பேப்பரில் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும்.

3. ஜிப் லாக்கை முக்கால் பாகம் மூடி, இடைவெளியில் டிஸ்யூ பேப்பரை உள்ளே போட்டு, முழுவதுமாக மூடி விடவும்.

4. வினிகரில் பேக்கிங் சோடா பட்டவுடன், கார்பன் டை ஆக்ஸைடு வெளிபட்டு, ஜிப் லாக்கை நிரப்பத் தொடங்கும்.

5. காற்றை நிரப்ப முடியாமல் ஒரு நிலையில் ஜிப் லாக் வெடிக்கும்.

மிகவும் எளிதான செய்முறை. ஆனால் விருப்பமாகச் செய்தோம்.

6 comments:

  1. செய்து பார்த்திடுவோம்... நன்றி...

    ReplyDelete
  2. ஜிப் லாக்கில் செய்தது இல்லை..கிளம்புவதற்கு முன் பலூன் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள், வேலைப்பளுவில் முடியவில்லை, வருத்தமாக இருக்கிறது. இங்கு முயற்சி செய்யவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ்.. அனைத்துப் பொருட்களும் இந்தியாவிலும் கிடைக்குமென்பதால் அங்கும் எளிதாகச் செய்யலாம். வருத்தப்பட வேண்டாம்.

      Delete
  3. புதிது புதிதாய் முயற்சிகள்......

    நல்ல விஷயங்கள் தொடரட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் கருத்துக்கும் வருகைக்கும்...

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost