Wednesday, August 21, 2013

பள்ளியில் சேர்ந்த கதை


தீஷு செல்வது மாக்னெட் ஸ்கூல் என்று அழைக்கப்படும் அதிக டிமான்ட் உள்ள ஸ்கூல். பொதுவாக அமெரிக்காவில் நாம் வாசிக்கும் ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட்டிலுள்ள பள்ளியில் மட்டுமே குழந்தைகளைச் சேர்க்க முடியும். ஆனால் இந்த மாக்னெட் ஸ்கூலில் ஸ்கூல் போர்டில் வரையுறுக்கப்பட்ட அனைத்து பகுதியிலிருந்தும் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இருக்கும் இடங்களை விட அதிக எண்ணிகையில் விண்ணப்பம் வந்தால் லாட்டெரி முறையில் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் லாட்டெரிக்குச் செல்லும் அளவுக்கு விண்ணப்பம் வந்துவிடும்.

நாங்கள் 2009 ஏப்ரலில் கலிஃபோர்னியாவுக்கு வந்தோம். அந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்க இருந்த கல்வி ஆண்டுக்கு ஜனவரியிலேயே லாட்டெரி முடிந்து இருந்தது. அதாவது லாட்டெரி முடிந்து மூன்று மாதங்கள் கழித்தே நாங்கள் இங்கு வந்திருந்தோம். எங்கள் அபார்ட்மென்ட்டிலிருந்த இரண்டு இந்திய குழந்தைகளுக்கு (தீஷுவின் வகுப்பு தான்) மாக்னெட் பள்ளியில் லாட்டெரியில் இடம் கிடைத்திருந்தது. அவுங்களுக்கு எல்லாம் லக் என்று மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் டிஸ்ட்ரிக் பள்ளியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்திருந்தோம். 

சிறிது நாட்கள் கழித்து டிஸ்ட்ரிக் எஜுகேஷன் டிபார்ட்மென்ட்டிலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நாங்கள் சேரவிருந்த பள்ளி மாணவர்கள் அதற்கு முந்திய வருடம் அதாவது 2008 கல்வி ஆண்டில் ஆங்கிலத்தில் கலிஃபோர்னியா ஸ்டாண்டார்ட்க்கு மதிப்பெண்கள் பெறவில்லை என்பதால் அந்தப் பள்ளி கிரேட் "பி" யில் உள்ளது என்றும் தரமில்லா பள்ளி என்று எண்ணும் பெற்றோர்கள் அந்த டிஸ்ட்ரிக்கிலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று எங்களுக்கு மூன்று பள்ளிகளுக்குச் சாய்ஸ் கொடுத்திருந்தார்கள். அந்த மூன்று பள்ளிகளில் ஒன்று மாக்னெட் பள்ளி. எங்களால் நம்பமுடியவில்லை. மாக்னெட் பள்ளியை முதல் சாய்ஸாகவும், மற்ற இரண்டு பள்ளிகளை இரண்டாம் மூன்றாம் சாய்ஸாகவும்  போட்டு விண்ணப்பித்து இருந்தோம். நாங்கள் எதிர்பார்க்காத முறையில் எங்களுக்கு மாக்னெட் பள்ளியில் இடம் கிடைத்தது. 

வெயிட்டிங் லிஸ்ட்டிலுள்ள எங்களுக்கு அட்மிஷன் போடாமல் உங்களுக்கு எப்படி கொடுத்தார்கள் என்று ஒரு தமிழ் அம்மா என்னிடம் கேட்டார்கள். சத்தியமாக எங்களுக்குத் தெரியவில்லை. யாரோ ஆங்கிலத்தில் குறைவாக மதிப்பெண் எடுத்திருந்ததால் எங்களுக்குப் பள்ளியில் இடம் கிடைத்ததில் எனக்குப் பட்டர்ஃப்ளை எபெக்ட்டில் நம்பிக்கை வந்தது.

டிஸ்கி: இன்று தீஷுவிற்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்துவிட்டது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் அவளை இந்தப் பள்ளியில் விட்டது ஞாபகம் வந்ததன் விளைவே இந்தப் பதிவு.

10 comments:

  1. ***வெயிட்டிங் லிஸ்ட்டிலுள்ள எங்களுக்கு அட்மிஷன் போடாமல் உங்களுக்கு எப்படி கொடுத்தார்கள் என்று ஒரு தமிழ் அம்மா என்னிடம் கேட்டார்கள். ***

    When it comes to their kids education like admission of competition, our Indian parents act very impolite and indecent. I am not sure that mom's daughter/son belongs to your daughter category- meaning, she applied from a bad school district.

    In any case, I hear even college admissions also like this. Some kids who scored high ACT score and with a high GPA are turned down but some other kids who seem to have lower ACT score and GPA are admitted! It is hard to understand at times! They follow some "formula" and look at some factors which we easily overlook. They may not explain that to every student why they turned down and all..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி வருண். நம் மக்களிடம் போட்டி மனப்பான்மை அதிகம் தான். காலேஜ் அட்மிஷனில் பல்வேறு விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்று நானும் கேள்விப்பட்டுயிருக்கிறேன். ஆனால் எங்களுக்கு அப்படி கணக்கிட்ட மாதிரி தெரியவில்லை. லாட்டெரி முறையில் கூட தேர்ந்தெடுத்திருக்கலாம். எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.

      Delete
  2. உங்களின் ஸ்மார்ட்னஸ் அவர்களுக்கு தெரிய வந்திருக்கும் அதனால்தான் உங்களின் குழந்தைக்கு அழைப்பு வந்திருக்கிறது..


    அதிர்ஷடகார குழந்தை வாழ்வில் எல்லாம் பெற்று வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் ஸ்மார்ட்னஸ் தெரிந்தும் எப்படி கொடுத்தார்கள் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்..

      Delete
  3. எப்படியோ...

    தீஷு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.தனபாலன்..

      Delete
  4. mentality of some people..nandu kadhai dhan...
    Best wishes to Dheekshu :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ் உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

      Delete
  5. ஓ! இவ்வளவு இருக்கா? புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன், தியானா!

    ReplyDelete
  6. // தரமில்லா பள்ளி என்று எண்ணும் பெற்றோர்கள் அந்த டிஸ்ட்ரிக்கிலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று எங்களுக்கு மூன்று பள்ளிகளுக்குச் சாய்ஸ் கொடுத்திருந்தார்கள்//.
    இப்படியெல்லாம் கூட நடந்து கொள்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.இங்கு அப்படி நடந்திருந்தால் அதை மறைக்க முயல்வார்களே தவிர இப்படி ஒரு வாய்ப்பு தருவார்களா என்ன?
    மொத்தத்தில் நீங்கள் அதிர்ஷடசாலி. (கலிஃபோர்னியாவில் எங்கு இருக்கிறீர்கள் என் மகள் இருப்பது சான் டியாகோவில்)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost