தீஷு முதல் வகுப்பு படிக்கிறாள். மாண்டிசோரி முறையில் அல்ல.. பப்ளிக் பள்ளியில் நம் கல்வி முறையில். இந்த ஆண்டில் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும் கணணி, இசை, விளையாட்டு மற்றும் நூலக வகுப்புகள் வாரம் ஒரு முறை உண்டு.
கணிதத்தில் மனக்கணக்கு தான் முக்கியம். ஒர் இலக்க கூட்டல் மற்றும் கழித்தல் 30 கணக்கை 2 நிமிடத்தில் செய்ய வேண்டும். 2 நிமிடங்களில் செய்ய பழகி விட்டால் 1 நிமிடத்தில் செய்ய வேண்டும். மேலும் பணம் (Money), அளவு (Measurement) முதலியன சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அறிவியலில் Living/Non living, Matters மற்றும் Weather பற்றி மட்டும் படிக்கிறார்கள்.
வீட்டுப்பாடம் வாரம் ஒரு முறை தான். திங்கள் கொடுக்கும் வீட்டுப்பாடத்தை வெள்ளி அன்று திருப்பிக் கொடுத்தால் போதும். அதிகமும் இருக்காது. 5 பக்கங்கள் வரை இருக்கும். உட்கார்ந்து செய்தால் 1 மணி நேரத்தில் முடித்து விடலாம். ஆனாலும் தீஷு நான்கு நாட்கள் செய்வாள்.
வெள்ளி மாலை தமிழ்ப் பள்ளி செல்கிறாள். தமிழில் மூன்று எழுத்து வார்த்தைகள் எழுத்துக் கூட்டி வாசிக்கிறாள். இந்திய வரும் பொழுது தேவைப்படும் என்று (பெங்களூரில் வசிக்கப்போவதால்) இந்தி சொல்லிக் கொடுத்தோம், கொடுக்கிறோம், கொடுப்போம்.. ஒவ்வொரு முறையும் இந்தி உயிர் எழுத்து முடித்தவுடன் சிறிது இடைவெளி விடுவோம்..அடுத்த சில நாட்கள் கழித்து உயிர் எழுத்து மறந்து மீண்டும் உயிர் எழுத்திலிருந்து ஆரம்பிக்கிறோம்.
தீஷுவை மாண்டிசோரி பள்ளியில் சேர்க்காததில் வருத்தம் எதுவும் இல்லை. டைம் டெஸ்ட், கம்யூட்டரில் தேர்வு என்று அனைத்தையும் பழகிக் கொண்டாள். அவளுக்கு இந்த முறையும் பிடித்திருக்கிறது. ஆசையாக பள்ளி செல்கிறாள்.
ஹிந்திக்கு இங்கேயும் அதே நிலைமை தான் ... சில நாட்கள் கழித்து மிக ஆழமாக மனதில் இருக்கும் :))
ReplyDeleteதீஷூவுக்கு வாழ்த்துகள். அவள் பள்ளியை, டெஸ்ட்களை விரும்புவது மகிழ்ச்சி. இங்கு இருக்கும் பள்ளிகளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு பாடதிட்டம், அதோடு ப்ராஜக்ட் என்று பயமுறுத்திவிடுகிறார்கள்.
ReplyDeleteஆமாம் கிரேஸ்.. மிக ஆழத்தில் இருப்பதால் கேட்கும் பொழுது அதனால் வெளியே வர முடியல.. :-))
ReplyDeleteஆமாம் முல்லை.. ப்ராஜெக்ட் பெற்றவர்களுக்கு.. குழந்தைகளுக்கு இல்லை..இங்கே ஸிலபஸ் அதிகம் இல்லாததில் சற்றே நிம்மதி...
ReplyDelete