குழந்தை பிறப்பதற்கு முன்னால் கருவிலிருந்தே கற்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. குழந்தை பிறந்த பின் தன் ஐம்புலத்தினால் தன்னை சுற்றியுள்ள பொருட்கள் மூலம் கற்றுக் கொண்டே இருக்கும். ஐம்புலத்தில் ஒன்றான பார்வை, பிறந்த குழந்தைக்கு 8 முதல் 15 இன்ச் வரை மட்டுமே இருக்கும். அதுவும் கருப்பு வெள்ளை போன்ற கான்ட்ராஸ்ட் (contrast) வண்ணங்கள் கொண்ட படங்கள் ஈர்க்கும் என்று படித்திருந்தேன்.
தீஷுவிற்கு குழந்தை மேல் பிரியம் வர எந்த பொருள் குழந்தைக்குச் செய்தாலும் தீஷுவை இணைத்துக் கொள்வேன்.முதலில் கருப்பு வெள்ளை படங்கள் கொண்ட படங்கள் இணைத்து குழந்தையின் முகத்திற்கு நேர் தொங்க விடலாம் என்று
http://www.sleepingbaby.net/jan/Baby/mobile.html
என்ற பக்கத்திலிருந்து பிரிண்ட் அவுட் எடுத்து, அட்டையில் ஒட்டி, நூலினால் கட்டிக் கொண்டோம். ஆனால் அட்டையில் ஒட்டியதால், சற்று கனமாக இருந்தது. இங்கு ஆணி அடிக்க முடியவில்லை. தொங்கும் நூலை டேப் கொண்டு ஒட்டி விட்டோம். ஆனால் சிறிது நேரத்தில் விழுந்துவிட்டது. முதல் ப்ராஜெட்டே சொதப்பல்.
தொங்க விட முடியவில்லை என்பதால் மேலும் சில படங்கள்
http://www.brillkids.com/free-download/infant-stimulation-cards.php
இருந்து பிரிண்ட் அவுட் எடுத்து குழந்தை படுத்திருந்த படுக்கைக்கு அருகிலிருந்த சுவரில் ஒட்டிவிட்டோம். பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்று இல்லை. நாமே கூட வரையலாம்.
தீஷுவிற்கு நாமே ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை. வெள்ளை கருப்பு பேப்பர்களை கொண்டு பேப்பர் வீவிங் முறையில் ஒரு படம் செய்து ஒட்டினோம். அது சம்முவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
அவள் அந்த ஆர்ட்டிடம் பேசும் வீடியோ
தீஷு அவளாகவே தங்கைக்குச் சொல்லிக் கொடுக்கும் வீடியோ
முதல் சில மாதங்களுக்கு முடிந்த வரை இவ்வாறு படங்கள் அவள் பார்வைப் படும் இடங்களில் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.
Super Dhiyana..Especially Dheekshu sollikudukkuradhu so sweet... very good Dheekshu! :)
ReplyDeleteNice .How old is the little one at that time?
ReplyDeleteThanks Grace.. When I told her abt your comment, she was blushing
ReplyDeleteThanks Sunitha. Around 2 to 3 months
I have a 1.5 month old baby. So this will be really useful for me.keep writting. :-)
ReplyDeleteWonderful :))
ReplyDeleteSure Sunitha..
ReplyDeleteThanks Agila...