Thursday, June 24, 2010

ஸில‌ப‌ஸ்

மாண்டிசோரியில் எனக்குப்பிடித்த முக்கிய விஷயம் - Follow the child. குழந்தை இயற்கையாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனே இருக்கும். ஒரு விஷயத்தில் குழந்தைக்கு விருப்பம் இல்லையென்றால் - ஒன்று அந்த விஷயம் அதற்கு புரிந்து கொள்ள கடினமானதாக இருக்கும் அல்லது மிகவும் எளிமையானதாக இருக்கும். மாண்டிசோரி பள்ளியில் குழந்தைக்கு விருப்பமானதை பயில்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே ஸில‌ப‌ஸ் பின்பற்றப்படுவதில்லை.

தீஷுவின் பள்ளியில் தீஷுவின் இந்த வருட ஸில‌ப‌ஸை என்னிடம் கேட்டார்கள். தீஷுவிற்கு என்ன தெரியும், எதில் விருப்பம் போன்றவற்றைக் கொண்டு இதை நான் தயாரித்தேன். இதை முழுக்க முழுக்க 100% உபயோகப்படுத்த மாட்டார்கள். அவள் விருப்பத்திற்கு தகுந்தாற் போல் மாற்றப்படும்.

3 comments:

  1. ரொம்ப நல்லாருக்கு இல்லே..மேலும், I love the way children are being assessed nowadays..No report cards..No ranks..

    ஸ்கூல்லேருந்து வந்ததும் ஆன்ட்டி இன்னைக்கு என்ன சொல்லிக்கொடுத்தாங்கன்னு கேட்டா "ஐயயே..ஆன்ட்டி சொல்லில்லாம் கொடுக்க மாட்டாங்க, நாங்களேதான் செய்யணும்" என்பாள்.

    நமது பள்ளிநாட்களை நினைத்துக்கொள்வேன்! :-))

    ReplyDelete
  2. ஆமாம் முல்லை. இப்பொழுது பள்ளியில் நம்மைப் போல் கஷ்டப்பட வேண்டாம். ஆனால் ஆறாம் வகுப்புக்கு மேல் நம்மைப்போல் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

    நன்றி அருணா..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost