Thursday, June 10, 2010

கவர்ந்த தருணங்கள் 11/06/2010

1. எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. அப்பா கிரிக்கெட் பார்ப்பதற்கு எங்கள் வீட்டின் மேல் தளத்திலுள்ள அவர் பாட்டி வீட்டிற்கு செல்வார். அங்கு இரண்டரை வயது குட்டி இருக்கிறான். தீஷுவிற்கு எப்பொழுதும் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். என்னிடம் கேட்டாள். அப்பொழுது தான் அங்கிருந்து வந்திருந்ததால் அப்புறம் போகலாம் என்றேன். மெதுவாக அப்பாவிடம் சென்று
"அப்பா... வர்ரீயா. மேல போய் கிரிக்கெட் பார்ப்போம்"
"கிரிக்கெட் முடிஞ்சி போச்சி"
(ஆச்சரியத்துடன்) "அப்படியா!! எப்ப?"
"போன வாரம்"
(ஏமாற்றத்துடன்)"சரி"
அப்பாவை நேரடியாக கூப்பிடாமல் என்னவொரு வில்லத்தனம்??


2. என் அம்மா வந்திருக்கிறார்கள். தீஷுவும் அவள் தோழியும்
தோழி: "உங்க பாட்டியை share பண்றீயா?.. எங்க பாட்டி ஊர்ல இருக்காங்க"
தீஷு : "சரி"
என்னிடம் தோழி அம்மா சொன்னவுடன், தீஷுவிடம் நான்..
நான்:"Share பண்றேன் சொன்னீயா?"
தீஷு: "ஆமா.. அவளுக்கும் நாலு பேரு வேணுமில"
சினிமா வசனம் அவளுக்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்கும் பொழுதே, அப்பா, அம்மா, குழந்தை, பாட்டி என்று நான்கு பேர் வீட்டில் இருக்க வேண்டும் என சொல்கிறாள் என்று புரிந்து அதிர்ச்சி நீங்கினேன்.


3. தீஷுவும் அவ‌ள் தோழியும் டாக்ட‌ர் விளையாட்டு விளையாண்டு கொண்டிருந்த‌ன‌ர். ப‌க்க‌த்து வீட்டுப்பாட்டி தீஷுவிட‌ம்

"நீ பெரிய‌வ‌ளான‌வுட‌ன் என்ன‌ ஆவ‌?"
டாக்டர் ஆவேன் என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்த‌வ‌ரிட‌ம், தீஷு
"நான் அம்மா ஆவேன்.. த‌ருண் அப்பா ஆவான்..ஏன்னா அவ‌ன் பாய்"


4. அப்பா தீஷுவிற்கு த‌ம்புசாமி என்று ஒரு ந‌கைச்சுவை க‌தை கூறினார். தீஷுவிற்கு அந்த‌க் க‌தை மிக‌வும் பிடித்துவிட்ட‌து. அவ‌ள் திரும்ப‌ திரும்ப‌ சொல்லிக் கொண்டிருந்தாள். தீடீரென்று,

"அப்பா நான் வ‌ம்புசாமி க‌தைச் சொல்ல‌வா?"
ச‌ரி என்ற‌வுட‌ன் த‌ம்புசாமி க‌தையில் த‌ம்புசாமி செய்த‌ அனைத்தையும் வ‌ம்புசாமி செய்தான்.
"என்ன‌டா, இது த‌ம்புசாமி க‌தை போல‌வே இருக்கு.."
"ஆமா.. வ‌ம்புசாமி த‌ம்புசாமியைப் பார்த்து காப்பி அடிச்சிட்டான். அது தான் அவ‌ன் போல‌வே செய்யிறான். "

4 comments:

  1. //"ஆமா.. வ‌ம்புசாமி த‌ம்புசாமியைப் பார்த்து காப்பி அடிச்சிட்டான். அது தான் அவ‌ன் போல‌வே செய்யிறான். "//

    :)))))))))))

    ReplyDelete
  2. //நீ பெரிய‌வ‌ளான‌வுட‌ன் என்ன‌ ஆவ‌?"
    டாக்டர் ஆவேன் என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்த‌வ‌ரிட‌ம், தீஷு
    "நான் அம்மா ஆவேன்.. த‌ருண் அப்பா ஆவான்..ஏன்னா அவ‌ன் பாய்"//

    cho sweet
    arumai dhisuvuk en mutthangal

    ReplyDelete
  3. சான்ஸே இல்ல தியானா..தீஷு நல்லா பேச கத்துகிட்டா..அதுவும் நாலு பேரு வேணுமில்ல..:)) முடியல..சட்-னு சிரிக்க வைச்சுட்டாங்க தீஷூ மேடம்!
    வம்புசாமி..தம்புசாமி - செம!!

    நல்ல கலெக்ஷன்ஸ்...:))

    கண்டிப்பா தொடர்ந்து எழுதுங்க..எங்களுக்காகவாவது!!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost