Tuesday, February 10, 2009

வெயில் ஞாயிறு

கடந்த ஞாயிறு அன்று குளிர் குறைந்து, சிறிது வெயிலும் இருந்தது. சிறிது நேரத்திற்கு ஸ்வெட்டர் இல்லாமல், குளிர் தாங்கும் படி இருந்தது. நான்கு மாதங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு வெதரைப் பார்த்தவுடன், தீஷுவை வெளியில் விளையாட அனுமதித்தோம். வீட்டின் முன்புறம் இருந்த பனி மெல்ல உருகி தண்ணீராகிருந்தது. அதில் தீஷு விளையாடும் பொழுது எடுத்த வீடியோ.



லாண்டரி முடித்து, துணிகளை மடிக்காமல் வைத்து விட்டு, சமைத்துக் கொண்டிருந்த பொழுது, இன்னும் சாக்ஸ் வேணும் என்றாள். பார்த்த பொழுது, அவள் அப்பாவின் சாக்ஸைகளை மடித்து வைத்திருந்தாள். மேலும் இரண்டு, மூன்று எடுத்துக் கொடுத்து மடிக்க வைத்து படமாக்கினேன். அவள் முன்னாலிருக்கும் அனைத்தும் அவள் மடித்தது.





ஒரு விளையாட்டு காபி கப்பை நீட்டினாள். விளையாடும் பொழுது அப்ப அப்ப இப்படி நீட்டுவாள், நானும் குடிக்கிறது போல பாசாங்கு செய்துவிட்டு, கப்பைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன். இந்த முறை, குடிக்க போகும் பொழுது, உனக்கு இல்லை என்றாள். வசதியாக என் அருகில் அவள் பொம்மையோடு வந்து உட்கார்ந்து, கப்பை வாங்கி, பொம்மைக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். அவளாக டம்பளரில் பால் குடிக்க ஆரம்பித்து வெகு நாட்களாகி விட்டன. யார் கொடுத்ததைப் பார்த்தாள் என்று தெரியவில்லை.

6 comments:

  1. அந்தக் குழந்தை பேபியை ரொம்ப அழகாக பாத்துக்கறாங்க தீஷு.
    எழில் பார்பிக்கு அழகுசெய்து முடித்து, இப்போதெல்லாம் அடிக்கடி Baby Alive
    கேட்டுக்கொண்டிருக்கிறாள்... வாங்கவில்லை, உன்னுடைய வேலையெல்லாம் முதலில் நீயே செய்ய கத்துக்கோன்னு சொல்லியிருக்கிறோம்!

    ReplyDelete
  2. ஹஹ்ஹா..என்ன சொல்றது..இதெல்லாம் கடமையா செய்வாங்க..ஆனா இவங்களை சாப்பிட வைக்கிறது??இப்படிதான் பேபியை தூக்கிக்கிட்டு பால் குடிக்க வைக்கிறது..அதுக்கு நெயில் பாலிஷ் போடறது..எல்லாம் நடக்கும்! :-))

    வீடியோஸ் பிறகு பார்க்கிறேன்!

    ReplyDelete
  3. தீக்ஷூ அம்மா, தீக்‌ஷூவை போட்டோவோ வீடியோவோ எடுக்கும் போது தீஷுகுட்டியின் உயரத்துக்கு சமமாக கேமராவை பிடித்து எடுங்கள்.மேக்சிமம் கீழே அமர்ந்து எடுத்தீங்கன்னா சரியா இருக்கும்.


    ஆனா தீஷுகுட்டிக்கு தெரியாம படம் எடுக்கனும்னா இந்த டெக்னிக் கஷ்டம்தான் :)

    ReplyDelete
  4. வெரி குட் தீஷு

    ReplyDelete
  5. ஆமாம் அன்பு. அந்த பொம்மையோடு தான் எப்பொழுதுமே இருக்கிறாள். Baby Alive வாங்கி கொடுங்க.. எழில் இப்ப விளையாடாம எப்ப விளையாடுவா?

    ஆமாம் முல்லை. நெயில் பாலிஷ் போட்டு விடு, டாலும் வளருமா? என்று பல கேள்விகள்.

    ReplyDelete
  6. நந்து, எங்க காமிரா Canon SD600. அதில் 3X zoom தான் இருக்குனு, நான் 10X zoom காமிரா வாங்கினேன். ஆனால் அப்புறமும் எல்லா படத்திலும் தீஷு முகம் தெரியாது இல்லது அவள் தலை வெட்டப்பட்டிருக்கும். என் கணவர் சொல்கிறார், காமிரா தப்பில்லை, எடுக்கிறவங்க கிட்ட தான் தப்பிருக்குனு. படம் எடுக்க பழகனும் நந்து. அப்ப அப்ப எப்படி ஏதாவது சொன்னீங்கனா தெரிஞ்சிக்க வசதியாக இருக்கும்.

    நன்றி அமுதா.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost