Wednesday, November 19, 2008

ரொம்ப நாளைக்கு அப்புறம்..

தீஷுவின் activities பற்றிய பதிவு.


Funnel: Wet pouringயின் அடுத்த கட்டம். Funnelயை ஒரு பாட்டிலில் பொருத்தி ஒரு டம்பளரில் தண்ணீர் கொடுத்தேன். விளக்கிச் சொல்வதற்கு முன்னமே, அவளாகவே செய்யத் தொடங்கி விட்டாள். தண்ணீரை ஊற்றியப் பின், தண்ணீர் கீழே உள்ள பாட்டிலிற்கு தான் போகிறது என்பதில் அவளுக்கு சந்தேகம். குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டுயிருந்தாள்.







தீஷுவிற்கு பயன்படும் என்று Cuisenaire rods வாங்கியுள்ளோம். பத்து நிறங்களில், ஒவ்வொரு நிறமும் ஒரே அளவு என பத்து அளவுகளில் கிட்ட தட்ட 75 rods உள்ளன. இதின் மூலம் கூட்டல், கழித்தல் போன்ற abstract conceptயை material மூலம் சொல்லித் தரலாம். தீஷுவிற்கு rodயை பழக்குவதற்காக, Pattern formation பண்ணினோம். ஒரு வெள்ளை, ஒரு சிவப்பு என மாறி மாறி வைக்க வேண்டும். இதே மாதிரி,ஏற்கெனவே பட்டன் மூலம் செய்திருந்ததால், எளிதாக செய்தாள்.


வீட்டில் ஒரு insulated cup mug சும்மா பயன்படுத்தப்படாமல் இருந்தது. வேறொரு வேலைக்காக வெட்டிய straw சும்மாயிருந்தது. சும்மா இருந்த தீஷுவின் விரலுக்கு வேலை கொடுப்பதற்காக அவை இரண்டும் பயன்படுத்தப்பட்டன.


இந்த Tree puzzle மதுரையில் வாங்கினோம். முதலில் தீஷுவிற்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஒரளவிற்கு செய்கிறாள். சில நேரங்களில் உதவி தேவைப்படுகிறது.

3 comments:

  1. பப்புவிற்கு தீஷூவைக் காட்டினேன்..இந்த பாப்பா பேரு இந்துமதி, ஆச்சி என்கிறாள். தீஷூ பப்புவின் பள்ளித்தோழியை நினைவூட்டிகிறாள் போலிருக்கிறது :-).
    அந்த wooden puzzle உண்மையில் நல்ல உபயோகம். அந்த ஃபுன்னல் பக்கெட் இப்போது எங்களுக்கு பீச்சில் உதவுகிறது! பதிவு நல்ல ரவுண்ட் அப்!

    ReplyDelete
  2. நன்றி முல்லை. தீஷு இன்னைக்கு பப்பு டான்ஸ் வீடியோ திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டுயிருந்தாள்.

    ReplyDelete
  3. பப்புவுக்கு தீஷு
    தீஷுவுக்கு பப்புவா

    எனக்கு இவங்க ரெண்டு பேரோட அம்மா பதிவுகள்
    (அமித்து சீக்கிரம் வளரும்மா. நான் சொல்லிக்கொடுக்க வேண்டியது நெறைய இருக்கு.)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost