தீஷுவின் activities பதிவு போடுவது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கு.
கலர் மாட்சிங் நாங்கள் ஏற்கெனவே நிறைய தடவை செய்து இருக்கிறோம். எப்போழுதும் கார்டின் மேல் அதன் மாட்சிங் கார்டை வைக்க செய்வேன். ஆனால் இந்த முறை, மாண்டசோரி கலர் டாப்லஸ்ட் போல, கார்டின் வலது பக்கம் வைக்க செய்தேன். இதன் மூலம் படிப்பதற்கு தேவையான இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் பார்க்க கண்களும், மூளையும் பழகும்.
கணிததிற்கு முதலில் இந்த டாக்குமெண்ட்டைப் பழக்கியதற்குப் பின், மாண்டசோரி spindle box போன்று ஒன்றைப் பழக்கியதற்குப் பின், இந்த மாதிரி card and counters பழக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் தயார் செய்து வைத்திருந்ததை எடுத்து வந்து சொல்லி கொடு என்றாள். ஆகையால் இதை செய்தோம். zero முதல் 9 வரை வரிசையாக அடுக்க சொன்னேன். அடுக்கினாள். ஆனால் dot counting நாங்கள் இருவரும் சேர்ந்து செய்தோம். 75% நான் தான் செய்தேன். மீண்டும் சில நாட்கள் கழித்து தான் சொல்லித் தர வேண்டும்.
Nuts and Bolts - மாண்டிசோரி முறையில் Pratical lifeயில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாஸ்டிக் டூல்ஸ் ஸேட், எங்களுக்கு கொடுக்கப்பட்டது. ரொம்ப நாளா தீஷுவிற்கு கொடுக்கவில்லை. இப்பொழுது பார்த்தவுடன், கிட்ட தட்ட அரை மணி நேரம் விளையாண்டு கொண்டுயிருந்தாள். இது கை விரலுக்கான நல்ல பயிற்சி.
Games to play with 3 year old without anything
2 years ago
சுவாரசியம்..:-)..
ReplyDeleteவணக்கம் தீஷீ
ReplyDeleteஅம்மா ரொம்ப கஷ்டப்படுத்தறாங்களோ
நட்டு போல்ட் எல்லாம் கொடுத்து.
நன்றி முல்லை.
ReplyDeleteநன்றி அமிர்தவர்ஷினி அம்மா.