Monday, November 24, 2008

உனக்கு ஒரு மிட்டாய் போதும்..

தீஷு ஸ்கூலில் யாருக்கோ பிறந்த நாள் என்று Goody bag கொடுத்திருந்தார்கள். அதில் ஒரு M&M மிட்டாய் பாக்கெட்(நம் நாட்டில் கிடைகிறதா என்று தெரியவில்லை.. நம் ஊர் Gems போல் இருக்கும்) இருந்தது. தீஷு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். எனக்கு ஒன்று கொடு என்றேன். ஒன்று கொடுத்தாள். சாப்பிட்டு முடித்தவுடன், இன்னொரு மிட்டாய் கொடு என்றேன். ஒரு நாளைக்கு ஒன்று தான் சாப்பிட வேண்டும். வயிறு பசித்தால், corn flakes சாப்பிடு, சரியா போகும் என்றாள். அப்புறம் என்ன நினைத்தாலோ, ஒன்று கொடுத்தாள். ஒண்ணு தான். இனிமேல் கேட்க கூடாது என்ற கண்டிஷனுடன். அந்த நேரத்தில் என் கணவர் ஆபிஸிலிருந்து வந்தார். அவரிடம் நீங்கள் கேளுங்கள் என்றேன். அவர் கையில் வாங்கி வைத்துக் கொண்டு, திரும்ப திரும்ப கேட்டார். கொடுத்து கொண்டேயிருந்தாள். அம்மாவுக்கு தான் கணக்கு. என்ன சொல்ல?




அன்னைக்கு காலையில் எழுந்ததிலிருந்து அப்பாவுடன் ஆபிஸ் போக வேண்டும் என்றாள். ஐ.டி கார்ட் வேண்டும் என்றேன். தனக்கு ஐ.டி கார்ட் வேண்டும் என்றாள். நல்ல படிச்சு, நல்ல எழுத தெரிந்து, பெரிய பெண்ணானவுடன் ஐ.டி கார்ட் கொடுப்பாங்க என்றேன். வேகமாக போய் ஒரு நோட் எடுத்து வந்து எழுத ஆரம்பித்தாள். அடுத்து ஒரு புக் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தாள். அடுத்து பாப்பா பெரிய பாப்பா ஆகிட்டேன். ஐ.டி கார்ட் கொடு என்றாள். என்ன சொல்லனு கஷ்டமாகிடுச்சு.



3 comments:

  1. //வயிறு பசித்தால், corn flakes சாப்பிடு, சரியா போகும் என்றாள். அப்புறம் என்ன நினைத்தாலோ, ஒன்று கொடுத்தாள். //

    ஹஹ்ஹா! சோ க்யூட்!

    //வேகமாக போய் ஒரு நோட் எடுத்து வந்து எழத ஆரம்பித்தாள். அடுத்து ஒரு புக் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தாள். அடுத்து பாப்பா பெரிய பாப்பா ஆகிட்டேன். ஐ.டி கார்ட் கொடு என்றாள்.//

    :-)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost