சென்ற வாரம் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு Chuck E.Cheese போயிருந்தோம். பார்ட்டி முடிந்தவுடன், அங்கிருந்த Games விளையாட ஆரம்பித்தோம். தீஷுவிடம் நல்ல மாற்றம். சென்ற முறை நாங்கள் சொல்லும் விளையாட்டுகளை மட்டும் விளையாண்டு கொண்டுயிருந்தாள். இந்த முறை அவளே தேர்ந்து எடுத்து விளையாண்டாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு, car driving. அது போல எங்கு இருந்தாலும் விளையாட வேண்டும் என்பாள். இது போல chuck E.Cheese ஒன்று மட்டும் இருந்தது. ஒரு ஐந்து அல்லது ஆறு வயது குழந்தை விளையாண்டு கொண்டுயிருந்தது. நாங்கள் ரொம்ப நேரம் காத்திருந்தோம். அது விடுவதாக இல்லை. தீஷு விளையாட வேண்டும் என்றாள். திரும்ப வரலாம் என சொல்லி, வேற விளையாட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்று விட்டோம். மீண்டும் வெகு நேரம் கழித்து திரும்பி வந்த பொழுதும், அந்த குழந்தை விளையாண்டு கொண்டுயிருந்தது. Token எல்லாம் தீர்ந்த பின் விட்டு சென்றது. நாங்கள் விளையாண்டோம். தீஷு இரண்டாவது முறை விளையாடும் பொழுது, சில குழந்தைகள் காத்திருக்க ஆரம்பித்தன. தீஷுவிடம் அடுத்த குழந்தைகளின் முறை என்றோம். உடனை விட்டுவிட்டாள். தான் காத்திருந்து பெற்றதை, அடுத்த ஒரு நிமிடத்தில் கொடுப்பதற்கு, Maturity வேண்டும். அதை ஒரு 21/2 வயது குழந்தையிடம் பார்த்தது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.
சனிக்கிழமை தீஷு ஸ்கூலில் Parent-Teacher Meeting இருந்தது. தனித்தனியாக ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களையும் சந்திதனர். நாங்கள் முக்கியமாக கேட்டது, அவளுடைய communication. இங்கிலீஷ் தெரியாதலால், அவள் டீச்சரிடமும், மற்ற குழந்தைகளிடமும் எவ்வாறு பழகுகிறாள் என்று கேட்டோம். பேசுவதைப் புரிந்து கொள்கிறாள் மற்றும் சில நேரங்களில் பதிலும் சொல்கிறாள் என்றார்கள். மற்ற படி அவர்களுடைய Comment, "She minds her own business". மற்றவர்களிடம் பழகாமல், அவள் அவளுடைய வேலைகளை மட்டும் பார்பது தவறு ஒன்றுமில்லை என்பது போல் கூறினார்கள். எனக்கு சரியா என்று தெரியவில்லை. I think she will outgrow. பார்க்கலாம்.
Games to play with 3 year old without anything
2 years ago
தான் காத்திருந்து பெற்றதை, அடுத்த ஒரு நிமிடத்தில் கொடுப்பதற்கு, Maturity வேண்டும். அதை ஒரு 21/2 வயது குழந்தையிடம் பார்த்தது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.
ReplyDeleteஉண்மைதான். தீஷு தி க்ரேட்.
இங்கிலீஷ் தெரியாதலால்,
இப்படி சொன்னதற்காய் உங்களைக் கட்டாயம் பாராட்டவேண்டும்.
ஒன்னுமே தெரியலன்னாலும் தஸ்ஸு, புஸ்ஸீன்னு சொல்லிக்கொடுத்து, மம்மீ, டாடின்னு சொல்லுன்னு சொல்லிக்கொடுக்கிற பெற்றோர்களின் மத்தியில் தீஷி அம்மா தி க்ரேட்.
பார்க்கலாம்.//
ம். பார்க்கலாம்.
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.
ReplyDelete//இங்கிலீஷ் தெரியாதலால்,
இப்படி சொன்னதற்காய் உங்களைக் கட்டாயம் பாராட்டவேண்டும்.//
இது தானே உண்மை. இதற்கு பாராட்டெல்லாம் வேண்டாம் அமித்து அம்மா.