Tuesday, September 30, 2008

எழுத்துப் பயிற்சி

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால், நான் எழுதுவதைப் பார்த்து தீஷுவும் எழுத விரும்பினாள். எனக்கு இரண்டு வயது குழந்தைக்கு எழுத சொல்லித் தர இஷ்டமில்லை. ஆனால் அவள் பேப்பரில் ஏதாவது எழுதி விட்டு 'A' எழுதி இருக்கிறேன், 'B' எழுதி இருக்கிறேன், கரெக்டா என்பாள். மாண்டிசோரி அம்மையின் கூற்று "Follow your child". எழுத சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன். முதலில் மாண்டிசோரி முறையில் உப்புத் தாளில் எழுத்துக்களைச் செய்ய முடிவு செய்தேன்.




மாண்டிசோரி முறையில், உப்புத் தாளில் செய்த எழுத்துக்களை கையால், தடவ செய்து, எழுத்துகளை எழுதும் முறையை விளக்க வேண்டும். ஆனால் உப்புத் தாளில் செய்வது கடினம் என்று எண்ணி, Feltயில் எழுத்துக்களைச் செய்து, அட்டைகளில் ஒட்டிவிட்டேன்.

நான் செய்ய எடுத்தக் கொண்ட நேரளவு கூட தீஷு, அதை உபயோகப்படுத்தவில்லை. மாண்டிசோரி முறையில் மண்ணில் எழுதப் பழக்கலாம் என்று எண்ணினேன். மண்ணிற்கு பதில் ரவையை ஒரு தட்டில் கொட்டி எழுத செய்தேன். அதை சில நேரங்களில் பயன்படுத்துகிறாள்.
ஆனால் அவளுக்கு பேனாவில் எழுதுவதற்கு தான் பிடித்திருக்கிறது. இப்பொழுது 12 முதல் 15 எழுத்துகள் வரை சரியாக எழுதுகிறாள்.

Monday, September 29, 2008

புத்தக விளையாட்டு

என் கணவரும் தீஷும் புது விளையாட்டு விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள் . ஒரு நிறைய படமுள்ள புத்தகத்தை எடுத்து கொண்டார்கள். அதில் ஒரு படத்தை தீஷுவிற்கு காட்டிவிட்டு, அப்படத்தைப் பத்தின விளக்கத்தினை கொடுத்து விட்டு புத்தகத்தை மூடி விடுவார். அவள் அந்த புத்தகத்தை புரட்டி அந்த படத்தினை கண்டுபிடிக்க வேண்டும். தீஷு சரியாக கண்டுபிடித்துவிடுகிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்து இருக்கிறது. ஓரே நாளில் இரண்டு மூன்று முறை விளையாண்டு கொண்டு இருந்தாள்.

Phonics - எழுத்தின் சத்தங்கள்











Powered by Podbean.com






சென்ற முறை Libraryயிலிருந்து Leapfrog Letter Factory DVD எடுத்து வந்தோம். முன்பு தீஷுவிற்கு ABC பாட்டு பாடத் தெரியும். ஒரு லெட்டரை காண்பித்தால் அது எந்த லெட்டர் என்று சொல்ல தெரியும். ஆனால் வரிசையாக செல்ல தெரியாது. இங்கும் அங்கும் சில லெட்டரை விட்டு விடுவாள். பத்து நாட்களுக்குள் நல்ல முன்னேற்றம். லெட்டரையும் அதன் சத்தங்களையும் (Phonics) சொல்ல பழகி விட்டாள். இப்பொழுதும் ஒன்று இரண்டு வார்த்தைகளை விட்டு விடுகிறாள். ஆனால் சத்தங்களை சரியாக சொல்கிறாள்.

Friday, September 26, 2008

One-to-one correspondence & AB Pattern - கணிதத்தின் அடிப்படைகள்

கணித அடிப்படையின் முக்கியமானதான - One-to-One correspondence and Pattern formation இரண்டையும் வீட்டிலேயே எளிய பயிற்சிகள் மூலம் உணர்த்த முயற்சி செய்தோம்.

எண்ணுவதற்கு அடிப்படை One-to-One correspondence. இரண்டு குழுவில் (2 sets) எந்த குழுவியில் அதிக பொருட்கள்(Members of the set) இருக்கின்றன என்பதை இரண்டு முறையில் செய்யலாம். ஒன்று - இரண்டு குழுவிலுள்ள பொருட்களையும் தனி தனியாக எண்ணி எதில் அதிகமாக உள்ளது என்று கண்டுபிடித்தல். மற்றொன்று One-to-One correspondence. முதலில் ஒரு குழுவிலிருந்து ஒரு பொருளை எடுத்து வைக்க வேண்டும். அதற்கு correspondingஆக மற்றொரு குழுவிலிருந்து ஒரு பொருளை எடுத்து வைக்க வேண்டும். இப்படியாக வைத்துக் கொண்டு வரும் பொழுது எந்த குழுவில் பொருட்கள் மீதமுள்ளதோ, அதில் அதிகமாக இருப்பதாக அர்த்தம்.

Brainvita என்று ஒரு விளையாட்டு உள்ளது. அந்த விளையாட்டு போர்டில் சிறு குழிகளும், குழி மேல் வைப்பதற்கு கோலி குண்டுகளும் இருக்கும். அது போலுள்ள ஒரு சாதனத்தை எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு குழியிலும் ஒரு கண்ணாடி கல்லை வைக்க செய்தேன். இது One-to-One correspondence கற்று தருவதுடன் கவனம் (Concentration) வளர்க்கிறது.

அடுத்தது Pattern. Patterns help children to analyze relationship and make predictions. ஒரே எண்ணிக்கையிலான கற்கள் மற்றும் பட்டன்களையும் எடுத்து கொண்டேன். ஒரு கல், ஒரு பட்டன் என்று மாறி மாறி வைக்க வேண்டும். இதில் மாண்டிசோரி சாதனங்களில் உள்ளது போன்ற Build in Error of Control உள்ளது. அதாவது வைக்கும் பொழுது தவறு செய்து விட்டால், மீதம் இருக்கும் பொருளைக் கொண்டு குழந்தைகளே தவறை சரி செய்து கொள்வார்கள். தீஷு இரண்டு விளையாட்டுகளையும் ரசித்து செய்தாள்.

Thursday, September 25, 2008

பயிற்சிகள் - To develop fine motor skills

மாண்டிசோரி அம்மையின் முக்கிய கண்டுபிடிப்பு - குழந்தைகள் தன் கைகளை பயன்படுத்தி தாங்களை செய்யும் செயல்கள் மூலம் கற்கிறார்கள். Quote from the Book "Montessori Play & Learn" by Lesley Britton : "All children learn through active participation, by being involved in a pratical way, and by attempting to do something themselves, particularly by using their hands.

களிமண்(Clay) கைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கு சிறந்தது. நாங்கள் அடிக்கடி Clay பயன்படுத்துவோம்.



மேலும் பஞ்சால் (Cotton Balls) ஒரு பத்திரத்திலிருந்து இன்னொரு பத்திரத்திற்கு தண்ணிரை மாற்றும் படி செய்தேன். ஐந்து விரல்களையும் உபயோகப்படுத்த சிறந்த பயிற்சி. தீஷு மிகவும் விருப்பமாக அரை மணி நேரத்திற்கு மேலாக செய்து கொண்டு இருந்தாள்.

Hard or Soft - தொடுதல் மூலம் கற்றல்

Mystery Bag பயிற்சியின் பொழுது இரண்டு பந்துகள் உபயோகப்படுத்தினோம். ஒன்று தொடுவதற்கு சற்று கடினமானதாகவும் இன்னொன்று சற்று மெதுவாகவும் இருந்தது. அப்பொழுது தான் எனக்கு பொருட்களை தொடுவதற்கு கடினம், மெது என பிரிக்க(Sorting Technique) செல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றியது. கடினமான பொருட்களுக்கு - பந்து, மெட்டலினாலான பொம்மை, சிறிய புத்தகம் போன்றவையும், மெது பொருட்களுக்கு - Stuffed toys, பந்து, பஞ்சு போன்றவையும் எடுத்துக் கொண்டேன். தீஷுவிற்கு பிரிப்பத்தற்கு கற்றுக் கொடுத்தேன். ஆனால் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு முயற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.

Wednesday, September 24, 2008

Mystery Bag - மாண்டசோரி முறையில் ஒரு விளையாட்டு



மாண்டிசோரி முறை கற்றலில் முக்கியமானது - புலன்கள் மூலம் கற்றல். இவ்விளையாட்டில் தொடுதல் (TOUCH) பயன்படுத்தப்படுக்கிறது.
சில பொருட்களைத் தொட்டு பார்க்க செய்து அவற்றை ஒரு பையில் வைக்க வேண்டும்.
படி 1 : தீஷுவை பைக்குள் கையை விட செய்து பார்க்காமல் தொடுதல் மூலம் தன் கையில் வைத்து இருக்கும் பொருள் என்ன முதலில் சொல்ல செய்தேன்.

படி 2: நான் சொல்லும் பொருளை பையிலிருந்து பார்க்காமல் எடுத்து தர வேண்டும்.

இப்பயிற்சியை நாங்கள் முன்பே செய்து இருந்தோம். இப்பொழுது ஒரே மாதிரியான சற்று கடினமான பொருட்கள் மூலம் செய்தோம். உதாரணத்திற்கு, ஒரு சிறிய பந்து, ஒரு பெரிய பந்து. தீஷு மிகவும் ரசித்து செய்தாள்.

நான் வளர்கிறேனே மம்மி

துணி காய உபயோகப்படுத்தப்படும் க்ளிப்பை, கண் கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சிறந்த கருவியாக பயன்படுத்தலாம். சில மாதங்களுக்கு முன்னால் நாங்கள் இதை முயற்சி செய்து இருந்தோம். தீஷுவால் அப்பொழுது செய்ய முடியவில்லை. அதற்கு அப்புறம் நேற்று தான் முயற்சி செய்தோம். அவளால் மாட்ட மற்றும் கழற்ற எளிதாக முடிந்தது. ஒவ்வொரு நாளும் தான் வளர்வதை உறுதிப்படுத்தி விட்டாள்.

முதல் அறிவியல் சோதனை

இந்த செயல்பாடு "How to raise An amazing child the Montessori way" அல்லது "Teach Me to Do It Myself: Montessori Activities for You and Your Child" by Maja Pitamic புத்தகத்தில் படித்த ஞாபகம். சென்ற வாரம் நான் தீஷுயுடன் walking சென்ற பொழுது சில பூக்களை பறித்து வந்தேன். தண்ணிரில் Food colouring சேர்த்து அதில் அப்பூக்களைப் போட்டு வைத்து விட்டோம்.

சில நாட்களில் சிவப்பு நிற தண்ணிரில் இருந்த பூ, சிவப்பு நிறமாக மாற தொடங்கியது. புகைப்படத்தில் நன்றாக தெரியவில்லை. மஞ்சள் பூவில் நன்றாக நிற மாற்றம் தெரியவில்லை. ஆனால் சிவப்பாக மாறியதைப் பார்த்த தீஷு மஞ்சள் பூவும் சில நாட்களில் மஞ்சளாக மாறும் என்பதை புரிந்து கொண்டாள். நான் அவளுக்கு எப்படி நிறம் மாறியது என்பதை சிறுது விளக்கினேன். புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன்.

முதல் பதிவு - தமிழில்

என் இரண்டு வயது மகளின் செயல்களைப் பதிவு செய்யவே இந்த வலைத்தளம். சில மாதங்களாக ஆங்கிலத்தில் பதிவு செய்து வந்தேன். என் மகள் வாரத்தில் முன்று அரை நாட்கள் பள்ளிக்கு செல்கிறாள். வீட்டில் இருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக்க நான் அவளை சில வேலைகளில் ஈடுப்படுத்துவேன். எனக்கு மாண்டிசோரி வழி கல்வி முறையில் நம்பிக்கை அதிகம். அதன் வழியில், வீட்டில் செய்ய முடிந்த சில வேலைகளில் (work as per Montessori) நாங்கள் ஈடுபடுவோம். அச்செயல்களைப் பதிவு செய்யவே இந்த வலைத்தளம்.

Thursday, September 18, 2008

Magnetic Fishing

We have a magnetic fishing puzzle board without the magnet rod. I gave Dheekshu a magnet from the Doodle pro. Initially she had few problems in removing the fish from the board. However she really picked up fast and did quite well. When I made her to do the hand puzzle a month ago, she was not able to do it. Now she is able to do it.

This week


We had been working on few things like stacking blocks, beads etc this week. Since Dheekshu had bored with the activity with toothpick, I asked her to place the toothpick in the styrofoam plate. She got bored within 5 mins and started forming alphabets using the toothpick.

We used shape sorter to make prints using paint. Dheekshu enjoyed the activity very much and started finger painting after sometime.

Wednesday, September 10, 2008

Busy with activities again...

Once we are over with tiredness and jet lag, we started with the activities which Dheekshu likes the most - Painting and transferring using spoon.
For transferring beans using the spoon, she does not transfer one bean at a time. She used to take 2 or 3 beans with the spoon to transfer. I gave her a small spoon which can hold only one bean. She was doing the transfer pretty good. Since the cup looked like her sippy cup, she started saying that the milk is hot, acted like drinking from the cup etc..

This time I gave her both paint brush and tooth brush for painting. She tired using tooth brush and preferred over the paint brush. She stated making her hand prints. She asked to put the paint directly on the paper and started painting with the hand on the paper. She was enjoying the activity for more than 30 minutes.




Puzzle mat

We got few education toys from India. Out of which, Dheekshu liked this floor puzzle mat very much. She likes to remove the alphabets from the puzzle. She is able to put back the letters if we have only few puzzle pieces. She feels complicated if I give her more than 5 pieces as she finds difficult to identify similar shape letters like 'B' and 'E'. She asks me to make sofa or chair with the puzzle mat to make her doll sit.

Checkers board

We were not able to do many activities in India as we were busy visiting places, friends and relatives. We spent some time scribbling, painting, writing etc. In my mom's house, we had checkers board. I made Dheekshu to place few coins on the board for hand eye coordination. First she knocked down the near by coins while placing. Then she did pretty good. After few minutes, she started keeping the coins on the mouth, which made us stop the activity.

Cleaning the house

I gave Dheekshu few buttons and cups to do colour sorting and got engaged in some other work. When I came back, the buttons and cups were all over the place and she was busying cleaning them. I was quite happy to know that she is gaining some pratical experience.

Back from vacation

We are back from India. We had very nice time there. Dheekshu was around 5 months old when we went last time. So she did not know any of our relatives and friends. So I was worried whether she will be able to mingle with everybody. But she was very happy to meet so many people. She moved with everybody. She was OK in the journey too. These are some of the photos we took in India.

I am getting ready for a marriage....

Playing in the sand..

Nobody wears hemlet while riding.. Atleast I will wear...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost