நெட்டிலிருந்து நம்பர் வீல் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். துணி உலர்த்தப் பயன்படுத்தும் கிளிப்பில் 1 முதல் 10 வரை மார்க்கரால் எழுதிக் கொண்டேன். தீஷு புள்ளிகளை எண்ணி அந்த எண்ணை கொண்ட கிளிப்பைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் எண்ணுதல் மற்றும் கை விரல்களுக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் 1,2 என புள்ளிகள் வரிசையாக இருந்ததால் அவளுக்கு எண்ணும் வேலை இல்லை.
அப்பளம் சுட பயன்படும் tongs கொண்டு கற்களை ஒரு கிண்ணத்திலிருந்து மற்றொரு கிண்ணத்திற்கு மாற்றினோம் (Transfer). Tongs பெரியதாக இருந்ததால் கற்கள் மாற்றுவதற்கு வசதியாக இல்லை. அதனால் மெக்னெட்டிக் எழுத்துகளை 1 முதல் 9 வரை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு எழுத்தாக tongsசுல் எடுத்து, இந்த எண்ணைச் சொல்லி அடுத்த கிண்ணத்தில் போட வேண்டும். தீஷு ஒரு முறை செய்தாள். அடுத்து அவளுக்குச் செய்ய விரும்பம் இல்லை.
இது முன்பே செய்தது. சையினீஸ் செக்கர்ஸ் போர்டில் அதன் காயின்களை வைத்தல். முன்பு கலர்கள் மூலம் பிரித்தோமா என்று நினைவில்லை. இந்த முறை வைக்கும் பொழுதே கலர் கலராக பிரித்து வைத்தாள். இரண்டு முறை செய்து ஆச்சரியப்படுத்தினாள். This improves fine muscles and hand eye coordination.