சென்ற முறை செய்த இயற்கை பெயிண்ட் எங்கள் வீட்டில் மிகவும் பிரபலம். தீஷுவிற்கு பிடித்திருந்ததால் மற்றொரு முறையில் பெயிண்ட் செய்யலாம் என்று நினைத்தேன்.
தேவைப்படுபவை :
1. மைதா மாவு 4 ஸ்பூன்
2. தண்ணீர்
3. Food Colouring
மைதா மாவில் 8 ஸ்பூன் தண்ணீர் விட்டு, கட்டி இல்லாமல் பிசைய வேண்டும்.
6 ஸ்பூன் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீரில் மைதா மாவு கலவையைப் போட்டு கட்டி இல்லாமல் கிண்ட வேண்டும். ஒர் இரு விநாடிகளில் மாவு ஓரங்களில் ஒட்டாமல் வரும். அடுப்பை அணைத்து விட வேண்டும்.
வெவ்வேறு கிண்ணங்களில் மாவை ஊற்றி கலரிங் சேர்த்து கலந்தால் பெயிண்ட் தயார்.
தீஷுவிற்கு பேப்பர், ப்ரெஷ், தெர்மோ கோல், அட்டை என்று வித்தியாசமான பொருட்கள் கொடுத்தேன். அவளும் அதில் இதில் பெயிண்ட் செய்ய என்று ஆரம்பித்து இறுதியில் Finger paintவும் ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளின் சில பெயிண்ட்டிங்ஸ். மைதா மாவு இருப்பதால் வெகு நாட்களுக்கு வைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.
Games to play with 3 year old without anything
2 years ago
Great ! Sure all the kids love play/paint with master piece!! All be best for new ventures (you can laminate yourself .it will last long..i hope so..
ReplyDeleteRegards
VS Balajee
(F/o Nisha & Ananya)
செம கலக்கல் தியானா! தீஷூவின் குட்டி விரல்களின் சுவடுகள் பார்க்க அழகாக இருக்கிறது! :-)
ReplyDelete