Tuesday, April 16, 2013

அறிவிய‌ல் சோத‌னைக‌ளும் வ‌ண்ண‌ங்க‌ளும்

ப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்தும் பாடு இருக்கிற‌தே.. உப்பைப் பார்க்கும் பொழுது, ச‌ற்று சிவ‌ப்பு நிற‌த்தில் இருந்தால் இரும்பு உள்ள‌து என்று தெரிந்து விடும். முட்டை போன்று ம‌ண‌ம் இருந்தால் ஹைட்ர‌ஜ‌ன் சல்பெட். உப்பின் பெய‌ரை இப்ப‌டிப் பார்த்த‌வுட‌ன் க‌ண்டுபிடிக்க‌ முடியாவிட்டால், நாம் ஆஸிட் ஊற்றிக் கண்டுபிடிக்க‌ வேண்டும். ஆஸிட் அள‌ப்ப‌த‌ற்கு பிப்ப‌ட்டில் மெதுவாக‌ உறுஞ்சினால் தேவையான ஆஸிட் வ‌ராது. வேக‌மாக‌ உறுஞ்சினால் ந‌ம் வாய்க்குள் போய்விடும். ஒருவ‌ழியாக‌ ஆஸிட் ச‌ரியாக‌ எடுத்து உப்பின் மேல் ஊற்றினால் உப்பு நினைத்தால் த‌ன் நிற‌த்தை மாற்றும். நிற‌ மாற்ற‌த்திற்கு காத்துக் கொண்டு இருப்போம். அறிவிய‌ல் சோத‌னைக‌ளும் வ‌ண்ண‌ங்க‌ளும் பிரிக்க‌ முடியாத‌து.


ந‌ல்ல‌ வேளை, நாங்க‌ள் செய்த‌ சோத‌னைக‌ள் அவ்வ‌ள‌வு தூர‌ம் எங்க‌ளைப் ப‌டுத்த‌வில்லை. நாங்க‌ள் த‌ண்ணீர் க‌டத்திக‌ள் ப‌ற்றிப் ப‌டித்தோம்.


 தேவையான‌ப் பொருட்க‌ள்:

1. த‌ண்ணீர்

 2. இர‌ண்டு அல்ல‌து மூன்று க‌ண்ணாடி ட‌ம்ள‌ர்

3.  பேப்ப‌ர் ட‌வ‌ல்

செய்முறை:

ஒரு க‌ண்ணாடி ட‌ம்ள‌ரில் த‌ண்ணீர் எடுத்துக் கொள்ள‌வும். நாங்க‌ள் சிறிது க‌ல‌ரிங் க‌ல‌ந்து கொண்டோம். இன்னொரு ட‌ம்ள‌ர் காலியாக‌ ப‌க்க‌த்தில் வைக்க‌வும். பேப்ப‌ர் ட‌வ‌ல் எடுத்து ஒரு ட‌ம்ள‌ரிலிருந்து இன்னொரு ட‌ம்ள‌ருக்குள் விட்டோம்.


சிறிது நேர‌த்தில் பேப்ப‌ர் ட‌வ‌ல் க‌ல‌ர் த‌ண்ணீரை உறுஞ்சி க‌ட‌த்த‌த் தொட‌ங்கிய‌து. ஒரு ம‌ணி நேர‌ம் க‌ழித்து காலி ட‌ம்ள‌ரில் த‌ண்ணீர் சிறிது இருந்த‌து. நான்கு ம‌ணி நேர‌த்தில் முத‌ல் ட‌ம்ள‌ரிலும் காலி ட‌ம்ள‌ரிலும் ச‌ரி  அள‌வு த‌ண்ணீர் இருந்த‌து.


ச‌ற்று வித்திய‌ச‌ப்ப‌டுத்த‌ இர‌ண்டு ட‌ம்ள‌ரில் இரு நிற‌ங்க‌ளில் த‌ண்ணீர் எடுத்துக் கொண்டோம். காலி ட‌ம்ப‌ள‌ரை ந‌டுவில் வைத்து விட்டோம்.   பேப்ப‌ர் ட‌வ‌ல்க‌ளை இர‌ண்டு ட‌ம்ள‌ரில் இருந்தும் காலி ட‌ம்ள‌ருக்குள் வைத்தோம்.



சிறிது நேர‌த்தில் காலி ட‌ம்ள‌ரில் இர‌ண்டு ட‌ம்ள‌ர்க‌ளிலிருந்தும் த‌ண்ணீர் வ‌ர‌த் தொட‌ங்கிய‌து. நிற‌ங்க‌ள் க‌ல‌க்க‌த் தொட‌ங்கின. நாங்க‌ள் எடுத்திருந்த‌ இரு நிற‌ங்க‌ளும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒன்று போல் இருந்த‌தால் வித்தியாச‌ம் ந‌ன்றாக‌த் தெரிய‌வில்லை. வேறு நிற‌ங்க‌ள் எடுத்திருக்க‌ வேண்டும்.



எத‌னால் த‌ண்ணீர் க‌ட‌த்தப்ப‌டுகிற‌து ?

எனக்கு த‌மிழில் விள‌க்க‌த் தெரிய‌வில்லை. ம‌ன்னித்துக் கொள்ளுங்க‌ள்.

Cohesive forces are the intermolecular attractive forces exist between molecules of the same substance -  Water in our experiment

Adhesive forces are the attractive forces between unlike molecules and in this example - water & paper towel.

In our case, the adhensive forece is stronger than the cohesive forece. The adhesive forces between water and towel are strong enough to pull the water molecules and hold them to the paper towel. Water moves along the gaps in the paper towel. This process is called capillary action.

The relative strengths of the cohesive and adhesive forces acting on a liquid determine the shape it will take and about wetting the surface. If the adhesive forces between a liquid and a surface are stronger, they will pull the liquid down, causing it to wet the surface. However, if they cohesive forces among the liquid itself are stronger, they will resist  and cause the liquid to retain a spherical shape and bead the surface.


அதே போல் தான் மர‌ வேர்களும் த‌ண்ணீரை உறுஞ்சி க‌டத்துக்கின்ற‌ன‌. இலைக‌ளும் த‌ண்ணீரைக் க‌டத்துமா? விடையை வேறொரு சோத‌னை மூல‌ம் க‌ண்டுபிடித்தோம். ப‌திவு பெரிதாகி விட்ட‌து. அதை நாளைப் ப‌கிர்கிறேன்.

10 comments:

  1. வண்ணமயமான படங்களுடன் அருமையான அறிவியல் சோதனை... இதை என் மகன் ஒரு கோப்பையில் தண்ணீரும், இன்னொரு கோப்பை காலியாகவும் வைத்துக் கொண்டு, இடையில் கம்பளி நூல் போட்டான். நூல் வழியாகத் தண்ணீர் காலி கோப்பைக்குச் சென்றது. தண்ணீர் உள்ள கோப்பையை உயர்த்தி வைத்ததன் மூலம் நீர் கடந்து செல்வது விரைவானதையும் பார்த்தான். capillary action என்பதை அகராதியில் 'புழை இயக்கம்' என்று பார்த்தேன். யாருக்காவது பயன்படலாம் என்று இங்கு பதிவு செய்கிறேன். நுண்ணிய துளைகள் வழியாகத் தண்ணீர் உறிஞ்சிக் கடத்தப்படுகிறது.

    அழகான விளக்கமும் படங்களும் தியானா! :)

    ReplyDelete
  2. படங்களுடன் விளக்கம் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நீர் நல்ல மின்கடத்திபோல என்பது உண்மையே.இன்னும் நிறைய கண்டுபிடிச்சு சொல்லுங்க .

    ReplyDelete
  4. very simple exercise to explain complex concept. Keep going...

    ReplyDelete
  5. வண்ணமயமான விளக்கங்கள்.....

    பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
  6. அருமை. செய்ததை அழகாக விளக்கியுள்ளீர்கள் படங்களுடன்.

    ReplyDelete
  7. விள‌க்க‌மான‌ மறுமொழிக்கு ந‌ன்றி கிரேஸ்.. நாங்க‌ளும் இந்த‌ முறையிலும் முய‌ற்சித்துப் பார்க்கிறோம்.

    ந‌ன்றி திரு.திண்டுக்க‌ல் த‌ன‌பால‌ன்

    ந‌ன்றி க‌வியாழி க‌ண்ண‌தாச‌ன்

    ReplyDelete
  8. முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி SR

    தொட‌ர் வ‌ருகைக்கும் ஊக்குவிற்பிக்கும் நன்றி திரு.வெங்க‌ட்

    ம‌றுமொழிக்கு ந‌ன்றி திரு.ராமல‌க்ஷ்மி மேட‌ம்

    ReplyDelete
  9. படங்களும் விளக்கமும் அருமை.. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. முத‌ல் வ‌ருகைக்கும் ம‌றுமொழிக்கும் ந‌ன்றி Srini..

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost