ஒவ்வொரு நாளும் தீஷுவிடம் ஏதாவது மாற்றம் தெரியும். ஆனால் ஒவ்வொரு ஆறு மாதத்திலும் ஏதாவது கவனிக்கத்தக்க முன்னேற்றம் தெரியும்.
தீஷு முதல் ஒரு வருடம் வரை சரியாக தூங்கவும் மாட்டாள். தூங்க விடவும் மாட்டாள். ஒரு வயது பிறந்த நாள் முடிந்தவுடன் நல்ல மாற்றம். இராத்திரி முழுவதும் தூங்க ஆரம்பித்தாள். நடக்க ஆரம்பித்தாள். ஒன்றரை வயது இருக்கும் பொழுது ABCD, கலர் identification செய்ய ஆரம்பித்தாள். 20 காய்கறிகள் வரை கண்டுபிடித்தாள். இதற்காக நான் எதுவுமே செய்யவில்லை. அவள் பொம்மைகளிடமிருந்து கற்றுக் கொண்டாள்.
இரண்டு வயதில் தான் பேச ஆரம்பித்தாள். எழுத ஆசைப்பட்டாள். இந்த வயதில் தான் அவளுடன் Montessori activities ஆரம்பித்தேன். பாட்டுக்கள் பாட ஆரம்பித்தாள். தோசை அம்மா தோசை அவளுடைய favorite.
இப்பொழுது இரண்டரை வயது. பேச்சில் தெளிவு. எழுத்தில் தெளிவு. பதில் சொல்வதில் தெளிவு. நான் யோசித்துப் பார்த்தேன். குழந்தைகளை அருகிலிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு தீஷு பிறப்பதற்கு முன் கிடைத்ததில்லை. அவள் வளரும் பொழுது, அவள் மூலம் குழந்தை வளர்ப்பைத் தெரிந்து கொண்டேன். அதை தவிர வேறு எதையும் சொல்லிக் கொள்ளும்படியாகக் கற்றுக் கொண்டதாய்த் தெரியவில்லை. ஆனால் இந்த குழந்தையிடம் தான் எத்தனை மாற்றங்கள்.
நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை, தீஷுவைப் பார்த்துக் கொள்ள, 2.5 வருடங்களாக லீவு எடுத்து இருந்தேன். போன வாரம் தான் resign செய்தேன். இனிமேல் தீஷு அம்மா என்ற வேலை மட்டும் தான். ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சிறு கவலை இருந்தது. அலைந்து திரியாமல், காம்பஸ் இண்டர்வியூவில் வாங்கிய வேலை என்பதால் மதிப்பு தெரியவில்லையோ என்று யோசிக்கத் தோன்றியது. ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லை, இருந்த வேலையையும் விட்டாகி விட்டது என்ற கவலை இருந்தது.அந்த கவலையை தீஷு போக்கி விட்டாள். அவள் டீச்சரைப் பார்த்த பொழுது, அவள் வாரத்தில் மூன்று அரை நாட்களுக்கு மட்டுமே பள்ளிக்கு வருவதால், என்னால் அவள் முன்னேற்றத்திற்கு credit எடுத்துக் கொள்ள முடியாது. You are giving her a safe environment at home for her explore and learn என்றார்கள். அவளுடன் வீட்டில் நான் செய்வதைச் சொன்னவுடன், "Why don't you come and work here as a teacher? If you can make a kid intelligent, you can make another 10 more" என்றார்கள். இந்தியா திரும்பும் எண்ணம் இருப்பதால் நான் commit பண்ணவில்லை. ஆனால் எனக்கு மிகுந்த சந்தோஷம். இது எனக்கு பிரமோஷன் போலவும், அவார்ட் போலவும் இருந்தது. கொடுத்துள்ள வேலையை உருப்படியாக செய்துள்ளோம் என்று தோன்றியது. எனக்கு வேலையை விட்டது இப்பொழுது கவலையாக இல்லைடா தீஷு.