Wednesday, May 26, 2010

Copper Nickle



சிறு சிறு பயிற்சிகள் மூலம் தீஷுவிற்கு அவளுக்குப் புரியும் அறிவியிலை விளக்க வேண்டும் என்று நினைத்து ஒன்று இர‌ண்டு ப‌யிற்சிக‌ள் செய்தோம். ஆனால் எல்லாவற்றையும் போல் இதையும் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். இப்பொழுது மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.

இந்தப் பயிற்சி Janice VanCleave's Play and Find Out about Science
புத்தகத்திலிருந்து எடுத்தது. Janice Vancleave நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். Play and Find out about Maths வும் நன்றாக இருக்கிறது. மற்ற புத்தகங்கள் படித்ததில்லை.

இந்தப் பயிற்சிக்கு செம்பு(copper) பொருட்கள் வேண்டும். எங்களிடம் சில அமெரிக்க நாணயங்கள் இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டோம். சிறிது வினிகர் எடுத்து, அதில் உப்பு கலந்து கொண்டோம். அவற்றில் கருப்பான செம்பு காசை போட்டால் பளிச் என்று சுத்தம் ஆனது. இது oxidation என்று Janice விளக்குகிறார்.

நாங்கள் ஒரு காசில் பாதியை மட்டும் வினிகர் கலவையில் போட்டோம். பாதி கருப்பாகவும் பாதி செம்பாகவும் இருந்தது. நான் சில காசுகளை போட்டு சிலவற்றை போடாமலும் வைத்திருந்து வித்தியாசம் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷு அனைத்தையும் போட வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.

ஒரு இரவு முழுவதும் காசையும் பேப்ப‌ர் ஒன்று சேர்க்க‌ப்ப‌ய‌ன்ப‌டும் ஒரு கிளிப்பையும் (அத‌ன் பெய‌ர் தெரிய‌வில்லை) வினிகர் கலவையில் போட்டு வைத்திருந்தோம். மறுநாள் காலையில் கிளிப் oxidation னால் செம்பாக மாறி இருந்தது. தீஷுவிற்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் பிடித்திருந்தது. இன்னும் சில வருடங்கள் கழித்து விளக்கினால், அவளுக்கு முழு தத்துவமும் புரியும் என்று நினைக்கிறேன்.

Monday, May 24, 2010

கறுப்பு வெள்ளை


தீஷுவின் பிறந்த நாள் பரிசாக ஒரு செஸ் போர்டு வந்திருந்தது. நான்கு வயதில் செஸ் புரியாது என்று எடுத்து வைத்துவிட்டேன். ஆனால் தீஷு கேட்டுக்கொண்டே இருந்தாள். அதனால் எங்கள் வீட்டிலிருந்த பழைய போர்டை எடுத்துக் கொடுத்தேன். சொல்லித்தருவதை அப்பாவிடம் ஒப்படைத்து விட்டேன்.

முதலில் அப்பா, அவர் காய்களை ஒவ்வொன்றாக வைத்துக்கொண்டே வந்தார். தீஷுவும் அதே போல் அவள் காய்களை அடுக்கினாள். பின்பு சில காய்கள் நகர்த்தினார்கள். ஆனால் எதிர்பார்த்தது போல் தீஷுவிற்குப் புரியவில்லை. போதுமென்று சொல்லி விட்டாள். மாலை அவளாகவே செஸ் போர்டு வேண்டும் என்றாள். எடுத்துக்கொண்டுத்தவுடன் எதிர்பாராத விதமாக அவளுடைய எல்லா காய்களையும் அவளே சரியாக அடுக்கினாள். அப்பா அவருடைய காய்களையும் அடுக்கச் சொன்னார். அடுக்கினாள். அடுத்து ஒவ்வொரு காய்களையும் காட்டி பெயர் சொல்லச் சொன்னவுடன் சொன்னாள்.

நான் கண்களை மூடி, தடவிப்பார்த்து சொல்லச் சொன்னேன். அதுவும் செய்தாள். பின்பு Mystery Bag போல் ஒரு பையில் வைத்துவிட்டு, தடவி பார்த்து அப்பா கேட்கும் காய்களை சரியாக எடுத்துக் கொடுக்க வேண்டும். அதுவும் நன்றாக செய்தாள். காய்களை நன்றாக கண்டுபிடிக்கவும், சரியாக அடுக்கவும் தெரிகிறது.

சில நாட்களுக்கு சில பொருட்கள் அதிகமாக எடுக்கப்பட்டும், விளையாடப்பட்டும் இருக்கும். அப்புறம் பல நாட்களுக்கு எங்கு இருக்கு என்று தெரியாது. அப்படி செஸ்ஸும் ஆகுமா அல்லது அடிக்கடி எடுக்கப்பட்டு விளையாடப்படுமா என்று பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sunday, May 23, 2010

இருவர் இருந்தால்

முன்பே ஆட் (odd) ஈவன் (even) சொல்லிக் கொடுத்திருந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருடமான நிலையில் இப்பொழுது அதைச் செய்தோம். தீஷுவிற்கு முன்பு செய்தது சுத்தமாக நினைவில் இல்லை. இந்த முறை சோழிகளுக்கு பதில் கண்ணாடி கற்கள்.


5*2 டேமில் ஒன்று excel லில் போட்டு பத்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். எங்கள் உறவினர் குழந்தையும் அன்று வந்திருந்தாள். இருவரும் சேர்ந்து செய்தனர். முதலில் 1 முதல் பத்து வரை எழுதி இருந்த அட்டைகளை வரிசையாக அடுக்கினர். பின்பு பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பர் வைத்து, அட்டையில் எழுதியிருந்த எண்ணின் மதிப்பிற்கு ஏற்ப ஒருவர் ஒருவர் மாற்றி வைத்தனர். ஒன்று - பக்கத்தில் ஜோடி இல்லாமல் இருக்கும், இரண்டில் ஜோடி இருக்கும், மூன்றில் ஜோடி இல்லாமல் இருக்கும் என்று வரிசையாக வைத்துக் கொண்டே வந்தனர். பக்கத்தில் ஃப்ரெண்ட் இருந்தால் ஈவன் என்றும், ஃப்ரெண்ட் இல்லையென்றால் ஆட் என்றும் சொல்லிக் கொடுத்தேன். இருவருக்கும் விளையாட்டு எண்ணத்தில் புரிந்த மாதிரி தெரியவில்லை.


பின்பு என் தோழியும் இதே மாதிரி தீஷுவிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். எப்படி புரிந்ததோ, மறுமுறை ஆட், ஈவன் என்றவுடன் டேபில் இல்லாமலே ஜோடி ஜோடியாக வைக்கத் தொடங்கினாள். மிகவும் எளிதாக செய்தாள். செய்கிறாள். மீண்டும் மீண்டும் கேட்டு ஒரு வாரமாக செய்து கொண்டிருந்தாள்.

அட்டைகளும் கற்களும் வைத்திருந்த நிலையில், ஈவனில் மட்டும் குதி எனறவுடன் ஒரு எண் மாற்றி மாற்றி குதித்தாள். இப்பொழுது ஒர் இலக்க எண்களில் ஆட் ஈவன் கற்களின் தேவையில்லாமல் சொல்லத்தெரிகிறது.

தரையில் எண்களை வரிசையாக எழுதிக் கொண்டேன். ஆடில் குதி என்றவுடன் 1,3,5,7,9 எழுதின கட்டத்தில் குதிக்க வேண்டும். இது போன்ற பயிற்சி ஒன்று விட்டு ஒன்று ஆட் என்று எளிதாக புரிய வைப்பதற்கு.

Friday, May 21, 2010

வித்தியாசம் கண்டுபிடி

குழந்தைகளுக்கான பயிற்சி புத்தகங்களில் மட்டுமில்லாது பெரியவர்களுக்கான புத்தகங்களிலும் இரண்டு படத்தில் வித்தியாசம் கண்டுபிடித்தல் மிகவும் பிரபலம்.

புத்தகங்களில் வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், ஒன்று போலுள்ள இரண்டு பொருட்களுக்கு வித்தியாசம் கண்டுத்தோம். அதில் நிறைய நன்மைகள் உள்ளன. படத்தில் காண்பதில், புலன்களில் கண்களுக்கு மட்டுமே வேலை உள்ளது. ஆனால் பொருட்களில் கண்டுபிடிப்பதில் மற்ற புலன்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன.



உதாரணத்திற்கு நாங்கள் இரண்டு மஞ்சள் பந்துகள் எடுத்துக் கொண்டோம். ஒன்று பிளாஸ்டிகாலானது. மற்றொன்று சற்று மிருதுவானது. மிருதுவான பந்தில் ஒரு ஸ்மைலி இருந்தது.

வித்தியாசம் கண்டுபிடிக்க, முதலில் ஸ்மைலியைச் சொன்னாள். பின்பு அதிலிருந்த எழுத்துக்களை சொன்னாள். நான் கேள்வி கேட்க கேட்க மற்ற வித்தியாசங்கள் கண்டுபிடித்தாள். அளவு (கண்கள்), ஹார்ட் & ஸாஃப்ட் (தொடுதல்), தூக்கி போட்டு சத்தம் கண்டுபிடித்தல் -பிளாஸ்டிக்கிலிருந்து சத்தம் வரும், மற்றதில் வராது (காது) முதலியன பயன்படுத்தப் படுகின்றன.

வித்தியாசம் கண்டுபிடிக்க வெவ்வேறு பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் வெவ்வேறு புலன்களுக்கு வேலை கொடுக்கலாம். வெந்நீரை ஒரு எவர்சில்வர் டம்ளரிலும், குளிர்ந்த நீரை ஒரு கண்ணாடி டம்ளரிலும் வைத்து வித்தியாசம் கண்டுபிடிப்பது ஒரு உதாரணம். சில நாட்களுக்கு எங்கள் வீட்டில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கொடுமை முடிய‌வில்லையா?

கடந்த சில பதிவுகளில் வாசிப்பத்தைத் தவிர வேற எதையும் எழுதவில்லை. பொறுத்தருளுக. இது வார்த்தைகள் உருவாக்கும் பொழுது எடுத்த‌ வீடியோ..













பொனிடிக்ஸ் கற்றுக் கொண்டால் எளிதாக‌ வார்த்தைக‌ள் உருவாக்க‌ முடிகிற‌து. இது Vowel "A" revise ப‌ண்ணும் பொழுது எடுத்தது.


எதுவும் மிக‌ முக்கிய‌ விச‌ய‌ம் இருந்தாலொழிய‌ மீண்டும் வாசிக்கும் ப‌திவு எழுதும் எண்ண‌ம் இல்லை :-))

Wednesday, May 19, 2010

தொப்பியில் பூனை எலி...

தீஷுவிற்கு வாசிக்கப் பழக்குவதற்கு ஏதுவாக மிக குறைவான வாக்கியங்கள் கொண்ட புத்தகங்கள் எங்களிடம் அதிகமாக இல்லை. இருக்கின்ற புத்தகங்களிலும் அவளுக்குத் தெரியாத வாக்கியங்கள் இடையில் இருப்பதால் அவளுக்கு என் உதவி தேவைப்பட்டது. முழு புத்தகத்தையும் அவளே வாசித்தத் திருப்தியை அவளுக்குத் தர, அவளுக்குத் தெரிந்த வாக்கியங்கள் கொண்ட புத்தகத்தை முன்பே அவளுக்காக செய்திருந்தேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்த்து.



இந்த முறை -at வாக்கியங்கள் கொண்ட புத்தகங்கள் இணையத்தில் தேடிய பொழுது எளிமையான புத்தகம் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆகையால் போன முறை போல செய்யலாம் என்று சில -at வாக்கியங்கள் உருவாக்கிக்கொண்டேன்.



cat

fat cat

fat cat sat

cat on mat

cat on hat

bat on mat

rat on mat

hat on mat

mat in hat

pat on cat

rat on hat

bat on hat



சென்ற முறை படங்கள் இணையத்திலிருந்து எடுத்திருந்தேன். ஆனால் இந்த முறை நல்ல படங்கள் கிடைக்கவில்லை. ஆகையால் ஒரு அதிர்ச்சிகரமான முடிவு எடுத்தேன். படங்களை நானே வரைந்து விட்டேன். :-)). தோழி ஒருவரும் சில படங்கள் வரைந்து கொடுத்தார்.



அதன் பின் சில இணையதளங்கள் வாசிக்க பழகுவதற்கான புத்தகங்கள் இலவசமாக வழங்குவதைப்பார்த்தேன். அதிலிருந்து எடுக்கத்தொடங்கியவுடன் தீஷு என் வரைபடங்களிலிருந்து தப்பித்துக்கொண்டாள். தளங்கள்

http://www.jmeacham.com/emergent.readers.htm (லிங்கில் பல லிங்க் உள்ளன)

http://www.hubbardscupboard.org/printable_booklets.html#WordFamilyBooklets

http://www.progressivephonics.com/

இவற்றில் மூன்றாவதாக உள்ள progressivephoncis ஒரு வாசிக்கப்பழக்கும் உத்தியை சொல்லித்தருகிறது. முற்றிலும் இலவசம். ஒரிரண்டு எழுத்துக்கள் ஒவ்வொரு புத்தகத்திலும் அறிமுகமாகுகின்றன. முதலில் நாமும் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிக்க வேண்டும். புத்தகத்தில் பெரிய எழுத்துடைய வார்த்தைகள் குழந்தை வாசிக்க வேண்டும். சிறிய எழுத்து நமக்கு. இவ்வாறே வாசித்துக் கொண்டே சென்றால் குழந்தை வாசிக்க பழகிவிடும் என்பது அவர்கள் உத்தி. அனைத்து தகவல்களும் தளத்தில் உள்ளன.

இவற்றிலிருந்து எடுக்கும் புத்தகங்கள் தீஷுவிற்கு personalized ஆக இருக்காது என்பதால் மேலும் சில புத்தகம் தயாரித்து தீஷுவை பயமுறுத்தலாம் என்ற யோசனை இருக்கிறது.

Tuesday, May 18, 2010

ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு

நாங்கள் இன்னும் இருக்கிறோம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பதிவுகள் எழுதவில்லை. ரீடரிலிருந்த பதிவுகள் சிலவற்றை சென்ற வாரயிறுதியில் படித்தேன். படிக்காதது இன்னும் மூன்று இலக்க எண்ணில் இருக்கிறது. எப்பொழுது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை. எழுதாதற்கு நேரமில்லை என்று இல்லை.

தீஷுவிற்கு இப்பொழுது கோடை விடுமுறை. நான் வேலைக்குச் சென்றபின் முதல் கோடை விடுமுறை. என் அம்மாவின் உதவியினால் கழிகிறது. இப்பொழுது நாங்கள் இருக்கும் பகுதியில் குட்டீஸ் அதிகம். ஆகையால் தீஷு பிஸி. தினமும் மாலையில் வந்தவுடன் வீடு வீடாக போய் அவளை தேட வேண்டியிருக்கிறது. கூப்பிட்டாலும் வருவதில்லை. வந்தாலும் கவனம் முழுவதும் விளையாட்டில் இருக்கிறது. ஆகையினால் என்னுடைய ஆக்டிவிட்டீஸ் குறைத்துக் கொண்டேன்.

சில நேரங்களில் வாசிப்பதற்கு விருப்பம் காட்டுகிறாள். சில நேரங்களில் விருப்பமிருப்பதில்லை. That is fine with me.. வாசிக்க பழகுவதில் தான் எங்கள் கூட்டு நேரம் கழிகிறது.

இனி தொடர்ந்து எழுதுவது என்று முடிவு செய்து இருக்கிறேன். பார்க்கலாம் :-)).

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost