Showing posts with label Books. Show all posts
Showing posts with label Books. Show all posts

Wednesday, December 4, 2013

எங்களுக்குப் பிடித்த புத்தகங்கள்

எனக்கும் என் கணவருக்கும் புத்தகம் படிக்கும் வழக்கம் உண்டு. வீட்டில் நூலகம் என்பது எங்கள் எதிர்கால கனவு. எங்கள் குழந்தைகள் இருவருக்கும் புத்தகம் படித்துக் காட்டும் வழக்கம் உண்டு. அதில் எங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள் பற்றிய இடுகை இது. இரண்டு வயது வரைக்கான குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகங்கள்.

1. Bright Baby Pack :  நான்கு தனித்தனி புத்தகங்கள். இரண்டு துணி புத்தகங்கள் மற்றும் இரண்டு காகித (அட்டை) புத்தகங்கள். சம்மு பிறப்பதற்கு முன்பு வாங்கினோம். அவள் மூன்று மாத குழந்தையாக இருந்தபொழுது திடீரென்று பால் குடிப்பதை நிறுத்திவிட்டாள். ஒவ்வொரு ஸ்பூனாக பால் கொடுத்தோம். அவள் தலையை அசைத்துவிட்டால் பால் கொட்டிவிடும் என்பதால் அவள் கவனத்தைப் புத்தகத்தில் வைத்திருப்போம். ஒருவர் புகட்டும் பொழுது மற்றொருவர் புத்தகத்தை வாசித்துக் காட்டுவோம். மிகவும் ரசித்தாள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம். சில குறைகள் (உதாரணத்திற்கு பசுவுற்கு பதில் கன்று) இருந்தாலும் எங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம். 


2. Smile : அன்பளிப்பாக வந்தது. குழந்தைகளின் சிரிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு. சம்முவிற்கு மிகவும் பிடித்த புத்தகம். புகைப்படத்தில் இருப்பது போல் செய்து பார்ப்பாள். ஆனால் புத்தகம் எளிதில் கிழிந்துவிட்டது. 


3. Duck and Goose :  எளிய ஓவியங்களுடன் சிறு வாக்கியங்கள் அடங்கிய புத்தகங்கள். நிறைய தலைப்புகளில் கிடைக்கின்றன. நாங்கள் படித்த அனைத்துப் புத்தகங்களும் எங்களுக்குப் பிடித்திருந்தன.



4. National Geographic Little kids:  பல தலைப்புகளில் கிடைக்கின்றன‌. நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தோம். வண்ணமயமான‌ புகைப்படங்கள் இதன் சிறப்பம்சம். இதன் ஸேப்ஸ்(Shapes) புத்தகம் படிக்கும் பொழுது தான் வடிவங்கள் கண்டுபிடிக்க  சம்மு கற்றுக் கொண்டாள். :))


5. I Spy : பல தலைப்புகளில் கிடைக்கும் இந்தப் புத்தகங்களில் I Spy little letters, I Spy little numbers, I Spy wheels மற்றும் I Spy toys மட்டுமே படித்திருக்கிறோம். மற்ற தலைப்புகளில் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த வேண்டும். பல பொருட்களின் படங்கள் இருப்பதால் பொருட்களின் அறிமுகங்கள் மற்றும் அதன் பெயர்களை குழந்தைகள் அறிந்து கொள்ளலாம். 



படங்கள் உதவி : amazon.com

இவை எங்களுக்குப் பிடித்தவை. உங்களுக்குப் பிடித்த சில புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துகளேன்!!

Tuesday, July 16, 2013

குழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல!!

குழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள். 4 முதல் 10 வய்து குழந்தைகள் எழுதிய‌ 12 கதைகள் வந்திருந்தன. உண்மையாகவே  குழந்தைகளின் கற்பனைத்திறனைக் கண்டு வியந்து போனேன்.

நான் இ‍‍-புக் செய்வது இது தான் முதல் முறை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் செய்திருக்கவில்லை. நான் எதிர்பார்த்ததை விட நேரம் எடுத்து விட்டது. சரியாக ப்ளான் செய்யவில்லை என்று நினைக்கிறேன். முதலில் text document - டாக உருவாக்கி, PDF வாக மாற்றி, புத்தகம் போல் செய்யலாம் என்று ஆரம்பித்து முடித்தும் விட்டேன். ஆனால் திருப்தியாக இல்லை.

அதனால் இணையத்தில் பேஜ் உருவாக்கும் இலவச மென்பொருள் தேடத் தொடங்கினேன். புத்தகம் உருவாக்கும் அளவிற்கு எந்த மென்பொருளும் இலவசமாக கிடைக்கவில்லை. ஐந்து பக்கங்கள் மட்டும் அல்லது வாட்டர் மார்க் என்று பல இன்னல்கள் இருந்தன. ஒரே ஒரு டிஸைன் டெம்பிளேட் மட்டுமே என் தேவைக்கு ஏற்றது போல் இருந்தது. அதை வைத்து அனைத்துப் பக்கங்களையும் உருவாக்கியுள்ளேன்.

புத்தக வடிவில் வாசிக்க‌


http://data.axmag.com/data/201307/20130717/U104675_F229002/index.html

மேலுள்ள லிங்கை சொடுக்கினால் புத்தக வடிவில் வாசிக்க முடியும். Flash தேவை.



PDF Download

1. டவுன்லோடு செய்ய விரும்புபவர்கள், எனது google docs - லிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

https://docs.google.com/file/d/0B9QoI8U_6Wlmeko1aXFuMDNOQ0E/edit?usp=sharing

Preview not available என்கிற மெஜேஸ் வருகிறது. ஆனால் டவுன்லோடு செய்ய முடிகிறது.

2. www.scribd.com இணையத்தளத்திலும் அப்லோட் செய்திருக்கிறேன். இங்கிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.





நேரம் எடுத்து கதை எழுதிய குழந்தைகளுக்கும், ஆர்வத்துடன் அனுப்பிய பெரியோர்களுக்கும் என் நன்றிகள். முதல் அனுபவம் என்பதால், தவறுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். தாங்கள் அனுப்பிய கதைகளில் பிழைகள் இருந்தால், சுட்டிக் காட்டுகள். திருத்தி மீண்டும் வலையேற்றுகிறேன்.

நன்றிக‌ள்!!!

Wednesday, May 29, 2013

சுயத்த‌ம்பட்ட‌மன்றி வேறு ஏதும் இல்லை..

இது ஒரு வெறும் சுயத்த‌ம்ப‌ட்ட‌ப் ப‌திவு. எல்லாமே அப்ப‌டித்தான் என்று சொல்லி விடமாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.

யானை ஜெரால்டும் சிறிய‌ ப‌ன்றி பிஃக்கியும் ந‌ண்ப‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் அடிக்கும் கொட்ட‌ங்க‌ளை An elephant and piggie Book என்று Mo Willems அவ‌ர்க‌ள் ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் எழுதியுள்ளார். இந்த‌ முறை I Broke My Trunk என்ற‌ புத்த‌கத்தை லைப்ரேரியிலிருந்து எடுத்து வ‌ந்திருந்தோம். தீஷு வாசிக்கும் பொழுது ச‌த்த‌மாக‌ ஏற்ற‌ இற‌க்க‌த்தோடு ப‌டித்துக் கொண்டிருந்தாள். அவள் வாசித்த‌தும் க‌தையும் எனக்குப் பிடித்திருந்த‌தால், மீண்டும் ஒரு முறை வாசிக்க‌ச் செய்து ப‌டம் எடுத்தேன். உங்க‌ளுக்கும் பிடித்திருக்கிற‌தா என்று பார்த்து விட்டு சொல்லுங்க‌ள்!!







Sunday, June 26, 2011

23 - 17 = ?

க‌ட‌ன் வாங்காம‌ல் 23 இல் இருந்து 17 ஐ க‌ழிக்க‌ முடியுமா??? முடியும் என்கிறார்க‌ள் சீன‌ர்க‌ள்.

நான் த‌ற்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் புத்த‌க‌ம் Knowing and Teaching Elementary Mathematics by Liping Ma. மா சீனாவில் பிற‌ந்து அமெரிக்காவில் டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். இவ‌ர் செய்த‌ ஆய்வின் அடிப்ப‌டையில் இந்த‌ புத்த‌க‌த்தை எழுதி இருக்கிறார். சீனர்க‌ள் 1880 வ‌ரை அபாக‌ஸ் முறையில் க‌ணித‌ம் ப‌யின்று இருக்கிறார்க‌ள். 1880 பிற்ப‌குதியில் ம‌டீர் (Mateer) என்ற‌ அமெரிக்க‌ர் சீன‌ மொழியில் த‌ற்பொழுது ந‌டைமுறையில் இருக்கும் க‌ணித‌ முறையைப் (நாம் பின்ப‌ற்றுவ‌து) ப‌ற்றி ஒரு புத்த‌க‌ம் எழுதி உள்ளார். அதில் கூட்ட‌ல், க‌ழித்த‌ல், பெருக்குத‌ல், வ‌குத்த‌ல் போன்ற‌ அடிப்ப‌டை முறைக‌ளுக்குத் தேவையான‌ வ‌ழிமுறைக‌ள் கூறியுள்ளார்.

கிட்ட‌த்தட்ட‌ நூறு வ‌ருட‌ங்க‌ளான‌ நிலையில் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு சென்ற‌ க‌ணித‌த்தில், த‌ற்பொழுது சீன‌ர்க‌ள் சிறிந்து விள‌ங்குகின்றார்க‌ள். சீன‌ர்க‌ளிட‌ம் இருக்கும் அடிப்படை க‌ணித‌த்தைப் ப‌ற்றிய‌ தெளிவு அமெரிக்க‌ர்க‌ளிட‌ம் ஏன் இல்லை என்ற‌ கேள்வியே அவ‌ரை ஆய்வு மேற்கொள்ள‌ வைத்துள்ள‌து. சீன‌ர்க‌ள் எத‌னால் அமெரிக்க‌ர்க‌ளைவிட க‌ணித‌த்தில் சிறந்த‌வ‌ர் என்ப‌த‌ற்கு ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் ஏற்கென‌வே அறிய‌ப்ப‌ட்டு இருந்தாலும், அடிப்ப‌டை க‌ணித‌ம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரிய‌ர்க‌ளின் தெளிவின்மையும் ஒரு கார‌ண‌மா என்ப‌து தான் அவ‌ரின் ஆய்வு.

சீன‌ ஆசிரிய‌ர்க‌ள் 11 முத‌ல் 12 ஆண்டுக‌ள் க‌ல்வி ப‌யின்ற‌வ‌ர்க‌ள். ஆனால் அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ள் 16 முத‌ல் 18 ஆண்டுக‌ள் ப‌ள்ளி க‌ல்வி ப‌யின்று, அத‌ன் பின் டிகிரி பெற்ற‌வ‌ர்க‌ள். இரு நாட்டு ஆசிரிய‌ர்க‌ளிட‌ம் அடிப்ப‌டை க‌ணித‌த்‌தில் (Elementary Mathematics) சில‌ கேள்விக‌ள் கேட்டு அவ‌ர்க‌ளின் புரித‌லை சோதித்து உள்ள‌ன‌ர். சீன‌ ஆசிரிய‌ர்க‌ள் க‌ணித‌ அடிப்படையை ந‌ன்கு புரிந்து வைத்துள்ளார்க‌ள் என்றும் அந்த‌ புரித‌ல் மாண‌வ‌ர்க‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌ட்டு, சீன‌ர்க‌ள் சிற‌ந்து விள‌ங்குகின்றார்க‌ள் என்ப‌து இவ‌ரின் முடிவு.

கேள்விக‌ள் 23 அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ளிட‌மும், 72 சீன‌ ஆசிரிய‌ர்க‌ளிட‌ம் கேட்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.

1. Subtraction with Regrouping
2. Multidigit Number Multiplication
3. Division by Fractions
4. The relationship between perimeter and Area

முத‌லிய‌ அடிப்ப‌டையை மாண‌வ‌ர்க‌ளுக்கு எவ்வாறு சொல்லிக் கொடுப்பார்க‌ள் என்று கேட்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அதில் முத‌லாவ‌தாக‌ உள்ள‌து - Subtraction with regrouping (க‌ட‌ன் வாங்கி க‌ழித்த‌ல்). மிக‌வும் க‌ணித‌ அடிப்ப‌டையான‌ க‌ழித்த‌ல், க‌ட‌ன் வாங்கி க‌ழித்த‌ல் போன்ற‌வ‌ற்றில் கூட‌ ஆசிரிய‌ர்க‌ளின் புரித‌ல் மாண‌வ‌ர்க‌ளின் புரித‌லுக்கு அவ‌சிய‌ம் என்று மா கூறுகிறார்.

23 - 17 போன்ற‌ க‌டன் வாங்கி க‌ழித்த‌ல் க‌ண‌க்கிற்கு அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ள், நம் முறை போல‌வே சிறிய‌ எண்ணில் பெரிய‌ எண் போகாத‌தால்(3-7) அடுத்த‌ எண்ணிலிருந்து க‌ட‌ன் வாங்க‌ வேண்டும் என்று கூறியுள்ளன‌ர். சிறிய எண்ணில் பெரிய‌ எண் போகாது (மீண்டும் நாம் சொல்வ‌து) என்ப‌தே த‌ப்பு என்கிறார் மா.

ம‌ற்றொருவ‌ர் 23 குழ‌ந்தைக‌ள் நிற்க‌ வைத்து, அவ‌ர்க‌ளில் 17 பேரை எடுத்து விடுவோம் என்று கூறியிருக்கிறார். அதில் ரீ குருப்பிங்கிற்கு (regrouping) வேலை இல்லை என்கிறார் மா. ஒரே ஒரு அமெரிக்க‌ ஆசிரியை ம‌ட்டும் குச்சிக்கட்டுக‌ள் வைத்து சொல்லித் த‌ர‌லாம் என்றும், குச்சிக‌ள் ப‌த்தவில்லை என்றால் ஒரு ப‌த்து குச்சிக்க‌ளுள்ள‌ க‌ட்டைப் பிரித்து சொல்லிக்கொடுக்க‌லாம் என்றும் சொல்லியிருக்கிறார். சீன‌ ஆசிரிய‌ர்க‌ளும் க‌ட‌ன் வாங்க‌ வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் (14%), அது அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ளை விட‌(83%) மிக‌வும் குறைவு.


சீன‌ ஆசிரிய‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்குத‌ல் என்ற‌ வார்த்தைக்கு ப‌தில் டீக‌ம்போஸ்சிங்(decomposing) என்ற‌ வார்த்தையை உப‌யோக‌ப்ப‌டுத்துகிறார்க‌ள். 23-17 , அமைப்பின் கார‌ண‌மாக‌வே 3லிருந்து 7 க‌ழிக்க‌ முடியாது என்ப‌தை விள‌க்குகின்றார்க‌ள். க‌ட‌ன் வாங்குத‌ல் என்ற‌ வார்த்தை டென்ஸிலிருந்து ஏன் ஒன்ஸிற்கு எடுத்து செல்கிறோம் என்று விள‌க்குவ‌தில்லை. ஆனால் டிக‌ம்போஸ்சிங் செய்கிற‌து என்கிறார்.

க‌ம்போஸ்சிங், கூட்ட‌லில் செய்த‌து போல் என்று விள‌க்குவ‌தால் ப‌டித்தை வைத்து அடுத்த‌தை சொல்லிக்கொடுக்கிறார்க‌ள். டீக‌ம்போஸ்சிங் செய்து வ‌ரும் எண்ணிலிருந்து எவ்வாறு கழிப்ப‌து என்ப‌தை மூன்று முறைக‌ளில் சொல்லிக் கொடுக்கிறார்க‌ள். இவை அனைத்தும் பின்னாட்க‌ளில் எவ்வாறு உத‌வுகின்ற‌ன என்ப‌தையும் மா விள‌க்குகிறார்.

அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ள் போல் தான் நாமும் ந‌ம் நாட்டில் சொல்லிக் கொடுக்கிறோம். மா சொல்லுவ‌து போல் சீன‌ ஆசிரிய‌ர்க‌ளின் அடிப்படை தெளிவு ந‌ம்மிட‌மும் இல்லை என்று தான் தோன்றுகிற‌து.

நிறைய‌ அடிப்படைக் க‌ணித‌ம் க‌ற்றுக் கொண்டிருக்கிறேன்

Thursday, May 26, 2011

ஒரு பக்கக் கதை

கதை எழுதும் ஆர்வம் தீஷுவிற்கு வந்திருக்கிறது. கதைகள் எழுதி, அவைகளை தொகுத்து ஒரு புத்தகமாக்க வேண்டுமாம். அவள் சொல்ல நான் எழுதிய முதல் கதை. அவளுக்குப் பிடித்த Frog and Toad கதைகளைக் கலந்து அவள் சொல்லியிருக்கிறாள். அவள் சொல்லியது அப்படியே:

Toad and Frog are friends
------------------------------

Once upon a time, a frog and toad were in the house and frog came along and said, "We will go out. We are going to see when spring is coming". And toad came out of his house. And frog and toad went along walk and he saw a mailbox and the mailbox filled with a letter. And they saw whose name is this. And frog said this is your mailbox. I took a round for you and toad said ok.

Frog and toad went to toad's house. And they drank coffee. And that was yummy. "What is this coffee?". "I put complan" said toad. "Why did you put complan?" "Why means that will be very nice to eat.. so I did like that" said toad. And frog and toad went to mall. Frog said, "We will buy this dress and it will be beautiful to put for you. So only I buy this dress for you".

"I am going to go home. I have something to do. What means I am going to write a mail for you. What I am going to write is surprise.you see, that is surprise. I will not tell now. I am going to write a mail for you. You will like your letter" said toad.

The letter came. "You will read now". Dear frog, I am glad that you are my best friend. Whereever you are going, I will come with you. I will not leave you at all. And you will not leave me at all. You and I are friends. Why means we will share the things.So I will share with you and you will share with me. Frog said ok. Now both are friends.

நேற்று இரவு என் பெயரை திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருந்தாள். நான் அவளிடம், My name is Dheekshitha. My father's name is என்று எங்கள் அனைவரின் பெயர்களையும் எழுத சொன்னேன். எழுதி முடித்தவுடன் மீண்டும் எழுத வேண்டும் என்றாள். அதற்கு பதிலாக சென்ற வாரம் சென்று வந்த பீச்சை பற்றி 2 வரி என்றவுடன், I went to beach. I saw so many pebbles and one shell என்று எழுதினாள். Beach, many, pebbles போன்றவைக்கு நான் உதவினேன். முடித்தவுடன் கட்டுரைக்கு கீழே My name is Dheekshitha and I am author என்று எழுதி வைத்திருக்கிறாள் :-)))

Wednesday, May 11, 2011

Chapter books

குழந்தைகளின் கேட்கும் திறன் அவர்களின் வாசிக்கும் திறனைக் காட்டிலும் அதிகம். நான்கு வயது குழந்தைக்கு, இரண்டாவது வகுப்பு படிக்கும் குழந்தை வாசிக்கும் புத்தகத்தை, நாம் வாசித்துக் காட்டினால் கேட்டு புரிந்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு : http://www.daddyread.com/readingChapter.html. இப்பொழுது தீஷுவிற்கு சாப்டர் புத்தகங்கள் மேல் ஆர்வம் வந்திருக்கிறது. சாப்டர் புக்ஸ் என்பது ஒரு பெரிய கதை, பல பகுதிகளாக (chapters) பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுயிருக்கும்.

daddyread.com லில் நல்ல சாப்டர் புக்ஸ் லிஸ்ட் உள்ளது. எனக்கும் தீஷுவிற்கும் விருப்பமான மூன்று சாப்டர் புக்ஸ் பற்றி இங்கு குறிப்பிட்டு உள்ளேன்.

Frog and Toad (Series):



நான் முதல் Frog and Toad புத்தகம், Blossom புக் ஸ்டோரில் வாங்கினேன். அப்பொழுது தீஷுவிற்கு விருப்பமிருக்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியாவிலிருந்து கிளம்பும் பொழுது, அங்கிருந்து வெகு சில புத்தகங்களே எடுத்து வந்தோம். மிகுந்த யோசனைக்குப் பிறகு நான் அதை எடுத்து வந்தேன். முதலில் ஹோட்டலில் சில நாட்கள் தங்கி இருந்தோம். அப்பொழுது ஏதாவது புத்தகம் வாசித்துக் காட்டு என்று அவள் கேட்டவுடன், என் கைக்கு அகப்பட்டது இந்த புத்தகம். தீஷுவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. திரும்ப திரும்ப வாசிக்கச்சொல்லி கேட்டுக் கொண்டியிருந்தாள். சில கதைகள் வரிக்கு வரி மனப்பாடம் ஆகிவிட்டன. ஒவ்வொரு சாப்டரும் ஒரு கதை. எங்களுக்கு மிகவும் பிடித்து விட்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் லைப்ரேரியிலிருந்து வெவ்வேறு புத்தகங்கள் எடுத்து வந்து வாசிக்கிறோம். சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக வாசித்துக் காட்டுங்கள்.




Three Stories you can read to your cat/dog/ Bear (Series):

கதை நாய்க்கு சொல்லுவது போல் அமைந்து உள்ளது. அதைப் போல் பூனை மற்றும் கரடிக்கு என தனித்தனி புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் 3 கதைகள். Three more stories you can read என்றும் புத்தகங்கள் உள்ளன. மிகவும் ரசிக்கத்தக்க கதைகள். எங்கள் இருவருக்கும் மிகவும் விருப்பம்.

Magic Tree House :



ஒரு மாஜிக் மர வீடு ஜாக்கையும், ஆனியையும் அவர்கள் விரும்பும் காலத்திற்கு கூட்டு செல்கிறது. அவர்களுக்கு அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பது த்ரிலர், சில உண்மைகள் என செல்கிறது கதை. ஒரு புத்தகம் ஒரு கதை. ஒவ்வொரு புத்தகமும் 40 பக்கங்கள் முதல் 90 பக்கங்கள் வரை உள்ளன. நான் கிட்டத்தட்ட 45 புத்தகங்கள் வரை பார்த்தேன். அதற்கு மேலும் இருக்கலாம். குழந்தைகள் விரும்பி இக்கதைகள் கேட்க கூடும். எங்களுக்குப் பிடித்துயிருக்கிறது. நாங்கள் இரண்டு புத்தகங்கள் படித்து இருக்கிறோம்.

Wednesday, January 26, 2011

குழந்தைகளின் புத்தகத்தில் இந்த வாக்கியங்கள் தேவையா?

"என் அப்பா பயங்கரக் குண்டு"
"இந்தக் குண்டர்கள் எல்லாம் கோழைக் குண்டர்கள்"
"உன் அப்பா ஒரு தடியன்.. மடையன்.."
"கோழைக் குண்டர்கள்"

இவ்வாக்கியங்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான புத்தகமான குட்டிக் குட்டி முயல் புத்தகத்தில் வருவது. பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் வந்துள்ளது.

குழந்தைகள் புத்தகத்தில் இது போன்ற வாக்கியங்கள் தேவையா? மொழி பெயர்க்கும் பொழுது ஆசிரியர் அவ்வாக்கியங்களை சற்றே மாற்றி இருக்கலாமே.

மேலும் பிற முயல்களை அடித்து வெற்றி (!) பெற்று வரும் தன் குட்டி முயலை அப்பா முயல் பாராட்டுகிறார். பிற முயல்கள் தப்பே செய்திருந்தாலும் அடிப்பது தான் சரியா? நான் வாசிக்கும் பொழுது இவ்வாக்கியங்க்ள் மாற்றியோ அல்லது விட்டு விட்டோ வாசிக்க‌ வேண்டியுள்ள‌து.

புத்த‌க‌க்க‌ண்காட்சியில், குட்டிக் குட்டி முயல் தவிர, பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் மேலும் சில புத்தகங்கள் வாங்கினோம்.

1.பூனை கணக்குப் படிக்கிறது
2.இனி பால் வேண்டாம் அம்மா
3.வால்களின் கதை
4.நீங்கள் என் அம்மாவா?

போன்றன என் நினைவில் உள்ளன. தேவையற்ற‌ வாக்கியங்கள் இல்லாதது ஆறுதல் அளிக்கிறது. சிறு சிறு கதைகளுடன் புத்தகங்கள் அவளின் ஆர்வத்தைத் தக்க வைக்கின்றன.

தூலிகாவின் Line and Circle தீஷுவிற்கு வாசிக்கப் பழக ஏதுவாக இருக்கும் என்ப‌த‌ற்காக‌ வாங்கினேன். அதிலிருந்த படங்கள் கொள்ளை அழகு. கோடுகளையும் வட்டங்களையும் வைத்து இத்தணை படங்கள் வரைய முடியுமா என்று தீஷுவிற்கு ஆச்சர்யம். படித்த முடித்தப்பின் வேறு என்ன படங்கள் உருவாக்கலாம் என்று விளையாண்டு கொண்டிருந்தோம். பயனுள்ள புத்தகம். ஆனால் விலை சற்று அதிகம் என்பது என் எண்ணம்.

சிபிடி வெளியீட்டில்

1. கிராமத்திற்கு வந்த குரங்குகள்
2. பலூனும் நானும்

வாங்கினோம். அதில் கிராமத்திற்கு வந்த குரங்குகள் சற்று பெரிய கதை. ஒரு வாசிப்பில் அவளுக்கு அந்த புத்தகத்தை வாசிக்க முடியவில்லை.

த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் என்ப‌தால், புத்தகங்களை வாசிக்க வாசிக்க தீஷுவிற்கு புரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வாசித்தவுடன் தீஷு, நல்ல தமிழல(!) திரும்ப சொல்லுங்க என்கிறாள்.

இப்புத்த‌கங்க‌ள் த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிமுக‌த்திற்கு உத‌வுகின்ற‌ன‌.

Sunday, April 19, 2009

முதல் புத்தகம்

தினமும் சில நிமிடங்கள் மேக்னெட்டிக் எழுத்துக்களால் எண்கள் உருவாக்கி விளையாடுகிறோம். இப்பொழுது சிறிது முன்னேற்றம் இருக்கிறது. ஆயினும் சில நேரங்களில், வாசிப்பதை வலதிலிருந்து இடதிற்க்குத் தான் செய்கிறாள். 12 to 19 வரை முதலில் வலதிலிருக்கும் எழுத்துகளின் சத்தம்(twelve, thirteen...) வருவதால் குழப்பம் அதிகமாக இருக்கிறது. ஆனால் விருப்பமாகச் செய்கிறாள். ஆகையால் இன்னும் சில நாட்களுக்குத் தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்.



தீஷுவிற்கு இப்பொழுது வார்த்தையின் முதல் எழுத்தைக் கண்டுபிடிக்கத் தெரிகிறது. Cup என்றால் C என்ற எழுத்தில் தொடங்குகிறது என்பதை பொனிடிக்ஸ் படி கண்டுபிடித்து விடுகிறாள். ஆனால் முடியும் எழுத்தைச் சொல்லு என்றால், முடியும் எழுத்து என்றால் என்ன என்று புரியவில்லை. ஆகையால் Rhyming words விளையாண்டோம். நான் cat என்றால், rhyming word bat என்று சொல்ல வேண்டும். ஆனால் அவளுக்குப் புரியவில்லை. ஆகையால் rhyming words பத்து படங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். அதை வெட்டி, அவளை வரிசையாக ஒட்டச் சொன்னேன். படத்திற்கு நேராக அந்த வார்த்தைகளை எழுதச் சொன்னேன். நான் எடுத்துக் கொண்ட வார்த்தைகள் : cat, mat, hat, rat, ten, hen, pen, van, can, fan போன்றவை. எழுதின பேப்பரை புத்தக வடிவில் ஒட்டி, முதல் பக்கத்தில் அவள் பெயரை எழுத வைத்தேன். அந்த புத்தகம் அவளால் எழுதப்பட்டது போன்று இருக்கிறது. தினமும் எடுத்து வாசிப்பதால், Rhyming words பற்றியத் தெளிவு கிடைக்கும். தான் எழுதிய புத்தகம் என்ற பெருமையும் அவளுக்கு இருக்கிறது.


ஜலதரங்கம் செய்ய பயன்படுத்திய தண்ணீரை ஐஸ் டிரேயில் அவளை ஊற்றச் செய்திருந்தேன். ஐஸை எடுத்து, சுட வைத்து திரும்பவும் தண்ணீர் ஆவதைக் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் எதை ஒரு பத்திரத்திலிருந்து இன்னொரு பத்திரத்திற்கு ஸ்பூனால் மாற்ற வேண்டும் என்றாள். அவள் விருப்பப்படி அதையே செய்தோம்.

வாங்கிய மளிகைப் பொருளை, பாக்கெட்டிலிருந்து பாட்டிலுக்கு மாற்றும் பொழுது, கீழே டிரே வைத்திருந்தால், டிரேயில் கொட்டியப் பொருளை, பாட்டிலுக்கு மாற்றுவது சற்று சிரமமானது. தட்டை பாட்டிலுக்கு நேராகத் திருப்பி கொட்ட வேண்டும். அதேப்போல் தட்டிலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு கற்களை மாற்றச் சொன்னேன். கல் என்பதாலும் தட்டு சிறிதாக இருந்ததாலும் எளிதாகச் செய்தாள். பெரிய டிரேயில், ரவை போன்றவற்றை சிறு வாயுள்ள பாத்திரத்திற்கு மாற்றுவது சிரமமானதாக இருக்கும் என நினைக்கிறேன். சில நாட்கள் கழித்து முயற்சி செய்ய வேண்டும்.

Wednesday, April 8, 2009

ஒரு மாண்டிசோரி புத்தகம்

தோழி ஒருவர் மாண்டிசோரி புத்தகம் ஒன்றின் லிங்க் அனுப்பியிருந்தார். இந்த Dorothy Canfield Fisher என்பவரால் 1912டில் எழுதப்பட்டது. இப்பொழுது அச்சில் இல்லை. கூகுள் புக்ஸிலிருந்து எடுத்திருக்கிறார்கள். சில பக்கங்கள் படித்துப் பார்த்தேன். அனைவருக்கும் உபயோகமாகயிருக்கும் என்று தோன்றியது.

புத்தகம் இங்குள்ளது.

Thursday, January 29, 2009

புத்தகங்கள்

குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டீஸ் புத்தகங்களில் எனக்கு பிடித்தவை.

1. The playful toddler by Daniel,Becky
2. Scribble Art by MaryAnn F. Kohl
3. Preschool Art by MaryAnn F. Kohl
4. The encyclopedia of Infant and Toddler activities by Kathy Charner
5. Jump into Math by Rae Pica
6. Jump into Literacy by Rae Pica
7. Young at Art by Susan Striker
8. Unplugged Play: no batteries, no plugs by Bobbi Conner
9. 365 TV-Free activities you can do with your child by Steven J. Bennett and Ruth Bennett

இந்தியாவில் எதுவெல்லாம் கிடைக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் worth reading.

Wednesday, June 4, 2008

Books

This week we got "Gallop - A scanimation picture Book" by Rufus Butler and "Can you see what I see" by Walter Wick. The scanimation picture book has to be in sure to read book list. Whenever you move the pages in the book, the animal in the page moves. Dheekshu tried moving the page with various speed and checked the animal's movement. The next book "Can you see what I see" is a bit challenge for her. We need to locate some objects from the picture which has a group of similar objects. She is able to find out one or two but not much. This book is for Beginning Reader skill. I think I need to get the previous skill level book "First Reader" for her.

Tuesday, June 3, 2008

Hungry Caterpillar


We borrowed the book "The very hungry Caterpillar" by Eric Carle from the library. Dheekshu was very excited saying that caterpillar eats by making holes. After reading the book, she understood that caterpillar becomes butterfly. Then we made a caterpillar using construction paper. She was quite interested in applying glue to the paper and I did all the remaining work :-). We got the idea of making caterpillar from here.

I was not sure very sure whether I can give her the store purchased gule. So I prepared it at home. I got that idea from the book Toddler Art by Susan Hodges. It is a nice book that can give hours of fun activities for toddlers. The glue came out pretty well and it was very much sticky.


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost