ஞாபகசக்தியை அதிகரிக்க நாங்கள் மேற்கொள்ளும் வழிமுறையைப் பற்றியது அந்த இடுகை. தீஷுவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் நினைவுப்படுத்த வேண்டும். ஒரு எக்சல் ஷீட்டில் ஒவ்வொரு கிழமைக்கும் அவளுக்கான வேலைகளை எழுதி, பிரிண்ட் அவுட் எடுத்து ஃப்ரிஜ் கதவில் ஒட்டி வைத்திருக்கிறேன். ஆனால் தினமும் அந்தப் பேப்பரைப் பார் என்று நினைவுப்படுத்த வேண்டும் :((. ஒரு வேலை முடித்து விட்டு இன்னொரு வேலை செய் என்று இரண்டு வேலைகள் ஒரே நேரத்தில் கொடுத்தால், முதல் வேலை முடித்தவுடன் இரண்டாவது வேலையை மறந்துவிடுகிறாள். இந்த வயதில் இது சகஜம் தான் என்று டாக்டர், டீச்சர் எல்லோரும் சொல்லிவிட நிம்மதி அடைந்தேன். ஆனால் ஒரு நாள் பள்ளியிலிருந்து புத்தகப்பையை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டாள் :((. அவள் ஞாபகசக்தியை அதிகரிக்க சில வழிமுறைகளை மேற்கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம்.
1. மோனோபோலி (Monopoly) நம் ஊரில் பிஸ்னஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடுதல் : தாம் வாங்கிய இடங்களில் பெயர்களை நினைவில் வைத்திருந்து வாடகை வாங்க வேண்டும். அவள் வாடகை கேட்கவில்லை என்றால் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிடுவேன். ஆனால் அனைத்து இடங்களில் பெயர்களையும் நினைவில் வைத்து இப்பொழுது இந்த விளையாட்டில் நல்ல முன்னேற்றம்(!).
2. இரண்டு வேலைகளை செய்யப் பழக்குதல் : என் கணவரும் தீஷுவும் விளையாடும் இந்த விளையாட்டு இரண்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்தல். உதாரணத்திற்கு எளிமையான கணிதக் கணக்குகளை கேட்டுக் கொண்டே அவள் முதுகில் தட்டிக் கொண்டேயிருப்பார். கணக்குகளுக்கு விடைகளை அளித்துக் கொண்டே வர வேண்டும் மேலும் இறுதியில் எத்தனை முறை தட்டினார் என்று சொல்ல வேண்டும்.
3. www.Lumosity.com : இது என் கணவரின் யோசனை. கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் லுமோசிட்டி நரம்பு மண்டல நிபுணர்கள் (Neuro Scientists) வடிவமைத்தது என்று சொன்னவுடன் சற்று நம்பிக்கை பிறந்தது. சில தினங்களாக தினமும் ஒரு முறை விளையாடுகிறாள். நாங்கள் கம்ப்யூட்டரில் விளையாண்டது இல்லை. ஐபாட். கம்ப்யூட்டரிலும் அதே மாதிரி விளையாட்டுகள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
4. தூக்கம், பிடித்தமான வேலைகளை இணைந்து செய்தல் : முன்பு அவளை எட்டரை மணிக்கு தூங்கச் சொல்லுவேன். நீயும் வந்து படு என்று நேரத்தைக் கடத்திக் கொண்டே இருப்பாள். அதனால் இப்பொழுது நானும் அவளுடன் சேர்ந்து தூங்கச் சென்று விடுகிறேன். அதே போல் அவள் வேலைகளில் எதிலெல்லாம் இணைந்து செய்ய முடியுமோ அவற்றை இணைந்து செய்கிறோம். அவ்வாறு செய்யும் பொழுது அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவள் இறுக்கம் தளரும் பொழுது அடுத்து செய்ய வேண்டியது நினைவுக்கு வந்துவிடுகிறது.
5. Brain Gym Exercises : கீழே வீடியோவிலுள்ள பயிற்சிகளை இணைந்து காலையில் செய்கிறோம். சூரிய நமஸ்காரம் 10 முறை செய்கிறோம்.
6. மேலும் அதிக தண்ணீர், எண்ணெய், இனிப்பு, ஃபுட் கலரிங் குறைப்பு என்று சமையலிலும் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். சுடோகு, குறுக்கொழுத்து, விடுகதைகள் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவது உண்டு.
இவற்றால் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா என்று முழுமையாகத் தெரியவில்லை ஆனால் பள்ளியிலிருந்து பையை எடுத்து வந்துவிடுகிறாள் :)). உங்கள் குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
பயனுள்ள பதிவு
ReplyDeleteஎவ்வளவு சிரமப்படுகிறீர்கள்... ஆனாலும் பொறுப்பாக, பொறுமையாக... தீஷுவிற்கு விரைவில் ஞாபகசக்தி அதிகம் ஆகி விடும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல முயற்சிகள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல முயற்சி..... பாராட்டுகள்.
ReplyDeletelumosity பணம் கட்டி உறுப்பினராக வேண்டுமல்லவா தியானா?
ReplyDeleteஇந்த வயதின் விளையாட்டுத்தனமாக இருக்கலாம் தியானா, கவலைப்படாதே. உன் முயற்சிகள் அனைத்தும் அருமை, வாழ்த்துகள்!
கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!!
ReplyDelete@கிரேஸ், lumiosiy ஐபாட் ஆப்ஸில் இலவசமாக தினமும் 3 விளையாட்டுகள் விளையாடலாம். தற்பொழுது நாங்கள் இலவசமாகத்தான் உபயோகித்து வருகிறோம்.