12-Jan-2014 அன்று இரண்டாவது பிறந்த நாள் கண்ட என் செல்லக்குட்டி சம்முவிற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல!
ப்ளாக் எழுதத் தொடங்கிய சமயத்தில் தீஷுவின் புகைப்படத்தையும் அவளைப் பற்றிய சில சொந்த விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறேன். அவளது புகைப்படங்களை இணையத்தில் வேறு சில தளங்களில் பார்த்தவுடன், அவள் ப்ரைவசிக்காக இப்பொழுது அவள் முகத்தைப் போடுவதில்லை. ஆனால் சம்முவைப் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. அதனால் இந்தப் பிறந்த நாள் ஸ்பெஷல் இடுகை!
சம்மு நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் எங்கள் வாழ்க்கையில் இணைந்தவள். தனக்கு தங்கை தான் வேண்டும் (தம்பி என்றால் அடிப்பான்) என்று கடவுளிடம் கேட்டதால் தான் தங்கை பிறந்திருக்கிறாள் என்று தீஷுவிடம் கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தியவள். மூன்று மாதங்களில் பால் குடிப்பதை நிறுத்தி, டாக்டரை குழப்பியவள். ஸ்பூனிலும் ஃபில்லரிலும் பால் கொடுக்க வைத்து எங்கள் முதுகை ஒடித்தவள். அவள் முதல் வருடத்தை நினைத்தால் இவை தான் நினைவுக்கு வருகின்றன. எங்களின் மூவர் உலகத்தை நான்காவதாக இணைந்து முற்றிலும் மாற்றியவள் சம்மு.
புதிய வளர்க்கும் அனுபவத்தைக் கொடுத்தவள். ஒவ்வொரு குழந்தையும் வேறு என்று புரிய வைத்தவள். தீஷுவிடமிருந்து அனைத்திலும் வித்தியாசம். அவள் சிரிப்பில் அனைவரும் மயங்குவது நிச்சியம். அக்கா செல்லம். தமிழில் சரளமாக பேசுகிறாள். ஆங்கிய வாக்கியங்கள் அக்காவின் உபயத்தால் வருகின்றன ("Just kidding", "Look at this Amma", "This is .."). அப்பா தன் உறவுகளிடம் வீட்டில் தெலுங்கு பேசுபவர். மதுரையில் வளர்ந்ததால் தமிழ் பேசவும் வாசிக்கவும் தெரியும் (இன்று இன்னொரு விஷயம் சபைக்கு வந்திருக்கிறது :)).அதனால் அப்பாவிடம் பேசி தமிழும் தெலுங்கும் ஒரே வார்த்தையில் வருகிறது. உதாரணத்திற்கு உட்கார்ந்திருக்கிறேன் என்பதற்கு கூச்சுக்கிறேன் என்றாள் :))
ஒரு விநாடியில் எடுத்த புகைப்படத்தில் மட்டுமே பார்த்த சம்முவைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். :))
சம்முவின் குரலில் அச்சுதம் கேசவம் பாடல் Play Song
அவளை எங்கள் குழந்தையாக பெற்றதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். எல்லா வளங்களையும் பெற்று என் செல்லம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
பி.கு :பிறந்த நாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்தமுறை சம்முவின் பிறந்தநாள் விழாவின் தீம் : பட்டாம் பூச்சி. அனைத்து அலங்காரப் பொருட்களும் வீட்டிலேயே செய்தோம். அதைப் பற்றி அடுத்த இடுகையில் எழுதுகிறேன் :))
சம்மு விற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteத.ம.1
ReplyDeleteசம்முவிற்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்களின் மகிழ்ச்சி ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசம்முவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசம்முகுட்டி செல்லக்குட்டி தான்..முதல் வருடம் ஒவ்வொரு நாளும் எனக்கே நினைவு இருக்கிறதே :) மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் தியானா! எல்லா வளமும் பெற்று நீங்கள் நால்வரும் என்றும் சிறப்பாக வாழ வேண்டிக்கொள்கிறேன்!
ReplyDeleteஉன் கைவண்ணம் அருமை..உன் தோழி என்பதில் பெருமையாக இருக்கிறது!
Happy B'day Sammu!
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteமனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் சம்ன்விதா.....
ReplyDelete