எந்த ஒரு அலங்காரத்திற்கு ஒரு கருப்பொருளை (theme) எடுத்துக் கொண்டால் அலங்காரத்தை எளிதாக செய்ய முடியும் என்பது என் எண்ணம். பலூன் போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையும் முடிந்தவரை தடுத்துவிடுவேன். சம்மு பிறந்தநாளுக்கு நான் எடுத்த கருப்பொருள் வண்ணத்துப்பூச்சி.
வண்ணத்துப்பூச்சி படங்கள் பல இணையத்தில் கிடைத்தாலும் நாமே ஒன்று உருவாக்க வேண்டும் என்று பல மென்பொருட்களில் முயற்சித்து இறுதியில் வேர்ட்டில் (Word) வண்ணத்துப்பூச்சி போல் ஒன்றை உருவாக்கினேன். இந்த வருடம் ஏதாவது ஃக்ளிப் ஆர்ட்(clip art) செய்யும் மென்பொருள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நினைத்திருக்கிறேன். சுயமாக கற்றுக் கொள்ள எளிமையான மென்பொருள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!
வண்ணத்துப்பூச்சி வரைந்து முடித்தவுடன், அதே படத்தை பல இடங்களில் உபயோகப்படுத்திக் கொண்டேன். விருந்திர்னர்களை வரவேற்க ஹால் வாசலில் "Welcome to Samanvitha's B'fly Party" என்ற வார்த்தைகளுடன், என்ன உணவு என்று தெரியப்படுத்தும் ஃபுட் டாகில் (Food Tag), "Thanks for celebrating with me" என்று ரிடர்ன் கிஃப்ட்டி என்று அனைத்து இடத்திலும் அதே வண்ணத்துப்பூச்சி.
வண்ணத்துப்பூச்சி என்று சொல்ல மட்டும் செய்கிறேன். ஆனால் என்ன வரைந்தேன் என்று காட்டவில்லையே! நான் வரைந்த வண்ணத்துப்பூச்சி இந்த தொப்பியில் உள்ளது தான். தொப்பியும் நானே செய்தேன். ஆனால் அணிவிக்க மறந்துவிட்டேன். :((. அதே போல் செய்த மற்றவற்றை புகைப்படம் எடுக்க மறந்துவிட்டேன் :((
விழாவிற்கு வந்தவர்கள் கையொப்பமிட பட்டாம்பூச்சிகள் கொண்ட ஒரு கையொப்ப ஷீட் உருவாக்கினேன். அந்த ஐடியா இணைத்தில் எடுத்தது. வந்த சில நண்பர்கள் கையொப்பமிட்டு உள்ளார்கள்.
அலங்காரத்திற்கு "Happy Birthday Samanvitha" என்ற ஒரு பானர் செய்தேன். எழுத்துகள் பிரிண்ட் அவுட் எடுத்து, வெட்டி, அதை பெயிண்ட ஸாம்பிளில் வைத்து வரைந்து வெட்டிக் கொண்டேன். இப்பொழுது வண்ண வண்ண எழுத்துகள் கிடைத்தன. வண்ணத்துப்பூச்சி வடிவங்களில் வண்ணப் பேப்பரை வெட்டி அதில் கலர் எழுத்துகளை ஒட்டிவிட்டேன். அவ்வாறு ஒட்டியவற்றை ஒரு ரிப்பனில் ஒட்டிவிட்டேன். பானர் ரெடி. எனக்குச் செய்ய அதிக நேரம் எடுத்தது இது தான்.
பானரைச்சுற்றி அலங்கரிப்பதற்கு காகித வண்ணத்துப்பூச்சிகள் செய்தேன். தூக்கிப்போட வைத்திருந்த ஒரு மாத இதழில் வண்ணமயமான படங்கள் இருந்தன. அந்தப் பக்கங்கள் கொண்டு செய்தேன். இவை செய்யும் பொழுது படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். பிறகு வேறு ஒரு இடுகையில் செயல்முறை பகிர்கிறேன்.
வண்ணத்துப்பூச்சி பறப்பது போல் ஹாலை அலங்கரிக்க நினைத்தேன். இரு வண்ணத்துப்பூச்சிகள் இணைத்து 3டி எபெக்ட உருவாக்கினேன். ஆனால் அந்த ஹாலில் அவ்வாறு அலங்கரித்தால் எங்கள் தலையில் இடித்தது. அதனால் வெறுமே தொங்க மட்டும் விட்டோம். கேக் வைத்திருந்த மேஜையிலும் அதே பட்டாம் பூச்சிகள் தாம்.
டிஸ்யூ பேப்பரில் செய்த பட்டாம் பூச்சிகளை ஓரங்களில் ஒட்டிவிட்டோம்.
ஒரு பிறந்தநாள் விழாவிற்கு எதற்கு இந்த மெனக்கிடல் என்று கேட்டவர்களும் உண்டு. புகழ்ந்தவர்களும் உண்டு. எனக்கு இது போல் அலங்கரிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது என்று நானே அறிந்து கொண்ட தருணம் அது.
அடுத்து தீஷுவின் பிறந்த நாள் விழாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அவளுக்கு இந்த வருடம் தங்கப் பிறந்த நாள். பிறந்த தேதியும் வயதும் ஒன்றாக வந்தால் அது தங்கப் பிறந்த நாள். அதாவது எட்டாம் தேதி பிறந்தவர்களுக்கு எட்டு வயது பிறந்தநாள் தங்கப் பிறந்த நாள். வாழ்வில் ஒரு முறை தான் வரும். நிறைய தங்க நிற பெயிண்ட்டும் கிளிட்டரும்(glitter) உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன் :))
அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
என்னவொரு ரசனை... உங்களின் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... மனமெல்லாம் வண்ணத்துப்பூச்சி பறக்கிறது மகிழ்ச்சியுடன்...
ReplyDeleteகலக்கிட்ட தியானா...எல்லாமே மிக மிக நன்றாக உள்ளது...
ReplyDeleteதங்கப் பிறந்தநாளா..எனக்குத் தெரியாமல் போய்விட்டதே..
வாழ்த்துகள்!
அழகான வண்ணத்துப்பூச்சிகள். எத்தனை பிரயத்தனப் படுகிறீர்கள் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களின் திறமையயை வெளிக்காட்டும் பதிவு தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்
படங்கள் எல்லாம் அழகு..
கவிதையாக என்பக்கம் வாருங்கள்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள்.சின்ன குழந்தைக்கு.
ReplyDeleteதங்கப்பிறந்தநாள் கொண்டாட இருக்கும் தீஷீக்கு வாழ்த்துக்கள்
உங்கள் அருமையான கைவண்ணத்தில் வண்ணத்துப் பூச்சிகள் அழகு.
வாழ்த்துக்கள்.
குழந்தைகளுக்காக செய்யும் மெனக்கெடல்கள் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சியை தரும்... அருமை... கலக்கிட்டீங்க...வாழ்த்துகள்..
ReplyDeleteகருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!!
ReplyDeleteதகவலுக்கு நன்றி தனபாலன்!!