Wednesday, December 8, 2010

மீண்டுமொரு மாற்றம்..

ஆகா!! கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம் என்று சந்தோஷப்படுவதா அல்லது ஆ!! இன்னும் இவ்வளவு வேலையிருக்கு என்று புலம்புவதா என்று தெரியவில்லை. வரும் ஞாயிறு (12/12) எங்கள் புது வீட்டில் புது மனை புகு விழா.




ஒரு வருடமாக கட்டிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் தற்பொழுது இருக்கும் வீட்டிருந்து 25 கி.மீ. ஆகையால் நானும் தீஷுவும் வாரயிறுதியில் மட்டும் சென்று பார்ப்போம். அப்பா ஆபிஸ் அருகில் இருப்பதால், நடுவில் சில தினங்கள் சென்று பார்ப்பார். வார வாரம் காலையிலேயே எழுந்து, சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்பினால் பெங்களூர் டிராப்பிக்கில் 50 கி.மீ. சென்று வர மத்தியம் 3 மணி ஆகிவிடும். நடுவில் தீஷுவின் பொழுதை போக்குவது அதை விட பெரிய சவால். ஒரு வருடமாக ஒவ்வொரு வாரயிறுதியும் எங்களுக்கு இவ்வாறே சென்றது.





கடந்த இரண்டு மாதங்களில் க்ருகப்பிரவேச வேலைகளும் சேர்ந்து விட்டன. பத்திரிகை அடிப்பது, விநியோகித்தது என வாரயிறுதியில் மீதமிருந்த ஒரு நாளும் புது வீட்டு வேலை. பத்திரிகை கொடுப்பது தான் இப்ப நம்ம ஆக்டிவிட்டீயா அம்மா என்று தீஷு கேட்கிறாள். க்ருகப்பிரவேச வேலைகள் கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்து விட்டன. ஆயினும் இன்னும் நிறைய வேலை இருப்பது போல் ஒரு பிரமை.







வீட்டில் இன்னும் வேலைகள் நிறைய இருக்கின்றன. முடிய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என நினைக்கிறேன்.அதன் பின் வீடு மாற்ற வேண்டும். தீஷுவிற்கு மீண்டும் ஒரு வீடு மற்றும் சூழ்நிலை மாற்றம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost