மழை எப்பொழுது பெய்தாலும் தீஷுவின் மழை பற்றிய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மழை எவ்வாறு பெய்கிறது என்பதை ஒரு சிறு பயிற்சியின் மூலம் செய்து காட்டலாம் என்று நினைத்தேன்.
மிகவும் சூடான நீரை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொண்டோம். பாட்டிலை மூடாமல் பாட்டிலின் மூடியை திருப்பி வைத்தேன். மூடியின் மேல் பகுதியில் ஐஸ் கட்டிகளை வைத்து விட்டோம். தண்ணீரிலிருந்து வரும் நீராவி மூடியின் அடி பகுதியை அடைந்தவுடன், மேலுள்ள ஐஸ் கட்டிகளால் குளிர்ந்து, மழை போல் மீண்டும் பாட்டியினுள் சொட்டத் தொடங்கும் என்று நினைத்தேன். சிறிது நேரத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை. தீஷுவிற்கு பொறுமை போய்விட்டது. ஒன்றும் புரியவும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் சொட்டத் தொடங்கியது.
தீஷு கேட்டாள், "இப்பத்தான் மழை ஆரம்பிச்சு இருக்கா அம்மா, இனிமேல் தான் சோ னு பெய்யுமா?" இரண்டு சொட்டு சொட்டுனதே பெரிய விஷயம், இதில் எங்கிருந்து சோ னு பெய்ய?
:-)) haha...kalakkal....
ReplyDeletePlease be careful. Also check this won't explode.
ReplyDelete