Monday, October 4, 2010

ச‌மைய‌ல் அறையிலிருந்து



தீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். காரெட், துருவி, ஒரு கிண்ண‌ம் முத‌லியன‌ கொடுத்தேன். அவ‌ளாக‌வே செய்ய‌த் தொட‌ங்கினாள். அழுத்தி செய்ய‌த் தெரிய‌வில்லை. ஆனால் ஆர்வ‌மாக‌ செய்தாள். பாதி காரெட் ம‌ட்டுமே செய்ய‌ முடிந்த‌து. துருவிய‌ காரெட் கொண்டு காரெட் சாத‌ம் செய்து கொடுத்தோம்.





தீஷு ஒரு நாள் காலை ஆறு ம‌ணிக்கே எழுந்து விட்டாள். நான் ச‌மைக்கும் பொழுது அவ‌ளுக்கு இந்த‌ செய‌ல் முறை கொடுத்தேன். எண்ணெய் வ‌டிக்க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌டும் க‌ரெண்டியையும் ஷு லேஷும் எடுத்துக் கொண்டேன். ஷுவில் லேஷ் க‌ட்டுவ‌து போல் செய்ய‌ வேண்டும். முதலில் மேல் புற‌மாக‌ நூலை இழுத்து, பின் கீழை விட‌ வேண்டும், மீண்டும் மேல் எடுத்து வ‌ர‌ வேண்டும். வ‌ரிசையாக‌ அனைத்து ஓட்டைக‌ளையும் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ செய்ய‌ வேண்டும் என்று நினைக்க‌ வில்லை. ஆனால் தீஷுவே வ‌ரிசையாக‌ செய்தாள். என் உத‌வி மிகுதியாக‌ தேவைப்ப‌ட்ட‌து. நூலை மேலிருந்து கீழ் கொடுக்க‌ வேண்டுமா அல்ல‌து கீழிருந்து மேல் கொடுக்க‌ வேண்டுமா என்று அவ‌ளுக்கு ஒவ்வொரு முறையும் ச‌ந்தேக‌ம். காலை வேளையில்லாம‌ல் ம‌ற்றொரு பொழுதில் செய்திருந்தால் இன்னும் அதிக‌ நேர‌ம் செய்திருப்பாள் என்று நினைக்கிறேன். இது கை க‌ண் ஒருங்கிணைப்புக்கு ஏற்ற‌து.

5 comments:

  1. சல்லிக்கரண்டி கிராஃப்ட் ரொம்ப அழகா இருக்கு. தீஷூ ரொம்ப பொறுமையா செஞ்சுருக்காங்க..:-)


    ஆமா, இந்த கேரட் க்ரேட்டிங், சப்பாத்தி (aka பூரிக்கு) மேக்கிங் - இங்கேயும் பப்பு டிபார்ட்மெண்ட் ஆகிடுச்சு...

    ReplyDelete
  2. தீஷு அழகாகச் செய்து முடித்திருக்கிறார். அம்மாவின் பொறுமைக்கு வாழ்த்துகள். எங்கள் பேத்திக்கு இதைப் பற்றிச் சொல்கிறேன். அவளுக்கும் நான்கு வயதுக்கான ஆக்டிவிட்டீஸ் நன்மை செய்யும் என்று தோன்றுகிறது. ரொம்ப நன்றி தீஷு அம்மா.

    ReplyDelete
  3. என்னோட பாப்பா பேரு ஸ்ரீ நேத்ரா . 3 வாசு 3 மாசம் ஆச்சு. நாங்க shoe lace , ஜல்லி கரண்டி விளையாட்டு விளையாடினோம். அவ கண்ணா பின்னான்னு ஓட்டைல விட்டு எடுத்துட்டு "அம்மா நல்ல இருக்குல்ல கை தட்டுங்கன்னு " சொன்னா. நல்ல timepass . நன்றி பொற்கொடி.

    ReplyDelete
  4. என்னோட பாப்பா பேரு ஸ்ரீ நேத்ரா . 3 வாசு 3 மாசம் ஆச்சு. நாங்க shoe lace , ஜல்லி கரண்டி விளையாட்டு விளையாடினோம். அவ கண்ணா பின்னான்னு ஓட்டைல விட்டு எடுத்துட்டு "அம்மா நல்ல இருக்குல்ல கை தட்டுங்கன்னு " சொன்னா. நல்ல timepass . நன்றி பொற்கொடி.

    ReplyDelete
  5. அன்பின் தீஷு - அருமையான கலை - அம்மா சொல்வதை உள் வாங்கி இச்சிறு வயதில் நேர்த்தியாக சல்லிக் கரண்டியில் வண்ணக் கயிற்றினை இணைத்து அழகான கண்ண்க கவரும் வண்ணம் செய்தமை நன்று - அம்மவிற்கும் உனக்கும் நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost